அட போங்காட்டம் புடிச்ச சந்தீப் ரெட்டி வங்கா!.. சூர்யா படத்துல இருந்து சீனை ஆட்டையை போட்டுட்டாரா?

by Saranya M |   ( Updated:2024-02-23 16:47:21  )
அட போங்காட்டம் புடிச்ச சந்தீப் ரெட்டி வங்கா!.. சூர்யா படத்துல இருந்து சீனை ஆட்டையை போட்டுட்டாரா?
X

சந்தீப் ரெட்டி வங்கா தான் ஒன்லி பீஸ் என டோலிவுட் ரசிகர்கள் முதல் பாலிவுட் ரசிகர்கள் வரை பெருமை பேசி வரும் நிலையில், இதெல்லாம் எங்க செல்வராகவன் ஜீனியஸ் சூர்யாவை வச்சு எப்பவோ எடுத்துட்டாரு என என்ஜிகே படத்தின் காட்சியை போட்டு கலாய்த்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு டிசம்பர் 1ம் தேதி சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, திரிப்தி திம்ரி, பாபி தியோல், அனில் கபூர், பிருத்விராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான அனிமல் படம் 900 கோடி வசூல் ஈட்டியது.

இதையும் படிங்க: மொத்தத்தையும் கழட்டியாச்சு!.. சமந்தா எப்படி குளிக்கிறாருன்னு பாருங்க!.. ஜூம் பண்ணா அவ்ளோதான்!

அனிமல் மாதிரி ஒரு கேவலமான படத்தை வாழ்நாளில் பார்த்ததே கிடையாது என பல சினிமா பிரபலங்கள் கழுவி ஊற்றி வரும் நிலையில், ஜிகர்தண்டா படத்தில் வருவதுபோல இது குப்பை படம் என ஒரு சாரார் சொல்லி வந்தாலும் இதுதான் சூப்பர் படம் என பிலிம்ஃபேர் விருது விழாவில் அந்தப் படத்துக்கு ஆறு விருதுகள் வழங்கப்பட்டன.

மேலும் சமீபத்தில் நடந்த தாதாசாகேப் பால்கே விருது விழாவில் சிறந்த இயக்குனருக்கான விருதை சந்திப் ரெட்டி வங்கா வென்றார். 12த் ஃபெயில் பட இயக்குநரை டீலில் விட்டு விட்டனர். அட்லீக்கும் சந்தீப் ரெட்டி வங்காவுக்கும் தான் விருது கொடுத்தனர்.

இதையும் படிங்க: ஏகப்பட்ட கலெக்‌ஷன்.. விலையும் இவ்வளவு குறைவா?.. வாயடைத்து போன பிரியங்கா நல்காரி..

மனைவிக்கு துரோகம் செய்து விட்டு அப்பாவுக்காக இன்னொரு பெண்ணுடன் ஜல்சா செய்தேன் என அனிமல் ஹீரோ ரன்பீர் கபூர் சொல்ல சந்திரமுகி பேயாக மாறி ராஷ்மிகா திட்டும் காட்சிகளை ஏற்கனவே அரசியலுக்காக ரகுல் ப்ரீத் சிங்குடன் சென்ற சூர்யாவை மோப்பம் எல்லாம் பிடித்து சாய் பல்லவி திட்டித் தீர்க்கும் காட்சியில் இருந்து தான் சந்தீப் ரெட்டி வங்கா சுட்டு எடுத்து இருக்கிறார் என கிண்டல் செய்து வருகின்றனர்.

Next Story