அஜித் சொன்னது இப்போ உண்மையாகி விட்டது!.. ஃபீல் பண்ணி பேசிய சுரேஷ் சந்திரா..
Vidaamuyarchi: அஜித்தின் நடிப்பில் உருவான விடாமுயற்சி படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. 2 வருடங்கள் கழித்து அஜித் படம் வெளியானதால் அவரின் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் இப்படத்தை பார்த்து ரசித்து வருகிறார்கள். தமிழகத்தில் காலை 9 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்டது. ஆனால், கேரளா, கர்நாடகா, ஆந்திராவில் அதிகாலை சிறப்பு காட்சி வெளியானது.
எனவே, அஜித்தின் தீவிர ரசிகர்கள் அங்கு சென்று படம் பார்த்தார்கள். காலை முதலே இப்படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் வந்தது. படம் சிறப்பாக இருப்பதாகவும், அஜித்தின் ஸ்கீரின் பிரசன்ஸ் அருமையாக இருப்பதாகவும், அஜித் - திரிஷா இடையேயான காதல் காட்சிகள் நன்றாக இருப்பதாகவும், அசர்பைசான் நாட்டில் உள்ள இடங்கள் அழகாக இருப்பதாகவும் பலரும் சொன்னார்கள்.
அதோடு, படத்தில் வரும் ஆக்சன் காட்சிகள், டிவிட்ஸ்டுகள் எல்லாம் கூஸ்பம்ஸாக இருப்பதாகவும் சொன்னார்கள். குறிப்பாக அனிருத்தின் பின்னணி இசை விடாமுயற்சி படத்திற்கு பெரிய பலமாக இருப்பதாக பலரும் டிவிட்டரில் பதிவிட்டனர். அதோடு, படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்களும் வந்தது.
படத்தில் டிவிஸ்ட் இல்லை, ஒரு நேர்க்கோட்டில் கதை செல்வதால் போரடிக்கிறது, படம் முழுக்க பேசிகொண்டே இருக்கிறார்கள். சண்டைக்காட்சி ஒன்று வந்தால் அது முடிந்த பின்னரும் பேசிக்கொண்டே இருக்கிறார்கள், மொத்தமாக ஏமாற்றிவிட்டது என்றும் சிலர் சொன்னார்கள்.
இன்று முதல் நாள் என்பதால் ரசிகர்கள் மட்டுமே படம் பார்க்க போவார்கள். இன்று முழுக்க கருத்து சொல்பவர்களில் பெரும்பாலானோர் அவர்கள்தான் என்பதால் பாசிட்டிவான கருத்துக்களை மட்டுமே பலராலும் பார்க்க முடிகிறது. டிவிட்டரில் சிலர் நெகட்டிவாக பதிவிட்டும் வருகிறார்கள். ஆனால், பாசிட்டிவ் அதிகமாக இருக்கிறது. விஜய் ரசிகர்கள் வேண்டுமென்றே இப்படத்தை ட்ரோல் செய்வதையும் துவங்கிவிட்டார்கள்.
இந்நிலையில், அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா சென்னையில் உள்ள ஒரு தியேட்டரில் படம் பார்க்க போனார். படம் முடிந்து வெளியே வந்த அவர் ஊடகங்களிடம் பேசியபோது ‘இந்த படத்தின் கதையை கேட்டபோது இதுல மாஸ் கம்மியா இருக்கேன்னு சொன்னாங்க. ஆனால், அஜித் சார் ‘என் ரசிகர்கள் மீது எனக்கு நம்பிக்கை இருக்கு’ன்னு சொன்னார். ரசிகர்கள் கொடுக்கும் வரவேற்பை பார்க்கும்போது அவர் சொன்னது உண்மை என தெரிகிறது’ என சொல்லியிருக்கிறார்.