OTT Watch: அப்பா - மகள் பழிவாங்கல்… பிரேமிஜியின் வல்லமை எப்படி இருக்கு?
OTT Watch: காமெடியில் மட்டுமே கலக்கி வந்த பிரேம்ஜியின் நடிப்பில் வெளியாகி இருக்கும் வல்லமை படத்தின் பிளஸ் மற்றும் மைனஸ் பேசும் வல்லமை படத்தின் திரைவிமர்சனம் இங்கே.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள புத்தூர் கிராமத்தில் இருந்து மகளுடன் சென்னைக்கு வருகிறார் பிரேம்ஜி. அங்கு அவர் மகளுக்கே தெரியாமல் பாலியல் சீண்டல் நடக்கிறது. இதை தொடர்ந்து அந்த நபரை பழி வாங்குவது தான் கதை.
இயக்குனர் திரைக்கதையை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க தவறிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். பொதுவாக சிலருக்கு ஒரு ஷார்ட்பிலிமை பார்த்தால் இதை ஏன் முழு நீள படமாக எடுக்காம விட்டாங்க என தோணும். அதுபோல சில படங்களை இதெல்லாம் ஷார்ட் பிலிம் கதையால இருக்கு என நினைக்கலாம். அப்படி ஒரு படம் தான் வல்லமை.
ஹீரோ பிரேம்ஜி என்பதே பெரிய பிரச்னை இங்கு. எப்போதுமே நடக்கும் விஷயத்தில் சீரியஸ் இல்லாத காமெடி ரோல் செய்து வந்த பிரேம்ஜியை இப்படி ஒரு ரோலுக்கு தேர்வு செய்த தைரியத்துக்கே இயக்குனருக்கு சபாஷ் போடலாம். ஆனால் அதுவும் முதல் பிழையாகி விட்டது.
பல இடங்களில் என்ன எமோஷன் கொடுக்கணும் என்பதற்கே திணறுகிறார். அதுமட்டுமல்லாமல் டயலாக்கும் பல இடங்களில் டல்லடிக்கிறது. ஒரு சென்சிட்டிவ்வான கதையை எடுத்து சரியாக திரைக்கதையை சொதப்பி வைத்துவிட்டார் இயக்குனர்.
அப்பா- மகளுடன் கூட நம்மால் ஒன்ற முடியவில்லை. இசை அதை விட மைனஸ் பாடல்களை கூட ஓரளவு ஓகே ரகம் என்றாலும் பின்னணி இசை படு மோசம். ஆஹா தமிழ் ஓடிடியில் இருக்கும் இப்படத்தினை இனிமே பார்ப்பது உங்க கையில தான்!