பல நாள் பழக்கம்! பாடகி சொன்ன ஒரே வார்த்தை - உடனே கைவிட்ட சிவாஜி
Actor Sivaji: தமிழ் திரையுலகில் மாபெரும் சாதனை படைத்த எத்தனையோ நடிகர்கள் இருக்கின்றனர். அவர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர் சிவாஜி கணேசன். நடிகர் திலகம் என்று அனைவராலும் அழைக்கப்படும் சிவாஜி சினிமாவிற்காகவே கடைசி வரை வாழ்ந்தார் என்றுதான் சொல்ல வேண்டும். நடிப்பில் அவர் நிகழ்த்திய சாதனைகள் ஏராளம். ஆனால் அவரது சொந்த வாழ்க்கையில் நடந்த சில சுவாரஸ்ய சம்பவங்கள் யாருக்காவது தெரியுமா? சிவாஜிக்கு அசைவ உணவுகள் சாப்பிடுவது என்பது மிகவும் பிடிக்குமாம். சொல்லப்போனால் அசைவ உணவுகளைத்தான் அதிகமாக சாப்பிடுவாராம். […]
Actor Sivaji: தமிழ் திரையுலகில் மாபெரும் சாதனை படைத்த எத்தனையோ நடிகர்கள் இருக்கின்றனர். அவர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர் சிவாஜி கணேசன். நடிகர் திலகம் என்று அனைவராலும் அழைக்கப்படும் சிவாஜி சினிமாவிற்காகவே கடைசி வரை வாழ்ந்தார் என்றுதான் சொல்ல வேண்டும்.
நடிப்பில் அவர் நிகழ்த்திய சாதனைகள் ஏராளம். ஆனால் அவரது சொந்த வாழ்க்கையில் நடந்த சில சுவாரஸ்ய சம்பவங்கள் யாருக்காவது தெரியுமா? சிவாஜிக்கு அசைவ உணவுகள் சாப்பிடுவது என்பது மிகவும் பிடிக்குமாம். சொல்லப்போனால் அசைவ உணவுகளைத்தான் அதிகமாக சாப்பிடுவாராம்.
இதையும் படிங்க : சிவாஜியுடன் இத்தனை படங்களா? பத்மினியை விட அதிக ஸ்கோர் செய்த நடிகை யார் தெரியுமா?
அதிலும் குறிப்பாக குயில் கறியை சாப்பிடுவதைத்தான் வழக்கமாக கொண்டிருந்தாராம் . ஆனால் எந்த உணவை மிகவும் விரும்பி சாப்பிட்டாரோ அதை இனிமேல் தொடவே மாட்டேன் என்று சபதம் மேற்கொண்டார் என்றால் அதற்கு பின்னாடி ஒரு காரணமே இருந்திருக்கின்றது.
பிரபல பழம்பெரும் பாடகியான லதா மங்கேஷ்கரும் சிவாஜியும் சகோதர சகோதரியாகவே பழகி வந்தார்களாம். லதா மங்கேஷ்கர் எப்பொழுதெல்லாம் சென்னை வருகிறாரோ சிவாஜியின் வீட்டில் தான் தங்குவாராம். அதே போல் சிவாஜி மும்பை போகும் போதெல்லாம் லதா மங்கேஷ்கரின் வீட்டில்தான் தங்குவாராம்.
இதையும் படிங்க : லியோ மண்ணை கவ்வும்… இல்ல என் மீசையை எடுத்துக்கிறேன்.. அண்ணே இப்படியா சொல்லுவீங்க!
அப்படி ஒரு சமயம் லதா மங்கேஷ்கர் சிவாஜி விட்டிற்கு வந்த போது அங்கு ஏராளமான குயில்கள் இருப்பதை பார்த்திருக்கிறார். அதை பார்த்ததும் எதுக்கு இத்தனை குயில்களை வளர்க்கிறீர்கள் என்று சிவாஜியை பார்த்து கேட்டாராம். அதற்கு சிவாஜி ‘எதுக்கு சாப்பிடத்தான்’ என்று சொல்லியிருக்கிறார்.
அதை கேட்டதும் லதா மங்கேஷ்கர் சுதந்திரமாக பறக்க ஆசைப்படும் பறவைகளை இப்படி கூண்டில் அடைத்து வைக்கலாமா? உடனே திறந்து விடுங்கள் என்று சொல்லியிருக்கிறார். அவர் பேச்சுக்கு மறு பேச்சு பேசாமல் சிவாஜியும் அந்த கூண்டை திறந்து விட சிவாஜியின் வீட்டிற்குள் ஏராளமான குயில்கள் அங்குமிங்குமாக பறந்ததாம். அதற்கேற்றாற்போல லதா மங்கேஷ்கர் ஒரு பாடலையும் பாடி மகிழ்ந்தாராம்.
இதையும் படிங்க : பெரிய மனச பெரிய இடத்துல மட்டும் காட்டினா போதாது.. விஜய்யை திட்டி தீர்க்கும் தயாரிப்பாளர்..
அதிலிருந்தே குயில் கறியை சாப்பிடுவதை நிறுத்திக் கொண்டாராம் சிவாஜி. இப்படி சிவாஜிக்கும் லதா மங்கேஷ்கருக்கும் இடையே ஒரு ஆழமான உறவு இருந்ததை பற்றி பிரபல சினிமா தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் கூறினார்.