20 வருஷ கனவு!.. ‘பிரின்ஸ்’ படத்தின் மூலம் நிஜமாக்கிய சிவகார்த்திகேயன்!...
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன்.விஜய், அஜித் இவர்களுக்கு பிறகு ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கொண்ட நடிகராகவும் வலம் வருகிறார். தற்போது பிரின்ஸ் படத்தின் புரோமோஷன் வேலைகளில் பிஸியாக இருக்கிறார் சிவகார்த்திகேயன். தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் தயாராகும் இந்த படத்தில் உக்ரைன் நடிகை மரியா கதாநாயகியாக நடிக்கிறார். சத்யராஜ், சூரி போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படம் வருகிற தீபாவளி அன்று திரையரங்குகளில் ரிலீஸாகின்றது. இதையும் படிங்க : ரஜினிக்கு […]
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன்.விஜய், அஜித் இவர்களுக்கு பிறகு ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கொண்ட நடிகராகவும் வலம் வருகிறார். தற்போது பிரின்ஸ் படத்தின் புரோமோஷன் வேலைகளில் பிஸியாக இருக்கிறார் சிவகார்த்திகேயன்.
தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் தயாராகும் இந்த படத்தில் உக்ரைன் நடிகை மரியா கதாநாயகியாக நடிக்கிறார். சத்யராஜ், சூரி போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படம் வருகிற தீபாவளி அன்று திரையரங்குகளில் ரிலீஸாகின்றது.
இதையும் படிங்க : ரஜினிக்கு வில்லனா? முடியவே முடியாது…என மறுத்த நடிகர் இவரா? அரசியல் வாழக்கைக்கு அடித்தளமான சம்பவம்…
மேலும் இந்த படத்தை அடுத்து மாவீரன் என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் இந்த படத்தை பற்றி பத்திரிக்கையாளர் பேட்டியில் இன்று பேசிய சிவகார்த்திகேயன் என் வாழ்நாளில் தீபாவளி அன்று ரிலீஸாகின்ற முதல் படம் என்ற பெருமையை இந்த பிரின்ஸ் படம் பெற்றிருக்கின்றது.
கடந்த 20 வருடங்களாக மற்ற நடிகர்கள் நடித்த திரைப்படங்களை தீபாவளி அன்று பார்த்து ரசித்த நான் இன்றைக்கு என் படம் ஒரு பண்டிகை படமாக வரப்போகின்றது என நினைக்கும் போது எல்லையில்லா மகிழ்ச்சியை அளிக்கின்றது என்று கூறினார் சிவகார்த்திகேயன்.