ஹீரோனா இப்படித்தான் இருக்கனும்!.. ராஜமௌலி பாராட்டிய அந்த கோலிவுட் நடிகர் இவர்தான்!..
பிரம்மாண்ட படைப்புகளுக்கு சொந்தக்காரர் இயக்குனர் ராஜமௌலி. இயக்கிய குறுகிய படத்திலேயே உலகளவில் சரித்திரத்தை படைத்து விட்டார் ராஜமௌலி. சமீபத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் படம் புகழின் உச்சிக்கே கொண்டு சென்று விட்டது. அதற்கு முன் வெளியான பாகுபாலி படத்தின் இரண்டு பாகங்களும் எல்லையில்லா வெற்றியை பெற்றுத்தந்தது. இதற்கு முன் சில படங்களை இயக்கியிருந்தாலும் ‘நான் ஈ’ படத்தின் மூலம் மிகவும் கவரப்பட்டார் ராஜமௌலி. தென்னிந்திய சினிமாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் இயக்குனர்களின் பட்டியலில் ராஜமௌலி தான் முதலிடத்தில் இருக்கிறார். […]
பிரம்மாண்ட படைப்புகளுக்கு சொந்தக்காரர் இயக்குனர் ராஜமௌலி. இயக்கிய குறுகிய படத்திலேயே உலகளவில் சரித்திரத்தை படைத்து விட்டார் ராஜமௌலி. சமீபத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் படம் புகழின் உச்சிக்கே கொண்டு சென்று விட்டது.
அதற்கு முன் வெளியான பாகுபாலி படத்தின் இரண்டு பாகங்களும் எல்லையில்லா வெற்றியை பெற்றுத்தந்தது. இதற்கு முன் சில படங்களை இயக்கியிருந்தாலும் ‘நான் ஈ’ படத்தின் மூலம் மிகவும் கவரப்பட்டார் ராஜமௌலி. தென்னிந்திய சினிமாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் இயக்குனர்களின் பட்டியலில் ராஜமௌலி தான் முதலிடத்தில் இருக்கிறார்.
இதையும் படிங்க : நாய்க்கு கூட மரியாதை கொடுக்கும்.. எனக்கு கொடுக்காது!.. ரஜினி சொன்ன நடிகை யார் தெரியுமா?…
இந்த நிலையில் ராஜமௌலி தமிழ் நடிகர்களை வைத்து ஏதாவது ஒரு படம் எடுக்கமாட்டாரா என்று அவர் படங்களுக்காக வரும் புரோமோஷனில் நிறைய கேள்விகள் இது தொடர்பாக எழுப்பப்பட்டது. கூடிய சீக்கிரம் தமிழிலும் படம் பண்ணுவேன் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் தான் நடிகர் அஜித்தை பற்றி தனது டிவிட்டரில் ராஜமௌலி அஜித்தை பாராட்டி சில வார்த்தைகளை பதிவிட்டிருக்கிறார். இந்த செய்திதான் இப்போது வைரலாகி வருகின்றது.
இதையும் படிங்க : இது உங்களுக்கே ஓவரா இல்ல?.. முத்து படத்தில் மீனாவுக்கு பதிலா?.. ட்ரோலுக்கு உள்ளான வாய்ப்பேச்சு நடிகை!..
ஹீரோ என்றாலே ஹேண்ட்சம், அழகான தோற்றம், எடுப்பான உடல் போன்ற போலியான கட்டமைப்புகளால் வர்ணிக்கப்பட்டிருந்தார்கள் அந்த காலத்தில். ஆனால் ஒரு ஹீரோ வெள்ளை முடியுடனும் நடிக்கலாம் என்ற ஒரு புதிய தோற்றத்தை முதலில் உருவாக்கியவர் அஜித் தான் என்று புகழ்ந்து கூறியிருக்கிறார்.
அஜித் சமீபகாலமாகவே வெள்ளை நிற முடியுடன் தான் நடித்துக் கொண்டு வருகிறார். அதையும் மக்கள் ஏற்றுக் கொண்டு அவரை ரசித்துக் கொண்டு தான் வருகின்றனர். இதை குறிப்பிட்டு தான் ராஜமௌலி அவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்.