திணறும் விஜய் டிவி சீரியல்கள்… டாப் கியரில் சன் டிவி… டிஆர்பி நிலவரம் இதான்!..

டிஆர்பியின் இந்த வார தொகுப்பு

By :  Akhilan
Update: 2024-10-18 09:53 GMT

TRP Rating: சின்னத்திரை தொடர்களின் பாப்புலாரிட்டியை தெரிந்து கொள்ள அதன் டிஆர்பி ரேட்டிங் முக்கியமானதாக இருக்கும். அந்த அடிப்படையில் சமீபத்திய வாரத்தில் டிஆர்பியில் விஜய்டிவியை ஓரம் கட்டி இருக்கிறது சன் டிவி.

கடந்த சில வருடங்களாகவே சன் டிவிக்கு கடுமையான போட்டியாக இருந்தது விஜய்டிவி. பிரைம் டைம் சீரியல்களில் முதலிடத்தை போராடி தக்க வைத்தது. ஆனால் அந்த மவுஸை சமீபத்திய மாதங்களாகவே இழந்து வருகிறது. அந்த வகையில் முதலிடத்தில் இருந்த சிறகடிக்க ஆசை நிலைமை கவலைக்கு உள்ளாக்கி இருக்கிறது.

தற்போதைய 41வது வார டிஆர்பியின்படி முதலிடத்தினை சன்டிவியின் கயல் சீரியல் பிடித்துள்ளது. சில வாரங்களாகவே நடந்து வந்த கல்யாண எபிசோட் முடிந்தது. ரசிகர்களுக்கு கயல் சீரியல் டாப் ஹிட்டடித்துள்ளது.

தொடர்ந்து சன் டிவியின் சிங்கப்பெண்ணே சீரியல் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. இந்த தொடரும் பல வாரங்களாக முதலிடத்தில் இருந்த நிலையில் சில வாரங்களாக அதை இழந்து வருகிறது.

மூன்றாம் இடத்தில் சன் டிவியின் மூன்றுமுடிச்சு, நான்காம் இடத்தில் மருமகள்

மற்றும் ஐந்தாம் இடத்தில் சுந்தரி சீரியல் இடம்பிடித்துள்ளது. ராமாயணம் சீரியல் டிஆர்பியில் முன்னேறி ஆறாம் இடத்துக்கு முன்னேறி இருக்கிறது. மிகப்பெரிய சரிவை சந்தித்து இருக்கும் சிறகடிக்க ஆசை ஆறாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

விஜய் டிவியின் பிரபல சீரியலான பாக்கியலட்சுமி டாப் 10 இடத்துக்குள் வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இரண்டாம் பாகமாக ஒளிபரப்பாக இருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஒன்பதாம் இடம் பிடித்துள்ளது. பல மாதங்கள் கழித்து ஜீ தமிழின் கார்த்திகை தீபம் டாப் லிஸ்டுக்குள் வந்துள்ளது.

Tags:    

Similar News