சன் டிவி சீரியல் பார்க்க போறீங்களா? இத மிஸ் பண்ணிடாதீங்க…

By :  Akhilan
Update: 2025-01-10 11:07 GMT

Sun Serials: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டாப் டிஆர்பி ஹிட் சீரியல்களில் இன்று நடக்க இருக்கும் எபிசோடுகளுக்கான ப்ரோமோ குறித்த அப்டேட்.

மருமகள் : பாட்டி தாத்தா போட்டோவை எடுத்து குப்பையில் வைக்க, ஆதிரை இந்த போட்டோவை எதுக்கு வைக்கிறீங்க எனக் கேட்கிறார். இதுவும் குப்பையில் போட வேண்டியதுதான் என பாட்டி கூறி விடுகிறார்.

ஆதிரை அப்பா, தன் பிள்ளைகளை அழைத்து ஒரு ஆசையை சொல்லத்தான் அழைத்தேன் என்கிறார். அதை மனோகரி ஒளிந்து கேட்கிறார். வீட்டிற்கு வரும் பிரபு, ஆதிரை என் தாத்தா போட்டோ காணும். யார் எடுத்தது என சண்டை போடுகிறார்.

மூன்று முடிச்சு: நந்தினி பொங்கலுக்கு ஊருக்கு செல்வதாக சுந்தரவல்லி இடம் கூறுகிறார். இப்போ ஆனா திரும்ப வந்துடாத அங்கேயே இருக்கணும் என மிரட்டுகிறார் சுந்தரவல்லி.

அருணாச்சலம் நந்தினிக்கும், நந்தினி வீட்டாருக்கும் புது துணி எடுத்து அனுப்பி விடுகிறார். இதைக் கேட்கும் மாதவி இங்கேயே யாருக்கும் இன்னும் எடுக்கல. அதுக்குள்ள அங்க எடுத்து பார்சல் அனுப்பியாச்சா என மனதிற்குள் பேசிக்கொள்கிறார்.

மாதவி சுந்தரவல்லியிடம் இது குறித்து கூற, ஜோடியா போகட்டுமே. போயிட்டு திரும்பி வரும்போது சூர்யா மட்டும் வருவான் என்கிறார்.

அன்னம்: சரவணன் நீங்க ஆசைப்பட்ட மாதிரியே நான் அன்னத்தையே கல்யாணம் பண்ணிக்கிறேன் என வந்து கூற குடும்பமே ஆச்சரியப்படுகிறது. அன்னம் தன் தங்கையிடம் இந்த நிச்சயத்தை ரத்து பண்ணுறதுதான் நல்லது எனப் பேசிக்கொண்டு இருக்கிறார்.

கார்த்திக் மாமாவிடம், நாளைக்கு சரவணனுக்கு அன்னம் மனைவியாக வந்தா அவனை சரி செய்து மாற்றிவிடுவாள். ப்ளீஸ்ப்பா என சமாதானம் செய்கிறார்.

சிங்கப் பெண்ணே: ஆனந்தி அன்பு தங்கையிடம், உங்க அம்மாவை பார்த்துக்க அன்பு இருக்காரு. நான் இருக்கேன். நீ பரீட்சை எழுதுற வழியை பாரு போ என்கிறார். ஆனந்தி, இவங்களை சும்மா விடக்கூடாது. எல்லாரையும் பிடிச்சு கொடுக்கணும் என்கிறார்.

அன்பு நண்பன், இது அந்த ராஸ்கல் வேலையா தான் இருக்கும் என நினைக்கிறார். மகேஷ் வர நர்ஸ் கையெழுத்து போட பேப்பரை நீட்ட எதுக்கு கையெழுத்து எனக் கேட்கிறார் ஆனந்தி.

Tags:    

Similar News