Gossip: பார்ட்டிக்கு போய் வேலையை கச்சிதமாக முடித்த விரல் நடிகர்... அதுக்குதான் இந்த திடீர் ஆட்டமா?
இந்த வார கிசுகிசு
Gossip: ஷூட்டிங் வராமல் பிரச்சனை செய்து கொண்டிருந்த விரல் நடிகருக்கு சமீப காலமாகவே மீண்டும் பழைய இடத்தை பிடிக்க வேண்டும் என்ற ஆசை தலைதூக்கியதாம். இதனால்தான் தொடர்ச்சியாக படங்களில் நடித்து வருகிறார்.
அவருடைய உடல் எடை அதிகரித்து இனி இவருடைய மார்க்கெட் அவ்வளவுதான் என ரசிகர்கள் கவலை அடைந்தனர். ஆனால் தன்னை யாரும் தடுக்க முடியாது என நம்பிய விரல் நடிகர் உடல் எடையை பழைய நிலைமைக்கு மாற்றி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினார். அதில் முதல் படமே மிகப்பெரிய வெற்றியை குவித்தது.
இவருக்கு இன்னும் மார்க்கெட் அப்படியே இருக்கிறது என நம்பிய தயாரிப்பாளர்கள் அவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகளை குவித்தனர். இதைத்தொடர்ந்து மிகப்பெரிய பட்ஜெட்டில் ராஜா காலத்து இயக்குனரை தன்னுடைய அடுத்த பட இயக்குனராக அறிவித்தார். ஆனால் இவருக்கு இப்படத்தின் பட்ஜெட் கொஞ்சம் அதிகமாகவே பார்க்கப்பட்டது.
எப்பொழுதும் ஷூட்டிங் சரியாக வராமல் சேட்டை செய்து கொண்டிருந்தவர். இப்படத்திலும் அப்படி ஏதாவது செய்துவிட்டால் மிகப்பெரிய இழப்பு வரும் என தயாரிப்பாளர்கள் தயங்கினராம்.
இதனால் படம் அறிவிப்பு வந்ததிலிருந்து பொட்டிக்குள் தூங்கிக் கொண்டிருந்தது. இந்த சமயத்தில் தனக்கு ஒரு மிகப்பெரிய வெற்றி வேண்டும் என்பதால் சம்பளமே வேண்டாம் என விரல் நடிகர் கூறிவிட்டார். ஆனால் படம் கிட்ட ஆனால் அதில் தனக்கு பங்கு வேண்டும் என்பதை தெளிவாக சொல்லிவிட்டாராம். தமிழ்நாட்டில் மிகப்பெரிய பிரபல விலங்கு தயாரிப்பாளர் கைவசம் வைத்திருந்தாலும் பெரிய தொகை கொடுக்கும் இன்னொரு தயாரிப்பாளரை தேடிக் கொண்டிருந்திருக்கிறார்.
துபாயில் அடிக்கடி பார்ட்டி செல்லும் விரல் நடிகர் அங்கு ஒரு தயாரிப்பாளரை தற்போது லாவகமாக பிடித்திருக்கிறாராம். அதன் காரணமாக தான் சமீபத்தில் விரல் நடிகருடன், ராஜா இயக்குனர் இணைந்து இருந்த புகைப்படம் வெளியாகி வைரலானதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது மூன்று கூட்டணியை தயாரிப்பில் இப்படம் விரைவில் தொடங்கப்படவும் வாய்ப்பு இருக்கிறதாம். ஒழுங்கா ஷூட்டிங் வந்துடனும் என்ற கண்டிப்புடன் இரண்டு தயாரிப்பாளரும் விரல் நடிகருக்கு கண்டிஷன் போட்டு அனுப்பி இருக்கிறார்களாம்.