Dragon:டிராகன் படம் காமெடியா? டுபாக்கூரா? பார்த்தவங்க என்ன சொல்றாங்க?

By :  Sankaran
Update:2025-02-21 08:00 IST

ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன் உள்பட பலர் நடித்துள்ள படம் டிராகன். லியோன் ஜேம்ஸ் இசை அமைத்துள்ளார்.

டிராகன்: முதலில் கோமாளி படத்தில் நடித்தார் பிரதீப் ரங்கநாதன். அதன்பிறகு லவ் டுடே படம் வந்தது. இந்தப் படத்திற்குப் பிறகு அவரது படங்களுக்கு தமிழ்சினிமா உலகில் மவுசு அதிகரித்து விட்டது. இன்று டிராகன் படம் ரிலீஸ் ஆகியுள்ளது. இதையொட்டி கடந்த சில வாரங்களாகவே அவரது பேட்டிகள் பல யூடியூப் சேனல்களில் வெளியாகின. தனுஷ் படத்துடன் வந்துள்ளதால் படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் வந்துள்ளன. படம் எப்படி இருக்குன்னு பார்த்தவங்க சொல்றாங்க. என்னன்னு பார்க்கலாமா...

காமெடி: தரமான படம். சூப்பரா இருக்கு. ஆக்டிங் வேற மாதிரி இருந்ததுன்னு சொல்றார் ரசிகர் ஒருவர். இன்னொருவர் காமெடிக்குப் பஞ்சமே இல்லைன்னு சொல்றாரு. இன்னொரு ரசிகர் என்ன சொல்றாருன்னா படம் அந்தளவுக்கு எல்லாம் நல்லாருந்ததுன்னு சொல்ல முடியாது. கொஞ்சம் காமெடியா இருந்தது அவ்ளோதான். இவன்லாம் படம் பார்க்கும்போதே தூங்கிட்டான்னு அருகில் இருந்த நண்பரைக் காட்டுகிறார்.

சின்னப்புள்ள மாதிரி: பேம்லியோட பார்க்க முடியாது. ஆனா யங்ஸ்டர்ஸ் ஒரு தடவை பார்க்கலாம்னு சொல்றாரு. அடுத்த 2 பேருக்கிட்ட படத்தைப் பற்றிக் கேட்கும்போது தூக்கம் வந்துடுச்சுன்னு சொல்றாங்க. மத்த யாருகூடயும் போகாம இவர் வேற லைன்ல போறாரு. சின்னப்புள்ள மாதிரி இருக்காரு. அவ்ளோ அழகா இருக்காருன்னு பிரதீப் ரங்கநாதனை ஒரு ரசிகர் புகழ்ந்து தள்ளுகிறார்.


டுபாக்கூர் படமா?: படம் பிடிச்சிருக்கான்னு பெரியவர் ஒருவரிடம் கேட்கும்போது டுபாக்கூர்னு சொல்றாரு. ஆக்டிங் காமெடி பிச்சிட்டாங்க. தமிழ்நாட்டுப் பசங்களுக்கு ஏத்த மாதிரி இருக்கும். மஜா படம். ரொம்ப நாளைக்கு அப்புறம் சூப்பர் படம். வேற லெவல். புதுசா, குவாலிட்டியா இருக்கு. பக்கா காமெடி என்கின்றனர் படம் பார்த்த ரசிகர்கள்.

சிம்பு விமர்சனம்: படத்திற்கு முதல் ஆளாக நான் விமர்சனம் சொல்றேன்னு சிம்பு இது பிளாக் பஸ்டர் மூவின்னு சொல்லிட்டாராம். 

Tags:    

Similar News