இதுக்காடா 2 வருஷம்!. டோட்டல் வேஸ்ட்!.. ரசிகர்களின் பொறுமையை சோதிக்கும் விடாமுயற்சி!...

By :  Ramya
Update: 2025-02-06 07:29 GMT

Actor Ajith: நடிகர் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் தான் தற்போது சமூக வலைதள பக்கங்களில் ட்ரெண்டிங்கில் கலக்கிக் கொண்டிருக்கின்றது. எங்கு திரும்பினாலும் விடாமுயற்சி படத்தின் கொண்டாட்டம் மற்றும் ரசிகர்களின் கருத்து போன்றவை உலா வருகின்றது. அதிலும் நடிகர் அஜித்தின் படம் 2 வருடங்களுக்குப் பிறகு வெளியாகி இருப்பதால் தொடர்ந்து திரையரங்குகளில் கொண்டாட்டம் களை கட்டி இருக்கின்றது.

விடாமுயற்சி திரைப்படம்: மகிழ் திருமேனி இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் விடாமுயற்சி. இந்த படத்தில் நடிகர் அஜித்துடன் இணைந்து த்ரிஷா, ரெஜினா, அர்ஜுன், ஆரவ் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள். துணிவு திரைப்படத்தை தொடர்ந்து அஜித் கமிட்டான இந்த திரைப்படத்தை எடுத்து முடிப்பதற்கு இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. இப்படத்தை எதிர்பார்த்து அஜித் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருந்தார்கள்.


விடாமுயற்சி ரிலீஸ்: ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி இருக்கின்றது. தமிழகத்தில் 9 மணிக்கு தான் முதல் காட்சி. ஆனால் ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் 6 மணிக்கு படம் வெளியாகி இருப்பதால் தமிழ்நாட்டில் இருந்து பல அஜித் ரசிகர்கள் பிற மாநிலங்களுக்கு சென்று படத்தை பார்த்துவிட்டு தங்களுடைய சமூக வலைதள பக்கத்தில் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.

விடாமுயற்சி விமர்சனம்: விடாமுயற்சி திரைப்படத்தை பார்த்த அஜித் ரசிகர்கள் பலரும் தொடர்ந்து தங்களது சமூக வலைதள பக்கங்களில் பாசிட்டிவ்வான விமர்சனங்களை கொடுத்து வருகின்றார்கள். படம் மிகச்சிறப்பாக அமைந்திருக்கின்றது. முதல் பாதியை விட இரண்டாவது பாதி மிக அருமையாக இருக்கின்றது. மகிழ் திருமேனி கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த படத்தை எடுத்திருக்கின்றார்.

அஜித் ரசிகர்களுக்கு மட்டுமல்ல சினிமா ரசிகர்களுக்கு இந்த திரைப்படம் மிகப்பெரிய விருந்தாக அமையும். படத்தின் தொடக்கத்தில் இருந்து இறுதிவரை அனிருத் இசை படத்தை மேலும் சுவாரசியமாக கொண்டு செல்கின்றது. அஜித் நடித்த படங்களிலேயே இது ஒரு வித்தியாசமான திரைப்படம் என்று தொடர்ந்து தங்களது விமர்சனங்களை கூறி வருகிறார்கள்.

நெகட்டிவ் விமர்சனம்: இரண்டு வருடம் கழித்து அஜித்தின் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி இருப்பதால் அஜித் ரசிகர்கள் தொடர்ந்து பாசிட்டிவ்வான விமர்சனங்களை கொடுத்து வந்தாலும், படம் பார்த்த சிலர் படம் குறித்து நெகட்டிவ் விமர்சனங்களை முன் வைத்து இருக்கிறார்கள். அஜித் மற்றும் த்ரிஷாவின் காதல் காட்சி மிகவும் மந்தமாக இருக்கின்றது.




அனிருத் இசை ஓகே, பாடல்கள் நன்றாக வந்திருக்கின்றது. படத்தின் கதை பலவீனமாக இருக்கின்றது. எந்த ஒரு சுவாரசியமும் இல்லை. படத்தில் எமோஷனல் இல்லை, ட்விஸ்ட் காட்சிகள் இல்லை, ஒரு சஸ்பென்ஸ் இல்லை, மொத்தமாக ஏமாற்றம் தான் என்று கூறி இருக்கிறார்கள். மற்றொரு நபர் பிரேக் டவுன் படத்தை அப்படியே ரீமிக்ஸ் செய்து வைத்திருக்கிறார்கள். ரசிகர்கள் தியேட்டரில் கொண்டாடி பார்க்கும் அளவுக்கு படத்தில் எதுவும் இல்லை. அஜித் மற்றும் த்ரிஷா காதல் போர்ஷன் மட்டுமே கொஞ்சம் வொர்க் அவுட்டாகி இருக்கின்றது.



படத்தை பார்த்த மற்றொரு ரசிகர் பிரேக் டவுன் மற்றும் இன்னொரு ஆங்கில படத்தையும் இணைத்து இந்த படத்தை எடுத்து வைத்திருக்கிறார்கள். முதல் பாதியில் பேசிக்கொண்டிருந்தார்கள். சரி படம் ஆக்சன் படம் என்று கூறினார்கள். இரண்டாவது பாதியிலாவது ஆக்ஷன் காட்சிகள் வரும் என்று பார்த்தால் அதையும் சற்றென்று முடித்து விட்டார்கள்.

பின்னர் மீண்டும் பேச தொடங்கி விட்டார்கள். படம் ஆரம்பித்து முடியும் வரை பேசிக்கொண்டு மட்டும் தான் இருக்கிறார்கள். பேசுறது தவிர அந்த படத்துல ஒரு மண்ணும் இல்லை. அனிருத் மட்டும் இந்த படத்தில் இல்லை என்றால் இந்த படத்தை இப்பயே ஒழிச்சு கட்டிவிடலாம். பாடல் விசுவலேயஷன் கூட சிறப்பானதாக இல்லை என்று தனது ஆதங்கத்தை கொட்டி இருக்கின்றார்.

Tags:    

Similar News