Vidamuyarchi: அஜர்பைஜான்ல விடாமுயற்சியை ஏன் எடுத்தாங்க? இப்ப தானே தெரியுது...!
மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜீத்தின் ஹாலிவுட் லெவல் படமாக இன்று வெளியாகி உள்ளது விடாமுயற்சி. இதுகுறித்து பிரபல மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு என்ன சொல்கிறாருன்னு பாருங்க.
விடாமுயற்சி வழக்கமான படம் இல்ல. அந்த எண்ணத்தோடு பார்க்க வராதீங்கன்னு இயக்குனர் மகிழ்திருமேனி சொல்லி இருந்தாரு. அதுக்கு ஏத்தமாதிரிதான் அஜீத் வர்ற சீனும் எந்த வித பில்டப்பும் இல்லாம சாதாணமா ஒரு பெட்டியைத் தள்ளிக்கிட்டு வர்றாரு. இப்ப உள்ள 2கே கிட்ஸ்சும் பெரிய பில்டப்பை எதிர்பார்க்கல.
ஒன்லைன்: கதை என்னன்னா அஜீத்தும், திரிஷாவும் கணவன் - மனைவி. இதுல திரிஷா டைவர்ஸ் ஆகி கிளம்புறாங்க. அஜர்பைஜான்ல கதை ஆரம்பிக்குது. அங்கிருந்து திரிஷாவை விடப் போகும்போது அவர் கடத்தப்படுகிறார். எப்ப கடத்துனாங்க..? எப்படி கடத்துனாங்க? யார்லாம் அதுல வில்லன்? அப்படிங்கறதுதான் இந்த ஒன்லைன்.
திரைக்கதை: பிரேக் டவுன் என்ற ஹாலிவுட் படத்துல இருந்து ஒன்லைன் தான் எடுத்துருக்காங்க. மற்றதெல்லாம் மகிழ்திருமேனியோட திரைக்கதைதான். எந்த இடத்துல யாரு ஹீரோ? யாரு வில்லன்னு தெரியாத அளவுக்கு சொல்லிருக்காங்க. இந்தப் படத்தை முழுக்க முழுக்க மகிழ்திருமேனிக்கிட்ட அஜீத் ஒப்படைச்சிட்டாரு.
அஜர்பைஜான்: எனக்கு எந்த இன்ட்ரோவும் வேணாம்னு சொல்லிட்டாரு. இந்தப் படத்துக்கு ஏன் அஜர்பைஜானுக்குப் போனாங்க? அங்க போனதால தான் 2 வருஷம் ஆச்சு. ஒரு மணற்புயல், ஒரு பனிப்புயல், அங்கே இருக்கற சீதோஷ்ணநிலை. குறிப்பா அங்கு இருக்குற பெரும்பான்மையானவருக்கு இங்கிலீஷ் தெரியாது.
அஜர்பைஜான் அக்மார்க் கதைகளம். சோவியத் ரஷ்யாவுக்கும், ஐரோப்பாவுக்கும் இல்லாத இடம் அது. இன்டர்வல் பிளாக் எல்லாம் சர்வசாதாரணமா கடந்து போகுது. செகண்ட் ஆப் முழுக்க அஜீத்தோட அதகளம். முதல் 20 நிமிடம் தான் மைனஸ். காதல், எதிர்பார்ப்புன்னு படம் போகுது.
எப்படி பிரச்சனை வருது?: டிராவல் பண்ணினா வாழ்க்கையில மாற்றம் உண்டாகும்கற விஷயம் எப்படி அஜீத், திரிஷா வாழ்க்கையை மாற்றுது? எப்படி பிரச்சனை வருது? கணவனும், மனைவியும் கடத்தல் கும்பல்கிட்ட மாட்டுறாங்க. விடாம முயற்சி பண்ணினா எதையும் சாதிக்கலாம்னுதான் இதுலயும் சொல்றாங்க.
2 வருட காத்திருப்பு: படத்துல டெக்னிகலான விஷயம் ஒரு ஹாலிவுட் படத்தைப் பார்த்த மாதிரி இருந்தது. அதுக்கு ஒரே காரணம் அஜீத் தான். எந்த லுக்கானாலும் அழகுதான். அனிருத்தோட மியூசிக், ஓம்பிரகாஷ் கேமரா அற்புதம். 10 கேரக்டர்தான் படம். பிரமாதமான திரைக்கதை. 2 வருட காத்திருப்புக்கு பெரிய வைப்பை உண்டாக்கி இருக்கு. பஞ்ச் டயலாக் கிடையாது.
வில்லன் யாரு?: மாஸ் என்ட்ரி கிடையாது. ஹாலிவுட் படம் பார்த்த திருப்தி கிடைக்கும். எந்த மொழியில் படம் போட்டாலும் அவர்களுக்குப் புரியும். அஜீத்தின் ஆக்ஷன் வேற லெவல். வில்லி, வில்லன் யாருன்னே தெரியலயேப்பா. யூகிக்க முடியாத அளவுக்கு எடுத்துட்டாரே மகிழ்திருமேனின்னு சொல்ல வச்சிட்டாங்க. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.