லால் சலாம் படத்துக்கு வேட்டு.. சொந்த காசில் சூனியம் வைத்த ஐஸ்வர்யா... இதெல்லாம் தேவையா?!..

Lal salaam: ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா. நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டவர். இரு ஆண் குழந்தைகளுக்கு தயானார். சினிமா இயக்குவதில் ஆர்வம் ஏற்பட்டு செல்வராகனிடம் உதவியாளராக இருந்து வேலை கற்றுக்கொண்டார். தனுஷை வைத்து 3 என்கிற படத்தை இயக்கினார். அந்த படம் வெற்றி பெறவில்லை என்றாலும் விமர்சன ரீதியாக பாராட்டைபெற்றது. அடுத்து சில வருடங்கள் கழித்து கவுதம் கார்த்திக்கை வைத்து வை ராஜா வை என்ற படத்தை இயக்கினார். இந்த படமும் ஓடவில்லை. […]

Update: 2023-11-09 04:16 GMT

Lal salaam: ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா. நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டவர். இரு ஆண் குழந்தைகளுக்கு தயானார். சினிமா இயக்குவதில் ஆர்வம் ஏற்பட்டு செல்வராகனிடம் உதவியாளராக இருந்து வேலை கற்றுக்கொண்டார். தனுஷை வைத்து 3 என்கிற படத்தை இயக்கினார். அந்த படம் வெற்றி பெறவில்லை என்றாலும் விமர்சன ரீதியாக பாராட்டைபெற்றது.

அடுத்து சில வருடங்கள் கழித்து கவுதம் கார்த்திக்கை வைத்து வை ராஜா வை என்ற படத்தை இயக்கினார். இந்த படமும் ஓடவில்லை. அதன்பின் சில வருடங்கள் அவர் எந்த திரைப்படத்தையும் இயக்கவில்லை. அதேநேரம், தனுஷுடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டு அவரை பிரிந்தார்.

இதையும் படிங்க: எல்லா பாட்டும் எழுதினது நான்! ஆனா பேரு யாருக்கு தெரியுமா? ரஜினி படத்தில் நடந்த குளறுபடிய சொன்ன வாலி

இப்போது அப்பா, அம்மாவுடன் வாழ்ந்து வருகிறார். மேலும், லால் சலாம் என்கிற திரைப்படத்தையும் இயக்கி முடித்திருக்கிறார். இந்த படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முக்கிய வேடத்தில் ஐஸ்வர்யாவின் அப்பாவான ரஜினி ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். அதோடு, கபில் தேவ், ஜீவிதா, தம்பி ராமையா என பலரும் நடித்துள்ளனர்.

laal salam

இந்த படம் பொங்கலுக்கு வருவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், ரஜினியை வைத்து ஐஸ்வர்யா எடுத்து சில காட்சிகளை கொண்ட ஹார்ட் டிஸ்க் காணாமல் போய்விட்டதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது. அதோடு, இதன் காரணமாக ஜனவரி 26 படம் தள்ளிப்போவதாகவும் சொல்லப்பட்டது.

இதையும் படிங்க: தங்கலான் முதல் தளபதி 68 வரை!.. வரிசை கட்டி நிற்கும் படங்கள்!. ரிலீஸ் எப்போது தெரியுமா?..

ஆனால், ஏற்கனவே, அரண்மனை 4, அயலான், கேப்டன் மில்லர் ஆகிய படங்களை பொங்கலன்று வெளியிடும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் லால் சலாம் படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்க சொல்லிவிட்டது. இது ரஜினிக்கு அசிங்கம் என்பதால் இப்படி காட்சிகளை காணவில்லை என பொய் சொல்கிறார்கள் என சிலர் கூறினார்கள்.

இந்நிலையில், லால் சலாம் படப்பிடிப்பு முடிந்தவுடன் போஸ்ட் புரடெக்‌ஷன் பணிகளுக்கு 2 பேரை மட்டும் வைத்துக்கொண்டு மற்றவர்களை கும்பிடி போட்டு அனுப்பிவிட்டாராம் ஐஸ்வர்யா. இதில், கோபமடைந்த சில உதவி இயக்குனர்கள்தான் புட்டேஜ் டெலிட் ஆகிவிட்டது என வதந்தியை பரப்பிவிட்டதாக புதிய செய்தி சமூகவலைத்தளங்களில் கசிந்துள்ளது. இதன் மூலம் ஐஸ்வர்யாவை டென்ஷன் ஆக்கி அவர்கள் குஷி ஆனதாக சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க: லோகேஷுக்கு அடுத்து இவர்தான்!. ரஜினி டிக் அடித்த இயக்குனர்.. தலைவர் 172 பரபர அப்டேட்..

Tags:    

Similar News