OTT: ஓடிடியில் இந்த வாரம் வெளியாக இருக்கும் படம் மற்றும் வெப்சீரிஸ் அப்டேட்… மிஸ் பண்ணாதீங்க!...
OTT: தமிழ் ரசிகர்களுக்கு வாரா வாரம் வெளியாகும் ஓடிடி அப்டேட் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதன் இந்த வார தொகுப்புகள்.
கருப்பையா முருகன் இயக்கத்தில் பிரேம்ஜி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் வல்லமை. திரைப்படம் திரையரங்குகளில் பெரிய அளவு வரவேற்பை பெறாத நிலையில் தற்போது ஓடிடி பக்கம் தலை காட்டி இருக்கிறது.
ஹீரோவாக பிரேம்ஜி வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இப்படம் ஆஹா தமிழ் ஓடிடியில் ரிலீஸாகி இருக்கிறது. குரு சோமசுந்தரம் நடிப்பில் உருவாகி இருக்கும் சைக்லாஜிக்கல் கிரைம் திரில்லர் திரைப்படம் யாமறியா பிரம்மை.
கடந்தாண்டு வெளியான இப்படம் அமேசான் ஓடிடியில் வெளியாகி இருக்கிறது. மருத்துவத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு கடந்தாண்டு வெளியான வெப் சீரிஸ் ஹார்ட் பீட். ஒவ்வொரு வாரமும் நான்கு எபிசோடுகள் ஒளிபரப்பாகி வந்தது.
100 எபிசோடுகளை தாண்டிய இந்த வெப் சீரிஸ் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தற்போது இதன் இரண்டாவது சீசன் வெளியாகி இருக்கிறது. ஹாட்ஸ்டாரில் வரும் இந்த வெப்சிரீஸ் இனிமேல் வாரா வாரம் நல்ல டைம்பாஸாக இருக்கும் .
மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த் நடிப்பில் வித்தியாசமான வில்லன் என வெளியான திரைப்படம் சுமோ. படம் திரையரங்கில் பெரிய தோல்வியை தழுவ தற்போது டெண்ட் கொட்டா ஓடிடிக்கு வந்து இருக்கிறது.
திலீப் போத்தான் மற்றும் தேவதர்ஷினி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் அம் ஆ. இன்வெஸ்டிகேட்டிவ் ஜானரான மலையாள மண்ணின் ஆதிக்கத்தினை இந்த படம் மீண்டும் நிரூபித்து விட்டது. இப்படம் தற்போது சன் நெக்ஸ்ட் ஓடிடியில் வெளியாகி இருக்கிறது.
ஓய்வு பெற்ற ஐபிஎஸ் விஜயசாந்தியின் மகன் கேங்ஸ்டாராக இருக்கும் திரைப்படம் தான் அர்ஜூன் சன் ஆஃப் வைஜெயந்தி. லாஜிக் இல்லாமல் ஒரு அதிரடி ஆக்ஷன் படம் பார்க்கணும் என்றால் ஆஹா ஓடிடியில் வெளியாகி இருக்கிறது.
நடுக்கமும், மிரட்டலுமான ஒரு பேய் படம் பார்க்க வேண்டும் என்றால் இந்த வாரம் அமேசான் பிரைம் ஓடிடிக்கு வந்து இருக்கும் பவானி வார்ட் 1997 படத்தினை பார்க்கலாம். இன்னும் சில ஆங்கில வெப் சீரிஸ்களும் நெட்பிளிக்ஸில் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.