விபத்தில் சிக்கி 23 அறுவை சிகிச்சைகள்!.. 3 வருடம் படுக்கை!.. சாதித்து காட்டிய சியான் விக்ரம்!..
Actor vikram: பாலா இயக்கிய ‘சேது’ திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் விக்ரம். அந்த படத்தில் விக்ரமின் நடிப்பை பார்த்த பலரும் அவருக்கு ரசிகர்களாக மாறினார்கள். கமலுக்கு பின் கதாபாத்திரத்திற்காக தன்னை மாற்றிக்கொள்ளும் நடிகராக இவரை ரசிகர்கள் பார்க்க துவங்கினார்கள்.
ஆனால், மாற்றிக்கொள்வது மட்டுமல்ல, கதாபாத்திரத்திற்காக தன்னை வருத்திக்கொள்ளும் நடிகரும் விக்ரம்தான். ஐ படத்திற்காக தன்னை அவர் உருக்குலைத்து கொண்டதெல்லாம் திரையுலகில் எந்த நடிகரும் செய்ய முடியாத ஒன்று. சேதுவுக்கு பின் தில், தூள், சாமி என பல ஹிட் படங்களை கொடுத்தார். இப்போது ரஞ்சித்தின் இயக்கத்தில் உருவாகியுள்ள தங்கலான் படத்தில் விக்ரமின் தோற்றத்தை பார்த்தாலே அவர் எப்படிப்பட்ட நடிகர் என்பது ரசிகர்களுக்கு புரியும்.
இதையும் படிங்க: லியோவால் தங்கலானுக்கு வந்த சோதனை!.. உழைப்பெல்லாம் வீணாப்போயிடுமா?!. அப்செட்டில் விக்ரம்…
சேது படத்திற்கு முன் பல வருடங்கள் சினிமாவில் போராடியவர் விக்ரம். லயோலா கல்லூரியில் படித்த போது சில நிறுவனங்களுக்கு மாடலாக இருந்தார். ஒருநாள் நண்பருடன் பைக்கில் செல்லும்போது விபத்தில் சிக்கி படுகாயமடைந்து அவரின் கால் செயல்படாமல் போகும் நிலையில் அவருக்கு 23 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டது. 3 வருடங்கள் படுக்கையிலேயே இருந்தார் விக்ரம்.
இந்த விபத்தால் விக்ரமின் கனவு, ஆசை என எல்லாமே கேள்விக்குறியாக மாறியது. உடல்நிலை தேறியதும் ஜாய் என்பவர் இயக்கிய ‘என் காதல் கண்மணி’ என்கிற படத்தில் நடித்தார். அடுத்து பழம்பெரும் இயக்குனர் ஸ்ரீதர் இயக்கிய ‘தந்து விட்டேன் என்னை’ படத்தில் நடித்தார். இரண்டு படங்களுமே ஓடவில்லை. அதன்பின் காவல் கீதம், மீரா ஆகிய படங்களில் நடித்தார்.
இதையும் படிங்க: விக்ரம் செய்த மேஜிக்! தூசு தட்டி வெளியே எடுத்த கௌதம் மேனன் – ரிலீஸுக்கு பின்னாடி இப்படி ஒரு ஒப்பந்தமா?
இந்த படங்களும் வெற்றியடையவில்லை. அதன்பின் தெலுங்கு, மலையாளம் என சென்று ஹீரோவின் தம்பி போன்ற வேடங்களில் பல வருடங்கள் நடித்தார். தமிழில் அப்பாஸ், பிரபுதேவா, வினித் உள்ளிட்ட சில ஹீரோக்களுக்கு குரல் மட்டும் கொடுத்தார். அப்போதுதான் பாலா தான் இயக்கிய சேது படத்திற்கு ஒரு நல்ல ஹீரோவை தேடிவந்தார்.
அந்த படத்தின் கதை விக்னேஷ், முரளி என பலரிடம் போய் பின்னார் விக்ரம் உறுதியானார். இந்த படம் தனது வாழ்க்கையை மாற்றும் என நம்பி அபப்டத்திற்கு கடினமான உழைப்பை போட்டார் விக்ரம். அவர் நினைத்தது நடந்தது. இன்னமும் சியான் விக்ரம் என்பதே அவரின் அடையாளமாகவும் இருக்கிறது.
இதையும் படிங்க:அஜித் நிலைமை தான் சியான் விக்ரம் மகனுக்குமா?.. பொறந்தநாளைக்கு போஸ்டர் வருவதோடு சரி!..