அடேய் இது டான் இல்ல… தனுஷின் விஐபி… பழைய மாவை அரைக்கும் டிராகன்… விமர்சனம் இதோ!

By :  Akhilan
Update:2025-02-21 13:52 IST

Dragon: பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியாகி இருக்கும் திரைப்படம் டிராகன். இப்படத்தின் பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் அடங்கிய திரை விமர்சனம் இதோ!

டிராகன் கதை: ஹீரோ ராகவன் தன்னுடைய கல்லூரி வாழ்க்கையில் காதலில் விழுந்து பிரேக் ஆப் ஆகிறது. பின்னர் வெளி உலகத்துக்கு வந்து பினான்ஷியல் பிராட்டில் சிக்குகிறான். அந்த பிரச்சனையெல்லாம் தாண்டி எப்படி வாழ்க்கையில் வெற்றி கண்டான் என்பது தான் மீதி கதை.


இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து: ஹீரோவின் டிரான்ஸ்பாமேர்ஷனை படு பக்காவாக சொல்லி இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து ஹிட்டடித்துவிட்டார். முதல் 30 நிமிடமும் கடைசி ஒரு மணிநேரமும் படத்தினை தூக்கி நிறுத்தி இருக்கிறது. ஓ மை கடவுளே படத்தின் இயக்குனர் என்பதால் அஸ்வத் மாரிமுத்து மீண்டும் ரொமான்ஸை சரியாக கடத்தி இருக்கிறார்.

பிரதீப் ரங்கநாதன்: ஹீரோ பிரதீப் ரங்கநாதனின் நடிப்பும் படத்திற்கு பலமாக அமைந்துள்ளது. ஆனால் இன்னமும் லவ் டுடே மூடிலே இருப்பது போலவே அதே ரியாக்‌ஷனை பல இடங்களில் காட்டி கடுப்படிக்கிறார்.


ஹீரோயின்கள்: அனுபமா பரமேஸ்வரன் மற்றும் காயுடு லோகர் படத்திற்கு சரியாக தேர்வு என்றாலும் அனுபமாவின் நடிப்பு பல இடங்களில் நடுவுல கொஞ்சம் ரியாக்‌ஷனை காணும் லெவலுக்கே இருந்தது. காயுடு வழக்கமான நடிகையாக வந்து சென்றுள்ளார்.

படத்தின் இசை: படத்தின் முக்கிய பலமாக அமைந்தது லியோ ஜேம்ஸ் தான். இசையில் தனி கவனம் காட்டி எல்லா பாடல்களுமே சூப்பர்ஹிட் என்பதாலும் படத்தில் அந்த பாடல்கள் வரும் போது ரசிகர்கள் ஆர்ப்பரிப்பதை பார்க்க முடிகிறது. வழக்கமான கதை என்றாலும் பல இடங்களில் திரைக்கதை சுவாரஸ்யத்தை கூட்டுகிறது.

தனுஷின் வேலையில்லாத பட்டதாரி படத்தின் ராகவன் பெயரை ஹீரோக்கு வைத்து முதல் முறை அவர் பெயரை சொன்னதுமே பலரும் அங்கு சென்று விடுகின்றனர். அதே போல் இஞ்சினியரிங் கதை என்பதால் படம் பல இடங்களில் காப்பிகேட் போல அமைந்து இருப்பதையும் மறுக்க முடியாது.

Tags:    

Similar News