பாக்ஸ் ஆபிஸில் புருஷனையே புரட்டி எடுத்த ஜோதிகா!.. சூர்யா படம் எப்போ இந்த வசூலை தாண்டும்?..

கணவர் சூர்யாவால் முடியாததை நடிகை ஜோதிகாவின் படம் முறியடித்துள்ளதாக ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் கலாய்த்து வருகின்றனர். அதற்கு காரணம் ஜோதிகா நடிப்பில் சமீபத்தில் இந்தியில் வெளியான சைத்தான் படம் தான். மாதவன், அஜய் தேவ்கன் மற்றும் ஜோதிகா நடித்து ஹாரர் படமாக வெளியான சைத்தான் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. பாக்ஸ் ஆபிஸில் உலகம் முழுவதும் இதுவரை 201.73 கோடி ரூபாய் வசூலை ஈட்டியிருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இதையும் படிங்க: ஒன்னுக்கே கஷ்டம்… இதுல ரெண்டா… அந்த […]

;

By :  Saranya M
Published On 2024-04-01 14:30 IST   |   Updated On 2024-04-01 14:30:00 IST

கணவர் சூர்யாவால் முடியாததை நடிகை ஜோதிகாவின் படம் முறியடித்துள்ளதாக ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் கலாய்த்து வருகின்றனர். அதற்கு காரணம் ஜோதிகா நடிப்பில் சமீபத்தில் இந்தியில் வெளியான சைத்தான் படம் தான்.

மாதவன், அஜய் தேவ்கன் மற்றும் ஜோதிகா நடித்து ஹாரர் படமாக வெளியான சைத்தான் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. பாக்ஸ் ஆபிஸில் உலகம் முழுவதும் இதுவரை 201.73 கோடி ரூபாய் வசூலை ஈட்டியிருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: ஒன்னுக்கே கஷ்டம்… இதுல ரெண்டா… அந்த படத்தால் கடுப்பில் இருக்கும் நடிகர் சூர்யா…

இந்தியாவில் மட்டும் சைத்தான் திரைப்படம் 142.06 கோடி ரூபாய் வசூலை ஈட்டியிருக்கிறது. இந்த ஆண்டு இதுவரை வெளியான படங்களிலேயே ஹனுமான் திரைப்படம் 300 கோடி வசூலை ஈட்டிய நிலையில், குண்டூர் காரம், மஞ்சுமெல் பாய்ஸ், ஃபைட்டர் உள்ளிட்ட படங்கள் தான் 200 கோடி வசூலை கடந்தன.

இந்நிலையில், அந்த வரிசையில் ஜோதிகா, அஜய் தேவ்கன் மற்றும் மாதவன் நடித்து வெளியான பேய் படமான சைத்தான் திரைப்படம் 200 கோடி வசூலை கடந்து பாலிவுட்டுக்கு மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் வெற்றியை கொடுத்திருக்கிறது.

இதையும் படிங்க: ஐயோ வயசு பசங்க பாவம்!.. பச்சையா காட்டி இழுக்கும் தமன்னா!.. போட்டோஸ் பாருங்க!..

நடிகர் சூர்யா நடித்து கடைசியாக தியேட்டரில் வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் அதிக பட்சமாக 160 கோடி வசூலை மட்டுமே ஈட்டியதாக கூறப்பட்டது. ஆனாலும், அந்த படம் பெரிய லாபத்தைக் கொடுக்காமல் தோல்விப் படமாகவே அமைந்தது எனக் கூறுகின்றனர்.

கணவர் சூர்யாவை ஓவர்டேக் செய்து விட்டு ஜோதிகா படம் 200 கோடி வசூலை ஈட்டியிருக்கிறது என சூர்யாவை ட்ரோல் செய்து வருகின்றனர். ஆனால், கங்குவா திரைப்படம் வெளியானால் 500 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: கம்பேக் கொடுக்கும் நாயகி…ஏஏஏ படத்தில் நடிக்க இருப்பது இவங்க தானா? கொண்டாட்டம் தான்…

Tags:    

Similar News