இப்படி ஒரு வீடியோவை போடுவீங்கனு நினைக்கல! திகிலடைய வைத்த ‘சுந்தரி’ சீரியல் நடிகை
Gabriella: சன் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் மக்கள் மத்தியில் ஒரு நல்ல இடத்தை தக்கவைத்துக் கொண்ட சீரியல் சுந்தரி. இந்த சீரியல் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கும் மேலாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றது. சுந்தரி என்ற கதாபாத்திரத்தில் நடிகை கேப்ரியல்லா நடித்திருக்கிறார். ஆரம்பத்தில் ஒரு கிராமத்து பெண்ணாக வெளி உலகம் தெரியாத ஒரு அப்பாவி பெண் போன்ற கதாபாத்திரத்தில் நடித்த கேப்ரியல்லா அதன் பிறகு வெளி உலக நடப்புகள் எல்லாம் அறிந்து மேற்கொண்டு படித்து இப்போது கலெக்டர் என்ற […]
Gabriella: சன் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் மக்கள் மத்தியில் ஒரு நல்ல இடத்தை தக்கவைத்துக் கொண்ட சீரியல் சுந்தரி. இந்த சீரியல் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கும் மேலாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றது. சுந்தரி என்ற கதாபாத்திரத்தில் நடிகை கேப்ரியல்லா நடித்திருக்கிறார்.
ஆரம்பத்தில் ஒரு கிராமத்து பெண்ணாக வெளி உலகம் தெரியாத ஒரு அப்பாவி பெண் போன்ற கதாபாத்திரத்தில் நடித்த கேப்ரியல்லா அதன் பிறகு வெளி உலக நடப்புகள் எல்லாம் அறிந்து மேற்கொண்டு படித்து இப்போது கலெக்டர் என்ற ஒரு உயரிய பதவியில் அமர்ந்த மாதிரி காட்சிகள் அமைக்கப்பட்டு தொடர்ந்து மக்கள் ஆதரவை பெற்று வருகின்றது இந்த சுந்தரி சீரியல்.
இதையும் படிங்க: மகாராஜாவை மிஸ் செய்தது இதனால்தான்.. ஒருவழியா விஷயத்தினை சொல்லிட்டாரு ஷாந்தனு..
ஆரம்பத்தில் கேப்ரியல்லா விஜய் டிவியில் சூப்பர் ஹிட் அடித்த கலக்கப்போவது யாரு சாம்பியன் என்ற நிகழ்ச்சியின் மூலம் மீடியாவிற்குள் அறிமுகமானார். அந்த நிகழ்ச்சியில் பல காமெடிகளில் கலந்துகொண்டு அவருடைய திறமையை காட்டி வந்தார். ஆனால் அங்கு அவருடைய அந்தத் திறமை எடுபடவில்லை. அதன் பிறகு தான் சுந்தரி சீரியலில் லீடு ரோலில் நடித்து மக்கள் மத்தியில் ஒரு தனி இடம் பிடித்திருக்கிறார்.
சுந்தரி சீரியலுக்குப் பிறகு அவருடைய வாழ்க்கையில் ஏறுமுகம் தான் என்று சொல்ல வேண்டும். சொந்தமாக நடிப்பு பள்ளி ஒன்றை ஆரம்பித்து அதன் மூலம் பல பேருக்கு நடிப்பை பற்றியும் சொல்லிக் கொடுத்து வருகிறார் கேப்ரியல்லா .அவ்வப்போது சோசியல் மீடியாக்களில் ஸ்டைலிஷ் ஆன புகைப்படங்கள் சவாலான கதாபாத்திரம் ஏற்று நடித்த வீடியோக்கள் என பதிவிட்டு வரும் கேப்ரியல்லா இப்போது கூட ஒரு வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்திருக்கிறார்.
இதையும் படிங்க: இதுதான் ஹிஸ்ட்ரி! தொடர்ந்து சாதனை படைத்து வரும் மகாராஜா.. என்ன மேட்டர் தெரியுமா?
அதுவும் அவருக்கு எப்போதெல்லாம் வீட்டில் போர் அடிக்கின்றதோ இந்த மாதிரி நான் செய்வேன் என ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். எத்தனையோ திகில் படங்களை நாம் பார்த்திருக்கிறோம். அதையெல்லாம் மிஞ்சும் அளவுக்கு இவருடைய அந்த நடிப்பு இந்த வீடியோவில் அனைவரையும் பிரமிக்க வைத்திருக்கிறது. அதுவும் அவருடைய சொந்த குரலிலேயே இந்த பெர்ஃபார்மன்ஸ் செய்திருப்பதாக பதிவிட்டிருக்கிறார்
இதோ அந்த வீடியோ லிங்க்: https://www.instagram.com/reel/C-67MWeRKr-/?utm_source=ig_web_copy_link