கமலை முந்திக்கொண்ட சசிகுமார்!.. 75 கோடி வசூல் செய்த டூரிஸ்ட் ஃபேமிலி ஓடிடி ரிலீஸ் எப்போ தெரியுமா?
டூரிஸ்ட் ஃபேமிலி படம் வரும் ஜூன் 6ம் தேதி ஹாட் ஸ்டார் ஒடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.;
டூரிஸ்ட் ஃபேமிலி ஒரு நகைச்சுவை மற்றும் உணர்வுகள் நிறைந்த குடும்பப் படமாக, விமர்சன மற்றும் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. குடும்பத்துடன் பார்க்க ஏற்ற படமாக ரசிகர்களின் மனதை தொட்டுள்ளது. மே 1ம் தெதி வெளியாகி இன்னமும் 4வது வாரத்திலும் திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருவதால் ஓடிடி ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் அபிசன் ஜீவிந்த் எழுதி இயக்கியுள்ள டுரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. இப்படத்தில் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு, எம்.எஸ். பாஸ்கர், ரமேஷ் திலக், பகவதி பெருமாள், இளங்கோ குமரவேல், ஸ்ரீஜா ரவி, மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ் ஜெகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும், ஷான் ரோல்டன் இசையமைத்து அசத்தியிருந்தார்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக, சசிகுமார் தனது மனைவி சிம்ரன் மற்றும் மகன்களுடன் சட்டவிரோதமாக கடல் வழியாக தமிழ்நாட்டின் ராமேஸ்வரத்திற்கு வருகிறார். அங்கு அவர்கள் காவல்துறையிடம் சிக்கினாலும், ஒருவிதமாக தப்பித்து, சென்னையில் சிம்ரனின் அண்ணன் யோகி பாபு உதவியுடன் வாடகை வீட்டில் தங்குகின்றனர்.
கேரளாவைச் சேர்ந்தவர்கள் என பொய் சொல்லி அக்கம்பக்கத்தினரிடம் பழகிக்கொள்கின்றனர். ஆனால், ராமேஸ்வரத்தில் நடந்த குண்டுவெடிப்புக்கு அவர்கள் தான் காரணம் என காவல்துறை சந்தேகிக்க, உண்மை வெளிப்படுகிறது. கதையின் முடிவில் அவர்களின் வாழ்க்கைப் போராட்டத்தையும், மனிதநேயத்தையும் மையப்படுத்துகிறது.
குட் நைட், லவ்வர் போன்ற வெற்றி படங்களைத் தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸின் மற்றொரு வெற்றியாக அமைந்ததுள்ளது. மேலும், தனது முதல் படத்திலேயே அற்புதமான கதை மற்றும் நகைச்சுவையை வழங்கிய இயக்குநர் அபிசன் ஜிவிந்தை ரஜினிகாந்த், ராஜமெளலி என பலரும் பாராட்டி வருகின்றனர். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் 75கோடி வரை வசுலை அள்ளியுள்ளது.
இந்நிலையில் டூரிஸ்ட் ஃபேமிலி படம் வரும் ஜூன் 6ம் தேதி ஹாட் ஸ்டார் ஒடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பொதுவாக 4 வாரங்களில் புதிய படங்கள் ஓடிடியில் வெளியாகி வரும் சூழலில் 5வது வாரத்தில் தான் இந்த படம் ஓடிடியில் வரும் என தெரிகிறது. இப்படத்தை ஒடிடியில் காணவும் ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.