பாலசந்தர் அறிமுகப்படுத்தினாலும் ஒரு ஸ்டாராக மாற்றிய இயக்குனர்! நன்றிக்கடனா ரஜினி செய்த செயல்

by Rohini |   ( Updated:2023-10-03 14:30:36  )
bala
X

bala

Rajini: தமிழ் சினிமாவில் ரஜினியின் வளர்ச்சியை ஒரு இமாலய வளர்ச்சியாகவே பார்க்கமுடிகின்றது. 70 வயதை கடந்தாலும் இன்னும் ரஜினிக்கு உண்டான அந்த மாஸ் குறைந்த பாடில்லை. பெங்களூரில் இருந்தவரை இங்கு கொண்டு வந்து தமிழக மக்கள் கொண்டாட வேண்டும் என்று கடவுள் எழுதிவைத்திருக்கிறாரோ என்னவோ.

ரஜினியே எதிர்பார்க்காத ஒரு வரவேற்பை மக்கள் இன்றளவும் கொடுத்து வருகின்றனர். சினிமாவில் பாலசந்தரால் அறிமுகமானாலும் இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் தான் ரஜினிக்கு பல நல்ல படங்களை கொடுத்து மக்களிடம் இந்தளவுக்கு கொண்டு போய் சேர்த்திருக்கிறார்.

இதையும் படிங்க: ‘ரத்தம்’ திரைப்படம் அந்த மாதிரி கதையா?.. வேற லெவலில் மிரட்ட வரும் விஜய் ஆண்டனி

ரஜினிக்கான அந்த ஒரு மாஸை உருவாக்கிக் கொடுத்தது முத்துராமன் தான். ரஜினியை வைத்து கிட்டத்தட்ட 30 படங்களுக்கு மேல் இயக்கியிருக்கிறார் முத்துராமன். ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து விலகி விடலாம் என்று நினைத்த முத்துராமன் ரஜினியிடம் ஒரு கோரிக்கை வைத்தாராம்.

அதாவது தன்னுடன் பணிபுரிந்த டெக்னீசியன்களுக்காக ஒரு படம் நடித்துக் கொடுக்க வேண்டும் என்று கூறினாராம் முத்துராமன். ரஜினியும் அதற்கு சம்மதித்து நடித்துக் கொடுத்த படம்தான் பாண்டியன் திரைப்படமாம்.

இதையும் படிங்க: நண்டு சுண்டெல்லாம் விஜய்க்கு ஹீரோயின்! ‘தளபதி68’ல் மீனாட்சி சௌத்ரி உள்ளே வந்தது எப்படி?

அந்தப் படத்தின் மூலம் வந்த பணத்தை முத்துராமன் ரஜினியின் முன்பே எல்லாருக்கும் சம பாதியாக பிரித்துக் கொடுத்தாராம். அதில் பயனடைந்த ஒருவர்தான் இன்று மறைந்த பிதாமகன் தயாரிப்பாளர் வி.ஏ.துரையும்.

அவர்களிடம் ரஜினி ‘இந்தப் பணத்தை சினிமாவில் முதலீடு செய்யாதீர்கள். ஏதாவது ஒரு வீட்டை வாங்கி செட்டிலாகி விடுங்கள்’ என்ற அறிவுரையையும் வழங்கினாராம். இதே போல் தனது நண்பர்களுக்காக மேலும் ரஜினி நடித்து கொடுத்த படமாக வள்ளி மற்றும் அருணாச்சலம் போன்ற படங்கள் அமைந்தது.

இதையும் படிங்க: ரஜினிக்காக இறங்கி வந்த அமிதாப்பச்சன்!.. கொஞ்சம் பாத்துக் கத்துக்கோங்க ஆண்டவரே!..

Next Story