NEEK ல தனுஷ் நடிக்காததுக்கு இதுதான் காரணமா? பயில்வான் பக்காவா சொல்லிட்டாரே!

By :  Sankaran
Update:2025-02-21 11:49 IST

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் தனுஷ் இயக்கத்தில் இன்று திரைக்கு வந்துள்ளது. இந்தப் படத்தின் விமர்சனம் குறித்து பிரபல யூடியூபர் பயில்வான் ரங்கநாதன் தனது கருத்துகளைச் சொல்கிறார். வாங்க பார்க்கலாம்.

கதை: இது வழக்கமான முக்கோண காதல் கதைதான். படத்தில் கதாநாயகன் பவிஷ் காதல் கொண்டேன் தனுஷ் மாதிரி இருக்காரு... ஆனா பாடி லாங்குவேஜ் இல்லை. பிரியா வாரியரை காதலிக்கிறார். ஆனா ஏற்கனவே அனிகாவைக் காதலித்து அது பிரேக் அப் ஆகிறது. அவள் பின்னாளில் பெரிய தொழில் அதிபரைக் கல்யாணம் செய்யப் போகிறார். அதைக் கண்டு பவிஷ் அந்தக் கல்யாணத்தை நிறுத்த முயற்சிகளில் ஈடுபடுகிறார். இதுதான் கதை.


தனுஷ் நடிக்கல: மலையாள நடிகர் மேத்யு தாமஸ் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். தன்னோட சகோதரி டாக்டரா இருக்காங்க. அவரோட மகனையும் ஹீரோவாக் கிறணும்னு நினைச்சி இறக்கிருக்காரு. அதனாலதான் தான் அந்தப் படத்துல நடிக்கல. நாம நிறைய காதல் படங்கள்ல நடிச்சிருக்கறோம். அதனால இந்த ரோலை தனது சகோதரி மகனுக்கு விட்டுக் கொடுப்போம்னு கொடுத்துருக்காரு. அதனால தான் இந்தப் படத்துல தனுஷ் நடிக்கல.

படத்தில் சரத்குமாரும், ஆடுகளன் நரேனும் அப்பாக்களாக நடித்துள்ளார்கள். இருவரில் சரத்குமார் சீனியர் என்பதால் தெறிக்க விட்டிருக்கிறார். சரண்யா பொன்வண்ணன் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கேரக்டர்கள் கொண்ட அம்மாவாக நடித்துள்ளார்.

காதலர்கள் பார்க்க வேண்டிய படம்: காதல் படங்கள் என்றாலே தனுஷ் நினைவுதான் வரும். முக்கோண காதல் கதையில் இது வித்தியாசமான படம். நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் அருமையான டைட்டில். ஸ்ரீதரின் காதல் பாடல் வரிகள். காதலர்கள், காதலிக்கப் போறவங்க, காதலித்து திருமணம் செய்யப் போறவங்களும் கண்டிப்பா பார்க்க வேண்டிய படம்.

சகோதரி மகனுக்காக: குஷி படத்தின் சாயல் கொஞ்சம் தெரிகிறது. ஆனா அந்தப்படத்தை விட இதை நல்லா ரசிக்கலாம். தனுஷ் இயக்கத்தில் மிகச்சிறப்பாக வந்துள்ளது. எப்பவுமே கதாநாயகன் டைரக்ட் பண்ணும்போது நாமளும் சின்ன கேரக்டர்ல நடிக்கலாமேன்னு எண்ணம் வரும்.

அந்த எண்ணம் இல்லாமல் படத்தை தனது சகோதரி மகனுக்காக இயக்கியுள்ளார் தனுஷ். பிரியங்கா மோகன் கெஸ்ட் ரோலில் ஒரு பாடலுக்கு ஆடிவிட்டுப் போகிறார். படம் முழுக்க ஜாலி தான். சீரியஸான காட்சிகளைக் கூட ஜாலியாகக் காட்டி இருக்கிறார் தனுஷ். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News