விஜய்யோட கருடன் கதையில் அந்த காமெடி நடிகரா!.. வெற்றிமாறன் என்ன இப்படி பண்ணிட்டாரு!..

காமெடி நடிகர் சூரி இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆனார். அந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வரும் நிலையில் தற்போது அடுத்ததாக சிவகார்த்திகேயன் மற்றும் தனுஷை வைத்து இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி நடிக்கும் புதிய படத்தின் பூஜை இன்று போடப்பட்டது. சிவகார்த்திகேயன் எதிர்நீச்சல், காக்கிச்சட்டை உள்ளிட்ட படங்களை இயக்கியவர் துரை செந்தில்குமார். தனுஷின் கொடி படத்தையும் இயக்கியவர் இவர்தான். இயக்குனர் வெற்றிமாறனின் உதவி இயக்குனராக பணியாற்றி […]

By :  Saranya M
Update: 2023-09-11 21:00 GMT

காமெடி நடிகர் சூரி இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆனார். அந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வரும் நிலையில் தற்போது அடுத்ததாக சிவகார்த்திகேயன் மற்றும் தனுஷை வைத்து இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி நடிக்கும் புதிய படத்தின் பூஜை இன்று போடப்பட்டது.

சிவகார்த்திகேயன் எதிர்நீச்சல், காக்கிச்சட்டை உள்ளிட்ட படங்களை இயக்கியவர் துரை செந்தில்குமார். தனுஷின் கொடி படத்தையும் இயக்கியவர் இவர்தான். இயக்குனர் வெற்றிமாறனின் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த துரை செந்தில்குமார் இயக்குனர் ஆன நிலையில் சிவகார்த்திகேயன் மற்றும் தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களை இயக்கி வந்தார். இவர் இயக்கத்தில் சில பாடங்கள் சரிவரப் போகாத நிலையில், சில காலங்கள் புதிய படங்களை இயக்காமல் இருந்தார்.

விஜய்க்கு சொன்ன கருடன் கதையில் சூரி

இந்நிலையில், நடிகர் விஜய்க்கு இயக்குனர் வெற்றிமாறன் வைத்திருந்த கருடன் படத்தின் கதையில் தான் சூரி நடிக்கப் போவதாகவும் தனது உதவி இயக்குனருக்காக வெற்றிமாறன் தனது கதையை கொடுத்துள்ளதாக கூறுகின்றனர்.

இந்தப்படத்தில் நடிகர் சூரியுடன் நடிகர் சசிகுமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். மலையாள நடிகர் உன்னி முகுந்தன் இந்தப் படத்தில் இணைந்துள்ளார். மேலும், பாரதிகண்ணம்மா சீரியல் நடிகை ரோஷினி ஹரிப்ரியன் நாயகியாக நடிக்க உள்ளார். இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்தப் படத்தின் பூஜை இன்று கோலாகலமாக நடைபெற்றது.

சந்தானத்தை விட சக்சஸ்

நகைச்சுவை நடிகராக பல படங்களில் நடித்து அசத்தி வந்த சூரி சமீபகாலமாக நல்ல கதைகளை தேர்வு செய்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி நானும் ஒரு ஹீரோ மெட்டீரியல் தான் என்பதை நிரூபித்து வருகிறார்.

நடிகர் சந்தானம் பல ஆண்டுகளாக ஹீரோவாக நடித்து வந்தாலும் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடித்த விடுதலை படத்திற்கு கிடைத்த அளவுக்கு வரவேற்பு சந்தானத்துக்கு இன்னும் கிடைக்கவில்லை. நடிகர் யோகி பாபு கூட மண்டேலா, பரியேறும் பெருமாள், கர்ணன் உள்ளிட்ட படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

இனிமேல் இப்படித்தான்

நடிகர் சூரி இனிமேல் காமெடி நடிகராக நடிப்பாரா என்கிற கேள்வியே தற்போது எழுந்துள்ளது. இந்த அளவுக்கு தொடர்ந்து நல்ல இயக்குனர்களையும் திரைக் கதைகளையும் தேர்வு செய்து நாயகனாக நடிக்க ஆரம்பித்து விட்டார். அவரது இந்த சரியான முயற்சிக்கு தக்க பலன் கிடைத்து வருவதாக ரசிகர்கள் வருகின்றனர்.

மேலும் விடுதலை 2 திரைப்படத்திற்காக ஆவலுடன் ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் அந்த படம் இந்த ஆண்டு இறுதிக்குள் ரிலீஸ் ஆகுமா அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளியாகுமா என்கிற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Tags:    

Similar News