கோடி கோடியா இறக்கும் நெட்ஃபிளிக்ஸ்!.. ஒரே வாரத்தில் 3 பெரிய ஸ்டார் படங்களா?.. பக்கா மாஸ்!..
இந்த வாரம் மூன்று பான் இந்தியா படங்களும் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.;
சூர்யாவின் ரெட்ரோ, சல்மான் கானின் சிக்கந்தர் மற்றும் நானியின் ’ஹிட் 3’ என இந்த வாரத்தில் மொத்தம் மூன்று முன்னணி நடிகர்களின் படங்களும் நெட்ஃபிளிக்ஸ் ஒடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தவுள்ளது.
நடிகர் சூர்யாவின் 44வது திரைப்படமான ரெட்ரோ கடந்த மே 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களுடன் வெற்றி பெற்றது. 2டி என்டெர்டைன்மெண்ட் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகிய ரெட்ரோ படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். மேலும், இப்படத்தில் பூஜா ஹெக்டே, ஜெயராம், கருணாகரன், நாசர், பிரகாஷ் ராஜ், ஜார்ஜ் மரியன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ரூ. 65 கோடியில் உருவாக்கப்பட்ட இப்படம் 235 கோடி வரை லாபத்தை அள்ளியதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. இந்நிலையில் இப்படம் வருகின்ற மே31ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஒடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
வால் போஸ்டர் சினிமாஸ் தயாரிப்பில் சாய்லீஷ் கொலனு இயக்கத்தில் நானி நடிப்பில் உருவான ஹிட் 3 படம் கடந்த மே 1ம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி, சூர்யா ஸ்ரீனிவாஸ், ராவ் ரமேஷ், நெப்போலியன், கார்த்தி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மேலும், இப்படம் வருகின்ற மே 29ம் தேதி நெட்ஃபிளிக்ஸில் வெளியாக உள்ளது.
சல்மான் கான் தயாரித்து நடித்த சிக்கந்தர் படம் மார்ச் 30ம் தேதி ரீலிஸாகி கலவையான விமர்சனங்களை பெற்று வணிக ரீதியாக தோல்வியை தழுவியது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, சத்தியராஜ், காஜல் அகர்வால், ஷர்மன் ஜோஷி, கிஷோர் போன்ற பலரும் நடித்துள்ளனர். மேலும், சிக்ந்தர் மே 25ம் தேதி நெட்ஃபிளிக்ஸில் வெளியாகியுள்ளது.
இந்த வாரம் மூன்று பான் இந்தியா படங்களும் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது. அமேசான், ஜியோ ஹாட்ஸ்டார் உள்ளிட்ட ஓடிடி தளங்களில் பெரிய படங்கள் வெளியாகவில்லை.