குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு களமிறங்கும் புது ஆங்கர்! இது சரியான போட்டிதான்

மணிமேகலைக்கு பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிறகு ஒரு புதிய ஆங்கர் வரவிருப்பதாக புரோமோ ஒன்று வெளியாகியிருக்கிறது.

By :  rohini
Update: 2024-09-23 08:38 GMT

விஜய் டிவியில் எத்தனையோ ரியாலிட்டி நிகழ்ச்சிகள் பொழுது போக்கு நிகழ்ச்சிகள் என ரசிகர்களை எப்பவுமே தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க சம்பந்தப்பட்ட சேனல் இந்த மாதிரி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறார்கள். எத்தனையோ சேனல்கள் இருந்தாலும் ரசிகர்கள் ஞாயிற்றுக் கிழமைகளில் விஜய் டிவி முன்பு உட்கார்ந்துவிடுவார்கள். அந்தளவுக்கு ஞாயிறு கிழமையானால் ஏகப்பட்ட பொழுது போக்கு நிகழ்ச்சிகளை டெலிகாஸ்ட் செய்து வருகின்றனர்.

அந்தவகையில் மக்களின் பேராதவரை பெற்ற நிகழ்ச்சியாக இருந்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சி. விஜய் டிவியின் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள் என ஒரு சில பேர் குக்காக போட்டியாளராக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விஜய் டிவியில் காமெடிகளாக இருப்பவர்கள் கோமாளிகளாக மாறிவிடுவார்கள்.

ஒரு குக்குக்கு ஒரு கோமாளி என்ற வ்கையில் ஜோடி பிரித்து நிகழ்ச்சியையே நகைச்சுவையாக்கி கொண்டு செல்வார்கள். கடந்த நான்கு சீசன்களாக இந்த நிகழ்ச்சிக்கு பெரும் ஆதரவு கிடைத்து வந்தது. ஆனால் எப்பொழுது வெங்கட் பட் நிகழ்ச்சியை விட்டு போனாரோ அப்பவே இந்த நிகழ்ச்சியின் மீதுள்ள ஆர்வம் ரசிகர்களிடையே குறைந்தது.

இந்த நிலையில் சமீபத்தில் மணி மேகலைக்கும் பிரியங்காவுக்கும் நடந்த அந்த பிரச்சினை கூட பெரிய பூதாகரமாக மாறியது.இனிமே இந்த நிகழ்ச்சிக்கு நான் வரவே மாட்டேன் என சொல்லிவிட்டு சென்றார் மணிமேகலை. தன் இடத்தில் பிரியங்கா நுழைந்து தலையிடுகிறார் என மணி மேகலை கூறினார்.

இந்த பிரச்சினைக்கு பிறகு ரக்‌ஷன் மட்டுமே நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். இப்போது வந்த தகவலின் படி இந்த நிகழ்ச்சிக்கு புது ஆங்கர் வரவிருப்பதாக விஜய் டிவி நிர்வாகம் ஒரு புரோமோ வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் அடுத்து புதிய ஆங்கர் வரப் போகிறார். அவர் உங்களுக்கு தெரிந்தவராக இருக்கலாம். அல்லது தெரியாதவராகக் கூட இருக்கலாம். இல்லையா மனதுக்கு பிடித்தவராக கூட இருக்கலாம் என ட்விஸ்ட் வைத்துள்ளார்கள். ஆனால் ரசிகர்கள் பெரும்பாலும் யூடியூப்பில் podcastல் பேட்டி எடுத்துவரும் ஏஞ்சலின் வந்தால் நன்றாக இருக்கும் என கூறி வருகிறார்கள். இவர் ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி ஆர் யூ ரெடி ஷோவை தொகுத்து வழங்கி வரவேற்பை பெற்றவர்.

Tags:    

Similar News