OTT Watch: ஹார்ட்பீட் சீசன் 2 வந்தாச்சு… என்னென்ன மாற்றம்… முதல் வார விமர்சனம்!
OTT Watch: விஜய் டிவியின் பிரபல வெப் தொடரான ஹார்ட் பீட் சீசன் 2 வெளியாகி இருக்கிறது. முதல் வார விபரங்கள் குறித்த விமர்சனத்தின் தொகுப்புகள்.
முதல் சீசன் முடிவில் முதன்மை மருத்துவ ரதியின் முறையற்ற மகள்தான் ரீனா என்ற உண்மையை சிஇஓ மீட்டிங்கில் உடைத்து விடுகிறார் அர்ஜுன். இது ரீனா மற்றும் ரதி என இருவருக்குமே மிகப்பெரிய பிரச்சனையை உருவாக்கி அவர்களுடைய சாதாரண உறவில் கூட விரிசல் விடுகிறது.
அதில் ரீனா முதலில் ஊரை விட்டு கிளம்ப பார்க்க பின்னர் தப்பு செய்தது நீங்க ரெண்டு பேரும் தான் நான் ஏன் போகணும் என அர்ஜுன் மற்றும் ரதியிடம் சொல்லிவிட்டு அங்கேயே இருப்பதாக முடிவு செய்வதோடு முதல் பாகம் முடிந்தது.
தற்போது இரண்டாவது சீசனில் ரீனாவிற்கு ப்ரோமோஷன் கிடைத்து விடுகிறது. குணாவும் டாக்டராகி விட ராக்கி மற்றும் நவீன் இன்னமும் அங்கையே இண்டர்னாக வேலை செய்கின்றனர். தன்னுடைய வேலையை ராஜினாமா செய்து விட்டு வீட்டில் இருக்கிறார் ரதி.
அவருடைய கணவர் ரதியை விட்டு விலக முடிவு செய்ய பிள்ளைகள் தங்களை விட்டு சென்றுவிட கூடாது என கெஞ்சியதை அடுத்து ஒரே வீட்டில் இருவரும் தனியாக இருக்கின்றனர். ரதியின் இடத்தில் டாக்டர் ப்ரீத்தம் என்பவரை முதன்மை மருத்துவராக அர்ஜுன் அமர்த்தி இருக்கிறார்.
தற்போது கிரண், நிலோவர், கமல கண்ணன் என்பவர்கள் மூன்று புதிய இன்டன்கள் உள்ளே வந்திருக்கின்றனர். இதில் கிரண் வரும் போதே கத்திக்குத்துடன் வருகிறார். ஆரம்பத்திலே அவருக்கும் ரீனாவிற்கும் முட்டிக்கொள்கிறது.
கிரண் ரீனாவிடம் ஜொள்ளு விடுகிறார். ஹாஸ்பிட்டலுக்கு முதல் கேஸாக ஷேர் வைத்திருப்பவரின் மனைவி உடல்நலமில்லாமல் வருகிறார். அவர் ரதியை வரக்கூற அர்ஜூன் பிரீத்தம் இதை பார்த்துப்பார் என்கிறார். டாக்டர் ரவி வெளிநாடு சென்றுவிட அனிதா மற்றும் குணா இருவரும் காதலித்து வருகின்றனர்.
ஆர் கே ஹாஸ்பிடல் உண்மையை வெளியில் கசிய விட்டதற்காக தேஜு வெளியேற்றப்பட்டு இருக்கிறார். அவர் தற்போது சின்ன கிளீனிக்கில் வேலை செய்து வருகிறார். தன்னுடைய அண்ணன் பணக்கஷ்டத்தில் இருப்பதால் அவருக்கு நவீன் உதவி செய்து கொண்டிருக்கிறார்.
ரதி ஹாஸ்பிடல் செல்லாமல் இருக்க அவருக்கு நர்ஸ், அனிதா கால் செய்து வர கேட்க அவர் மறுத்துவிடுகிறார். பீரித்தம் நோயாளிகளை ஏமாத்த சொல்கிறார். அதை செய்ய சொன்னது அர்ஜூன் தான் எனவும் பேசுகிறார். ரதி மகளுடன் ஸ்கூல், ஸ்விமிங் கிளாஸ்களுக்கு செல்ல அவர்கள் இவரை புதிதாக பார்க்கின்றனர்.
ஸ்விமிங்கில் இருக்கும் போது ஒரு வயதானவர் மூச்சுத்திணற அவரை காப்பாற்றும் ரதி சரியாக தேஜூ கிளினிக்கில் சேர்க்கிறார். அங்கு இருவருக்கும் முட்டிக்கொள்கிறது. குடிக்கு மீண்டும் அடிமையாகி விடுகிறார் அர்ஜூன்.
ரீனாவிடம் தொடர்ந்து பேச முயற்சி செய்து கொண்டிருக்கிறார் அர்ஜுன். கிரண் ரீனாவை பிடித்து இருப்பதாக பேச அர்ஜூன் ரீனாவின் ஆள் என்பதை ராக்கி சொல்கிறார். கிரண் ஆள் இருப்பது தெரியாமல் ஓவராக பேசியதாக ரீனாவிடம் சொல்ல அவர் அர்ஜூன் தான் செய்து இருப்பான் என அவரை சத்தம் போடுகிறார்.
பின்னர் ராக்கி தான் என கிரண் சொல்ல அவரை திட்டிவிட்டு செல்கிறார் ரீனா. இனிமேல் ரதி மற்றும் தேஜூ எப்படி ஹாஸ்பிட்டல் உள்ளே வரப்போகின்றனர். பீரித்தமின் திருட்டுத்தனம் உடைய போகிறதா? ரீனா மற்றும் அர்ஜூன் காதல் என்ன ஆகும் என்பது அடுத்தடுத்த எபிசோட்களில் உடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.