அசிங்கப்படும் ரோகிணி... பல்ப் வாங்கிய ஈஸ்வரி... மனம் உடைந்த அப்பத்தா…
விஜய் டிவி சீரியல்கள்
Vijay serials: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி, சிறகடிக்க ஆசை மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 தொடர்களில் இன்று நடக்க இருக்கும் எபிசோட்களின் தொகுப்புகள்.
சிறகடிக்க ஆசை: முத்து மற்றும் மீனா பணம் குறித்து விசாரித்துக் கொண்டிருப்பதை கூறுகின்றனர். பின்னர் சமைக்கவில்லை என சாப்பாடு வாங்கி வந்ததை மீனா கூறுகிறார். மனோஜ் மற்றும் ரோகிணிக்கு வாங்கி வரவில்லையா என விஜயா கேட்க அன்று அவர்கள் நடந்து கொண்டது குறித்து முத்து சொல்கிறார்.
ரோகிணியை தோசை சுட கூற விஜயாவிற்கு பாலையும் சூடு பண்ணி தர சொல்கிறார். இதனால் அவர்கள் நக்கலாக பேசிவிட்டு செல்ல விஜயா ரோகிணியை முதலில் காசை கொடுக்க பாருங்க அப்பதான் நமக்கு மரியாதை என்கிறார். ரோகிணி வேகாமல் தோசை சுட்டு விஜயா கடுப்பாகிறார்.
சிட்டியிடம் கடன் வாங்கிய விஷயம் குறித்து மீனா ரோகிணியிடம் கேட்கிறார். அதுபோல முத்து இது குறித்து ரவியிடம் சொல்லிக் கொண்டிருக்க அவரது மனோஜிடம் கூறிவிடுகிறார். மனோஜ் நேரடியாக வந்து ரோகிணியிடம் இது குறித்து கேட்க அவர் அதிர்ச்சியாகி நிற்கிறார்.
பாக்கியலட்சுமி: ஈஸ்வரி சோகமாக வந்த அமர்ந்திருக்க பாக்கியா அவரை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகிறார். ஹாஸ்பிடலுக்கு அழைத்து செல்லலாம் என கோபியை ஈஸ்வரி கூப்பிட அங்கு வரும் ராதிகா தான் கூட்டி செல்வதாக கூறுகிறார். செழியனும் தனக்கு மீட்டிங் இருப்பதால் அவரால் வர முடியாது எனக் கூறி விடுகிறார்.
ஒரு கட்டத்தில் ஈஸ்வரி கோபி மற்றும் ராதிகாவுடன் ஹாஸ்பிடலுக்கு கிளம்புகிறார். ஆனால் உள்ளே டாக்டரை பார்க்க விடாமல் ராதிகா கோபியை அழைத்து செல்கிறார். இதை பாக்கியாவிடம் வந்து சொல்லிக் கொண்டிருக்கிறார் ஈஸ்வரி.
இதை கேட்கும் பாக்கியா இப்போ ஒரு ராதிகாவுக்கு தான் கோபி மேல உரிமை இருக்கு என்கிறார். இதில் கோபமாகும் ஈஸ்வரி ஹாலில் படுத்திருக்க அப்போது வரும் கோபி அம்மாவை சமாதானம் செய்கிறார். மன அழுத்தம் இல்லாமல் தான் இருக்க வேண்டும் எனக் கூற ஈஸ்வரி அமைதியாகி விடுகிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2: பழனிவேல் வீட்டில் எல்லோரும் கோவிலில் கவலையாக இருக்க பெண் வீட்டார் தங்களால் வர முடியாது எனக் கூறிவிடுகின்றனர். இதில் செந்தில் மற்றும் சரவணன் வருத்தமாகி கோயிலுக்கு வந்து அங்கு நடந்த விஷயங்களை வீட்டாரிடம் கூறிக் கொண்டிருக்கின்றனர்.
இதில் பாண்டியன் கோபமாகி சொந்த தம்பி கல்யாணத்தை நிறுத்த இவங்களுக்கு எப்படி தான் மனசு வந்தது என சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார். மனம் உடைந்து போன அப்பத்தா வீட்டிற்கு வந்து தன் மகன்களிடம் பழனிவேலுக்காக நியாயம் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
அப்போது வீட்டு வாசலுக்கு வரும் பாண்டியன் அவர்களிடம் சத்தம் போட்டுக் கொண்டிருக்கிறார். பழனிக்கு பாசத்தில் எல்லாம் பெண் பார்க்கவில்லை. எங்க மூஞ்சில கறி பூச நெனச்ச என சக்திவேல் திமிராக பேசுகிறார்.