என்னால விஜய்கிட்ட போய் பிச்சைலாம் எடுக்க முடியாது!... கொந்தளிக்கும் பிரபல தயாரிப்பாளர்…

Producer Manickam Narayanan: ஒரு படத்திற்கு கதை என்பது முக்கியம்தான். ஆனால் அந்த கதை வெற்றிப் பெறுவதற்கு தயாரிப்பாளரும் முக்கியம். தயாரிப்பாளர்தான் ஒரு கதைக்கு தேவையான அனைத்தையும் பணம் மூலமாக சரி செய்கிறார். மேலும் படம் இயக்கியபின் அதனை விநியோகஸ்தரர்களிடம் கொண்டு செல்வதும் தயாரிப்பாளர்களின் வேலைதான். அப்படிபட்ட தயாரிப்பாளர்களில் ஒருவர்தான் மாணிக்கம் நாராயணன். இவர் தமிழில் குறிப்பிட்ட அளவு படங்களையே தயாரித்துள்ளார். இவர் தமிழில் புதிய தென்றல் திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராய் அறிமுகமானார். பின் விஜய், கமல் […]

Update: 2023-11-14 20:00 GMT

Producer Manickam Narayanan: ஒரு படத்திற்கு கதை என்பது முக்கியம்தான். ஆனால் அந்த கதை வெற்றிப் பெறுவதற்கு தயாரிப்பாளரும் முக்கியம். தயாரிப்பாளர்தான் ஒரு கதைக்கு தேவையான அனைத்தையும் பணம் மூலமாக சரி செய்கிறார். மேலும் படம் இயக்கியபின் அதனை விநியோகஸ்தரர்களிடம் கொண்டு செல்வதும் தயாரிப்பாளர்களின் வேலைதான்.

அப்படிபட்ட தயாரிப்பாளர்களில் ஒருவர்தான் மாணிக்கம் நாராயணன். இவர் தமிழில் குறிப்பிட்ட அளவு படங்களையே தயாரித்துள்ளார். இவர் தமிழில் புதிய தென்றல் திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராய் அறிமுகமானார். பின் விஜய், கமல் என பல முன்னணி நடிகர்கள் நடித்த பல திரைப்படங்களை தயாரித்துள்ளார்.

இதையும் வாசிங்க:ஓடும் ரயிலில் பசியில் வாடிய நடிகர்கள்.. களத்தில் இறங்கி சம்பவம் செய்த விஜயகாந்த்!..

கமல் நடிப்பில் வெளியான வேட்டையாடு விளையாடு திரைப்படத்தினை தயாரித்தவர் இவர்தான். இத்திரைப்படத்தின் மூலம் இவர் பல பிரச்சினைகளையும் சந்தித்துள்ளார். இதனை சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றிலும் தெரிவித்திருந்தார்.

மேலும் அஜித்துடனும் இவருக்கு சற்று மனவருத்தம் ஏற்பட்டுள்ளது. அஜித்தின் தாய் தந்தை வெளிநாட்டிற்கு செல்வதற்கு இவர் பணம் கொடுத்ததாகவும் அப்பணத்தை அஜித் தான் பெரிய நடிகராக வந்ததும் அவருக்கு ஒரு படத்தில் நடித்து கடனை அடைத்து விடுவதாகவும் கூறி இன்று வரை அவர் நடித்து கொடுக்கவில்லை என புகார் கூறினார்.

இதையும் வாசிங்க:லவ் டுடே பிரதீப்புடன் நடிக்கும் ஆர்வக்கோளாறு நடிகர்!.. அவர் ஒரு மாதிரி!.. மண்ட பத்திரம் தம்பி!..

என்னதான் அஜித்தை பற்றி இவர் இப்படி கூறினாலும் விஜய் மீது இவர் வைத்திருக்கும் மரியாதை அதிகம். விஜய்யின் மான்புமிகு மாணவன் திரைப்படத்தை தயாரித்தவர் இவர்தான். இப்படத்திற்கு பின்னர் இவர் விஜய்யை வைத்து ஏன் படம் தயாரிக்கவில்லை என பேட்டியாளர் ஒருவர் கேட்டதற்கு இவரின் பதில் பயங்கரமாய் இருந்தது.

விஜய் போன்ற நடிகர்களிடம் கையில் பணம் வைத்து கொண்டுதான் பேச வேண்டும். என்னிடம் தற்போது அவ்வளவு பணம் இல்லை. ஒரு காலத்தில் நான் அவர் படத்தை தயாரித்தேன் என்பதற்காக தற்போது அவரிடம் போய் பிச்சை கேட்க முடியாது. நான் யாரிடமும் பிச்சை கேட்க மாட்டேன். எனக்கு அதற்கு எந்த அவசியமும் இல்லை. மேலும் விஜய் தன் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளார். அதை நான் கெடுக்க விரும்பவில்லை என சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிங்க:கழட்டிவிட்ட பெரிய ஹீரோக்கள்!.. லிங்குசாமியின் பையா 2-வில் யார் ஹீரோ தெரியுமா?…

Tags:    

Similar News