நீயா… நானா… சிம்பு- கமல்.. யார பாக்குறது… கண்டிப்பா ப்ளாக்பஸ்டர் தான்… தக் லைஃப் டிரெய்லர்…

By :  AKHILAN
Update: 2025-05-17 12:02 GMT

Thuglife: தமிழ் சினிமாவில் அடுத்த சூப்பர் காம்போவாக உருவாகி வரும் திரைப்படம் தக் லைஃப். இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி வாவ் சொல்ல வைத்து இருக்கிறது.

மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் கமல்ஹாசனின் ராஜ்கமல் இணைந்து தயாரித்து இருக்கும் திரைப்படம் தக் லைஃப். இப்படத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன், அபிராமி, திரிஷா உள்ளிட்டோர் முன்னணி வேடத்தில் நடித்துள்ளனர்.

ஆரம்பிக்கப்பட்ட போது இருந்த நடிகர்கள் பாதியிலேயே விலக படத்தின் கதையயே மாற்றி சிம்புவை உள்ளே எடுத்து வந்து அவருக்கென முக்கியத்துவம் உள்ள கதையை உருவாக்கி படப்பிடிப்புகள் முடிக்கப்பட்டது. புரோமோஷன் பணிகள் ஏற்கனவே வேகமெடுத்து நடந்து வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் இன்று பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டு இருக்கிறது. ஆரம்பத்தில் இருந்தே சிம்புவிற்கு இணையான இடத்தினை கமல்ஹாசன் கொடுத்து இருக்கிறார். சிம்புவின் நீண்ட மூடியின் லுக் அவருக்கு மிரட்டலான பிம்பத்தினை தருகிறது.

மனைவியாக அபிராமி நடித்து இருக்கிறார். சிம்புவிற்கு திரிஷா ஜோடியாக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கமலின் இன்னொரு ஜோடியாகவே திரிஷா நடித்திருப்பது போல டிரெய்லரில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. 

Full View


முதலில் மகனாக அவரினை பார்க்கும் கமலுக்கு சிம்பு துரோகம் செய்ய பின்னர் அவரை கமல் பழி வாங்குவதே கதையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிரெய்லரில் இருவரும் சண்டை போடும் காட்சிகள் பார்க்க பிரமிப்பாக அமைக்கப்பட்டுள்ளது.

ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசை படத்துக்கு பலம் சேர்க்கும் வகையில் அமைந்துள்ள நிலையில் ஜூன் 5 படத்தின் ரிலீஸுக்கு இப்போதே பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. கமல் மற்றும் சிம்புவிற்கும் இப்படம் பெரிய வெற்றியாகவே அமையும் என்ற பேச்சுகள் எழுந்து வருகிறது.

Tags:    

Similar News