Pandian Stores2: வீட்டை விட்டு வெளியேறிய பாண்டியன்… புலம்பும் கோமதி.. இதே கதைய ஓட்டாதீங்கப்பா!

By :  AKHILAN
Published On 2025-07-12 09:12 IST   |   Updated On 2025-07-12 09:12:00 IST

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.

செந்தில் இவர் நல்ல அப்பா கிடையாது எனக் கூற கோமதி அவரை அறைந்து விடுகிறார். நீ அடிச்சாலும் அவர் நல்ல அப்பா கிடையாது. செஞ்சேன் செஞ்சேனு எங்கள கஷ்டம் மட்டும் தான் படுத்தி இருக்காரு. அரசி கல்யாணம் வரை தப்பாதான் முடிவு எடுத்து இருக்காரு. இவர் நல்ல அப்பாவே இல்லை என்கிறார்.

பாண்டியன் தலை குனிந்து சென்று விடுகிறார். கோமதி என்ன பேச்சு பேசுற நீ. மனசாட்சியோட பேசுறீயா எனக் கேட்டு செந்திலை மீண்டும் அடிக்க கதிர் மற்றும் சரவணன் தடுக்கின்றனர். கோமதி, அவரை நிம்மதியாவே இருக்க விடமாட்டீங்களா என அழுது கலங்கி விடுகிறார்.

கோயிலில் கலங்கி உட்கார்ந்து இருக்கிறார் பாண்டியன். செந்தில் சொன்னதை நினைச்சு நான் நல்ல அப்பா இல்லனா இந்த உலகத்தில் யாருமே நல்ல அப்பா இல்ல. நான் செய்யாம தான் இவன் இவ்வளோ வளர்ந்தானா என புலம்பி கொண்டு இருக்கிறார்.

வீட்டில் எல்லாரும் வருத்தமாக அமர்ந்து இருக்க கோமதி எதுக்கு எல்லாரும் உட்கார்ந்து இருக்கீங்க. அவர் கண்டிப்பா வீட்டுக்கு வருவாரு. இன்னும் அசிங்கப்படுத்தலாம்னு உட்கார்ந்து இருக்கீங்களா? போய் படுங்க எல்லாரும் என்கிறார். 

 

சரவணன் பேச வர அவரிடமும் கடுப்படிக்கிறார் கோமதி. பாண்டியனை நினைத்து புலம்பி கொண்டு இருக்கிறார். எல்லாரும் அமைதிப்படுத்த முயல அவர்களையும் திட்டுகிறார். மயில் உங்களுக்கு எதுவும் ஆகிடும் எனக் கேட்க ஆகட்டும் என்கிறார்.

மீனா வந்து பேச போக அவரை திட்டுகிறார் கோமதி. நீ பேசாத எனக் கூற நான் பேசலை. ஆனா நீங்களும் பேசாம இருங்க என்கிறார். ஏன் பேசுனா புல்டோசர் விட்டு இடிக்க போறீயா எனக் கேட்க மீனா கோமதியை சமாதானம் செய்ய பார்க்க ஒரு கட்டத்தில் மீனாவை பிடித்து தள்ளிவிடுகிறார்.

ராஜி என்ன அத்தை என பேசப்போக அவரிடமும் கோமதி சத்தம் போடுகிறார். அந்த நேரத்தில் பாண்டியன் குடித்துவிட்டு வர சரவணன் அவரை அழைத்து கொண்டு வீட்டிற்குள் அழைத்து வருகிறார். ஹாலில் பாண்டியனை உட்கார வைக்க அவர் நான் பட்ட கஷ்டத்தை நீங்க பார்க்கலை. அதான் இப்படி பேசுறீங்க என்கிறார்.

நான் பட்ட கஷ்டம் இன்னொருத்தன் பட்டு இருந்தா என்னைக்கோ போய் சேர்ந்து இருப்பான். உங்களை நான் வளர்த்த மாதிரி என்னை வளர்க்க யாருமே இல்லை. இருக்க இடம் கூட கிடையாது. சாப்டீயானு கேட்க கூட ஆள் இல்லை. எனக்குனு யாராச்சும் இருக்க மாட்டாங்களானு எண்ணம் இருந்துச்சு. 

 

அவர் தன்னுடைய மொத்த கஷ்டத்தையும் சொல்லி புலம்புகிறார். கோமதி அழுக நீ ஏன் அழுகுற. அவன் உன்னையா சொன்னான். என்ன தானே சொன்னான் என்கிறார். மீண்டும் கோமதி புலம்பிக்கொண்டே இருக்கிறார். செந்தில் வர அவரை கதிர் தடுத்து விடுகிறார்.

அப்பாக்கிட்ட பேச போறீயா? வேற வினையே வேண்டாம். நான் பேசிக்கிறேன். நீ ரூமுக்கு போ என அனுப்பி வைக்கிறார். நான் கொடுத்து இருக்க மாட்டேனு சொல்றது கூட உண்மைதான். நான் அவன் முன்னேறக்கூடாதுனோ? கஞ்சத்தனமோ இல்ல என்கிறார்.

அவன் உழைச்சு முன்னேறனு என்ற எண்ணம்தான் என்கிறார். சரவணன், தம்பி கோபத்தில் பேசுறான். உங்களை பத்தி எங்களுக்கு தெரியும். நீங்க நல்ல அப்பா என்கிறார். நீயாச்சும் புரிஞ்சி வச்சு இருக்கீயே என்கிறார். பழனி நீங்க செந்திலை புள்ளையானு கேட்ட மாதிரி இதை நினைச்சிக்கோங்க என்கிறார். பாண்டியனை சமாதானம் செய்து ரூமுக்கு அழைத்து செல்கின்றனர்.

Tags:    

Similar News