செம யூத்தா மாறிட்டாரே ஏ.கே.!. தல நீ வேறலெவல்!.. ஷாலினி பகிர்ந்த வைரல் புகைப்படம்...
Ajith kumar: தமிழ் சினிமாவில் எப்போதும் ஸ்டைலீஸ் லுக்கில் வலம் வருபவர் நடிகர் அஜித். தலைமுடி, தாடி, மீசை என எல்லாமே வெள்ளையாக மாறிவிட்டாலும் அதையே ஒரு தனி ஸ்டைலாக மாற்றிவிட்டார். மற்ற நடிகர்கள் போல் தலைமுடியில் வெள்ளை தெரியாமல் இருக்க டை அடிப்பது போல் அஜித் செய்வது இல்லை.
சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் வலம் வந்தவருக்கு இப்போது முழுவதும் வெள்ளையாகி விட்டது. ஆனாலும், அந்த தோற்றத்திலேயே நடித்து வருகிறார். இப்போது நடித்து வரும் விடாமுயற்சி படத்திலும் இதே தோற்றத்தில்தான் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு அசர்பைசான் நாட்டில் நடந்து வருகிறது.
இதையும் படிங்க: ஸ்டைலீஸ் லுக்கில் அஜித்.. அஜர்பைசான்லயும் விடாத ரசிகர்கள்!.. தாறுமாறா வைரலாகும் புகைப்படங்கள்!..
இப்படத்தில் எல்லா காட்சிகளும் அந்த நாட்டிலேயே எடுக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இதற்காக கடந்த 2 மாதங்களாக படக்குழு அந்த நாட்டில் இருக்கிறது. இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்து வருகிறார். மேலும், ஆக்ஷன் கிங் அர்ஜுன் வில்லனாக நடித்து வருகிறார்.
இந்த படத்தில் நடிப்பதற்காக அஜித் அசர்பைசான் நாட்டுக்கு சென்றவுடனேயே அங்குள்ள பல ரசிகர்களும் அவருடன் புகைப்படங்களை எடுத்து வருகின்றனர். இதில் ஆச்சர்யம் என்னவென்னில் அசர்பைசானில் வசிக்கும் மக்களில் சிலருக்கும் அஜித்த தெரிந்து வைத்திருக்கிறார்கள்.
இதையும் படிங்க: விக்கியை அஜித் கழட்டிவிட்ட கடுப்பா தெரியலயே!.. இயக்குனரை கழட்டிவிட்ட நயன்தாரா..
அஜித் சூப்பர் மார்க்கெட் போன்ற இடங்களுக்கு போகும்போது அங்கு அவருடன் புகைப்படங்களை எடுத்து வருகின்றனர். இந்த புகைப்படங்கள் எல்லாமே சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அஜித் ரசிகர்கள் பலரும் அந்த புகைப்படங்களை தங்களின் சமூகவலைத்தளங்களில் பகிருந்து வருகிறார்கள்.
இந்நிலையில், ஜீன்ஸ், டீசர்ட் அணிந்து அஜித் ஸ்டைலாக நிற்கும் அவரின் புகைப்படத்தை அஜித்தின் மனைவி ஷாலினியே வெளியிட்டிருக்கிறார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: கோலிவுட்டின் அடுத்த சயின்ஸ் பிக்ஷன் கதையில் சூர்யாவா? யார் டைரக்டர் தெரியுமா?