அஜித்தே சூட்டிங் போய்டாப்ல! உனக்கு என்ன தலைவா? கைவிடப்பட்டதா சிம்புவின் ப்ராஜக்ட்?
Actor Simbu: தமிழ் சினிமாவில் நடிகர் சிம்பு ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக பார்க்கப்படுகிறார். மாநாடு பட ரிலீஸுக்கு பிறகே அவர் மீது திரையுலகம் மிகுந்த நம்பிக்கையில் இருக்கிறார்கள். அந்த நம்பிக்கை வீண்போகாதவாறு தொடர்ந்து வெந்து தணிந்தது காடு மற்றும் பத்துதல என பேக் டூ பேக் தன் நடிப்பை வெளிப்படுத்தும் கதைகளாக அமைந்த படங்களில் நடித்து ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக தன்னை காட்டிக் கொண்டார் சிம்பு.
பத்துதல படத்திற்கு பிறகு ராஜ்கமல் நிறுவனத்துடன் ஒரு புதிய படத்தில் ஒப்பந்தம் ஆகியிருந்தார் சிம்பு. அந்தப் படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்குவதாக இருந்தது. படத்திற்கான வேலைகளும் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தது.
இதையும் படிங்க: பார்த்தவுடனே கணித்த இளையராஜா!.. தேடிவந்த வாய்ப்பு!.. மிஸ் பண்ணிய பாண்டியராஜன்..
இதனிடையில் சிம்பு மீது ஐசரி கணேஷ் புகார் ஒன்றை அளிக்க அந்த பிரச்சினை நீண்ட காலமாக நடந்து கொண்டிருந்தது. எப்படியோ ஒரு வழியாக அந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்த படக்குழு அதன் பிறகாவது சிம்புவை வைத்து படத்தை டேக் ஆஃப் செய்வார்கள் என்று பார்த்தால் இதுவரை எந்த ஒரு அறிவிப்பும் வரவில்லை.
இதற்கிடையில் தீவிர உடற்பயிற்சி செய்து மிகவும் ஸ்டைலிஷாக இருக்கும் புகைப்படத்தையும் வீடியோவையும் அண்மையில் வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். அப்பாடா! தலைவன் திரும்பி வந்துட்டான்யா என்று பார்த்தால் இன்னும் படப்பிடிப்பிற்கே போகவில்லையாம் சிம்பு.
இதையும் படிங்க: இவ்வளவு படங்களை தயாரிச்ச ஏவிஎம் நிறுவனம் அத மட்டும் பண்ணதே இல்லை!.. ஏன் தெரியுமா?..
என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை என்று கோடம்பாக்கத்தில் புலம்பி வருகின்றனர். இந்த நிலையில் சிம்புவும் சுதா கொங்கராவும் இணைந்து ஒரு புதிய படத்தை தொடங்க இருப்பதாகவும் அதை கொம்பாலாயா நிறுவனம் தான் தயாரிக்கிறது என்ற பேச்சும் அடிபட்டது.
இதைப் பற்றி சிம்புவும் பேசியிருக்கிறார். ஆனால் திடீரென இந்தப் படம் டிராப் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது. ஒரு பக்கம் சுதா கொங்கரா சூர்யாவை வைத்து படம் எடுக்க தயாராகி விட்டார். இன்னொரு பக்கம் சிம்புவின் ராஜ்கமல் படத்தின் நிலைமை என்னவென்றே தெரியவில்லை. இப்படி இருக்கும் சூழ்நிலையில் யாரை நம்பி படத்தை எடுக்கிறது என கொம்பாலாயா சிம்புவின் படத்தை டிராப் செய்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: எந்திருக்கவே முடியலயாம்.. அவனுக்கு ஏழு பொண்டாட்டி கேட்குதாம்! சிரிப்பா போச்சு ஜெயம் ரவியின் நிலைமை