சக்சஸ் மீட்க்கு பதில் இப்படி பேரு வைங்க… ஒரு வார்த்தைல ஒட்டுமொத்த மீட்டையும் கலாய்த்த பயில்வான்…
Leo Success Meet: நடிகர் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம்தான் லியோ. இப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனாகராஜ் இயக்கியிருந்தார். இப்படத்தினை தயாரிப்பாளர் லலித்குமார் தயாரித்திருந்தார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை திரிஷா நடித்திருந்தார். மேலும் இப்படத்தில் கெளதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், அர்ஜூன் போன்ற பல முன்னணி நடிகர்களும் நடித்திருந்தனர். இப்படம் வெளியாவதற்கு முன்னரே பல வித எதிர்பார்ப்புகளை ரசிகர்களிடையே ஏற்படுத்தியது. மேலும் பலவித சர்ச்சைகளையும் கிளப்பியது. ஆனால் இவை அனைத்தையும் தாண்டி இப்படம் வெளிவந்தது. […]
Leo Success Meet: நடிகர் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம்தான் லியோ. இப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனாகராஜ் இயக்கியிருந்தார். இப்படத்தினை தயாரிப்பாளர் லலித்குமார் தயாரித்திருந்தார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை திரிஷா நடித்திருந்தார். மேலும் இப்படத்தில் கெளதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், அர்ஜூன் போன்ற பல முன்னணி நடிகர்களும் நடித்திருந்தனர்.
இப்படம் வெளியாவதற்கு முன்னரே பல வித எதிர்பார்ப்புகளை ரசிகர்களிடையே ஏற்படுத்தியது. மேலும் பலவித சர்ச்சைகளையும் கிளப்பியது. ஆனால் இவை அனைத்தையும் தாண்டி இப்படம் வெளிவந்தது. ஆனால் வெளிவந்த பின் இப்படத்தின் கதை அந்த அளவு நன்றாக இல்லை என படத்தினை பார்த்தவர்கள் கருத்தினை தெரிவித்தனர்.
இதையும் வாசிங்க:‘தங்கலான்’ படத்தின் சுவாரஸ்யமான அப்டேட்டை லீக் செய்த விக்ரம்! சோன முத்தா போச்சா?
மேலும் இப்படத்தின் பாதியில் விஜய்க்கும் லோகேஷுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் படத்தின் இரண்டாம் பாதியை இயக்குனர் ரத்தினகுமார்தான் இயக்கினார் எனவும் பலவித கருத்துகள் உலாவின. ஆனால் இவை அனைத்தும் எந்த அளவிற்கு உண்மை என்பதும் தெரியவில்லை. மேலும் இப்படம் வெளியாவதற்கு முன் இப்படத்திற்கான இசை வெளியீட்டு விழா நடத்துவதில் பலவித சிக்கல்கள் ஏற்பட்டன.
இதனால் அந்நிகழ்ச்சி நடைபெறாமல் போய்விட்டது. ஆனால் நேற்று இப்படத்தின் வெற்றிவிழா நடைபெற்றது. வெற்றி விழா நடத்துவதற்கு முதலில் படம் வெற்றி பெற்றிருக்க வேண்டும் என நெட்டிசன்கள் பலர் கலாய்த்து வந்தனர். ஏற்கனவே சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு விஜய் ஆசை படுகிறார் என பலவித சர்ச்சைகள் உலாவின. ஆனால் அவை அனைத்துக்கும் விஜய் இந்த விழாவில் முற்றுபுள்ளி வைத்துவிட்டார். கேப்டன் என்றால் அது ஒருவர்தான், உலகநாயகன் ஒருவர்தான் அதைபோல் சூப்பர் ஸ்டார் என்றாலும் அது ஒருவர்தான் என கூறி இந்த சர்ச்சைக்கு இவர் முற்று புள்ளி வைத்துவிட்டார்.
இதையும் வாசிங்க:6 மாதம் என்னை அட்ஜஸ்ட் பண்ண சொன்ன இயக்குனர்..! பாண்டியன் ஸ்டோர்ஸ் லாவண்யா செய்த ட்விஸ்ட்..!
மேலும் வழக்கம்போல் தனது குட்டி ஸ்டோரியையும் இவர் இதில் கூறினார். அப்பாவின் சட்டையை ஆசையாக மகன் எடுத்து போடுவார்.. அது தனக்கு பொறுந்தவில்லை என்றாலும் அதனை ஆசையாய் போடுவார்… என கூறியிருந்தார். இதில் விஜய் அப்பாவாக ரஜினியை நினைத்துதான் கூறியிருந்தார் என பல கருத்துகள் நடமாடுகின்றன. ஆனால் இவரின் இந்நிகழ்ச்சியை பிரபல யூடியூபரும், திரைப்பட விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் கலாய்த்திருக்கிறார்.
லியோ வெற்றி விழா என சொல்லுவதற்கு பதில் leo thanks giving meet என்றுதான் கூறவேண்டும். மேலும் சக்சஸ் மீட் என்று சொல்லுவதற்கு தேவையான அடிப்படை காரணங்கள் இப்படத்தில் இல்லை எனவும், இப்படத்தினால் திரையரங்க உரிமையாளார்களுக்கு நஷ்டம்தான் ஏற்பட்டுள்ளது எனவும் தனது கருத்தினை பதிவிட்டுள்ளார். மேலும் விஜய் தனது அரசியல் கருத்தினை தெரிவிக்க இந்த மேடையை உபயோகித்துள்ளார் எனவும் தனது கருத்தினை பதிவிட்டுள்ளார்.
இதையும் வாசிங்க:நான் சொன்ன குட்டிக்கதைய ஜெராக்ஸ் எடுத்து பேசிட்டார்!.. விஜயை பங்கம் பண்ணிய பிரபலம்…