பிக்பாஸில் இருந்து வெளியேறிய அருண் பிரசாத், தீபக் சம்பளம் மட்டும் இத்தனை லட்சமா? ஆத்தாடி…
Biggboss Tamil: தமிழ் பிக் பாஸ் சீசன் 8 கடைசி வாரத்தை நெருங்கி இருக்கிறது. இதில் நேற்று மற்றும் இன்று என மீண்டும் இரண்டு எலிமினேஷன்கள் நடந்திருக்கிறது. அருண் பிரசாத் மற்றும் தீபக் வெளியேற்றப்பட்டனர்.
விஜய் சேதுபதி முதல் முறையாக தொகுத்து வழங்கி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. இந்த நிகழ்ச்சியில் முதல்முறையாக அதிக அளவிலான விஜய் டிவி பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
கடந்த முறை போல இந்த முறையும் வீட்டை ஆண்கள் மற்றும் பெண்கள் பகுதி என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. ஆனால் மற்ற சீசன்கள் போல இந்த சீசனும் பரபரப்பான டாஸ்குகளை கொடுக்க தவறிவிட்டது என தான் கூற வேண்டும்.
இந்நிலையில் போட்டியாளர்கள் அவர்கள் நடந்து கொண்டதை வைத்து ரசிகர்கள் அவர்களை விரும்ப தொடங்கினர். தொடர்ச்சியாக வீட்டில் பெரிய அளவு கண்டெண்ட்டுகளும் கிடைக்கவில்லை. முதல் சில வாரங்களைத் தொடர்ந்து போட்டியாளர்கள் டபுள் எலிமினேஷன்களில் வெளியேறினர்.
அதுபோல இந்த வாரமும் டைட்டிலை வெல்லுவார் என எதிர்பார்க்கப்பட்ட தீபக் மற்றும் அருண் பிரசாத் என இருவரும் வெளியேறியிருக்கின்றனர். நன்றாக விளையாட வந்த தீபக் இந்த வாரம் வந்த பழைய போட்டியாளர்களால் நிலைமையே தலைகீழாக மாறியது. தொடர்ந்து இன்று அவர் எலிமினேஷன் எபிசோட் வெளியாகும்.
அது மட்டுமல்லாமல் கடந்த சீசன் டைட்டில் வின்னரான அர்ச்சனா ரவிச்சந்திரனின் காதலரும், நடிகருமான அருண்பிரசாத்தும் நேற்றைய எபிசோடில் வெளியேறி இருக்கிறார். இவர்கள் இருவருக்கும் கொடுத்த சம்பளம் குறித்த ஆச்சரிய தகவல்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
அருண் பிரசாத்திற்கு ஒரு நாளைக்கு சம்பளமாக இருபதாயிரம் பேசப்பட்டிருக்க 98 நாள் வீட்டிற்குள் இருந்த அவருக்கு 19 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இதுபோல நடிகர் தீபக்கிற்கும் ஒரு நாளைக்கு சம்பளமாக முப்பதாயிரம் வரை கொடுக்கப்பட்டிருந்தது. இதனால் 98 நாளுக்கு 29 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.