சன் டிவி சீரியல்களில் என்ன நடக்க போகிறது? மிஸ் பண்ணாம இத பாருங்க!..
சன் டிவி சீரியல்களின் அப்டேட்
Sun serials: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல்களில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோடுகளின் புரோமோ குறித்த தொகுப்புகள்.
கயல்
இதுவரைக்கும் உறவா பார்த்தவங்க. இப்போ எதிரா நிக்கிறாங்க. ”அன்புக்கு போஸ்டிங் வாங்குன கையோட ஷாலினி கூட கல்யாணம்” என கயல் பேச வர அவரை ரூமிற்குள் அழைத்து சத்தம் போடுகிறார் வேதவள்ளி.
ஷாலினி வீட்டில் சிலர் வந்து இருக்க ”அவங்க இந்த விஷயம் குறித்து கேட்டாங்களா? இந்த அதிக பிரசங்கி வேலையெல்லாம் எனக்கு சுத்தமா பிடிக்காது” என்கிறார். இதனால் அழிய போகுது ரெண்டு பேரோட வாழ்க்கை என கயல் பேசுகிறார். ”எது நடந்தாலும் ஷாலினிக்கு நான் கொடுத்த வாக்கு மாறப்போவதில்லை” என்கிறார் கயல்.
சிங்கப் பெண்ணே
”கஷ்டப்பட்டு என் குடும்பத்தை நல்ல நிலைமைக்கு கொண்டுட்டு வரத்துக்கான முதல் வெற்றி இது” என ஆனந்தி கூறுகிறார். அவருக்கு போட்டியில் 7 லட்சம் ரூபாய் பரிசாக கிடைக்கிறது. இந்த வெற்றியை அன்பு மற்றும் ஆனந்தி இணைந்து கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர்.
ஒரு புயல் ஓய்ந்த நிலையில் அன்புவின் மாமா மற்றும் அத்தை வீட்டிற்கு வந்திருக்கின்றனர். ”எதற்கு” என அன்பு அவரின் அம்மாவிடம் கேட்க கல்யாண விஷயமாக தான் என கூறுகிறார். அன்புவை துளசிக்கு தான் கட்டி வைப்பேன் என பிடிவாதமாக அவர் அம்மா இருக்க அவர் கோபத்தை சரி செய்து எப்படி மனதில் இடம் பிடிப்பேன் என ஆனந்தி வருத்தப்படுகிறார்.
மருமகள்
ஆதிரை ”என்னை பிரபு கைவிட்டு இருந்தாலும், எங்க அப்பா அசிங்கப்பட்டு இருந்தாலும் அவர் கண்ணீருக்கும், நான் போட்ட சாப்பிடுவதற்கும் எல்லோரும் பதில் சொல்லியே ஆக வேண்டும்” என்கிறார். பிரபு எனக்கு பத்திரம் வேண்டும் என பிடிவாதமாக கூறுகிறார்.
பைனான்சியர் வீட்டில் எனக்கு தெரிந்த பெரிய மனுஷன் ஒருவர். எவ்வளவு காசு கேட்டாலும் அள்ளி அள்ளி கொடுப்பார் என பேச ஆதிரை கோபத்தில் அவரை அறைந்து விடுகிறார். பின்னர் அடியாட்களையும் அடித்து விட்டு கோவத்துடன் இருக்கிறார்.
அன்னம்
சரவணன் இருக்கு பெண்பார்க்கும் படலம் நடந்து கொண்டிருக்கிறது. அந்த நேரத்தில் அன்னத்தை போலீசார் அங்கு அழைத்து வருகின்றனர். இதில் அன்னம் அதிர்ச்சி அடைகிறார்.
சரவணன் அத்தான் செயினை அறுக்கலை. அவர் வைக்க எடுத்துட்டு வந்ததுதான் பிரச்சனை எனக் கூற சரவணன் கைது செய்யப்படுகிறார். இது குறித்த அன்னம், இதுக்கு எங்க அத்தை என்ன மன்னிக்கவே மாட்டாங்க. விட்டே கொடுக்காத என் மாமா என்ன முடிவெடுக்க போறாரு” என்கிறார்.
மூன்று முடிச்சு
சுந்தரவள்ளி, ”இந்த வீடு என் கைக்குள் இருந்துச்சு. அதை உடைச்சுட்டா இந்த நந்தினி. எல்லா விஷயத்துலயும் என்கூட இருந்தவரு. என்னை எதிர்த்து நிற்கிறார்”. அருணாச்சலத்திடம் சுந்தரவள்ளி என்ன பத்திரிகை வச்சி சாமி கும்பிட்டுக் கொண்டிருக்கிறீர்கள் எனக் கேட்கிறார்.
ஆமாம் பத்திரிகை தான் என்கிறார் அருணாச்சலம். சுந்தரவள்ளி ”இருக்கும் எல்லா பிரச்சினையும் மாறனும்னா நந்தினி இந்த வீட்டை விட்டு போகணும். அதுக்கான வழியை நானே உருவாக்கப் போறேன்”
Also Read: காதுல ரத்தம் வருது.. வேஸ்ட் லக்கேஜ்.. விடுதலை 2வை பங்கம் செய்த ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்!