முத்து, மீனாவின் சிஐடி வேலை… ராதிகாவின் அதிகாரம்.. பாண்டியன் குடும்பத்தில் சிக்கல்!..

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் எபிசோட்களின் தொகுப்புகள்

By :  Akhilan
Update: 2025-01-07 03:41 GMT

சிறகடிக்க ஆசை - பாக்கியலட்சுமி 

Vijay serials: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை, பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 தொடர்களில் இன்று நடக்க இருக்கும் எபிசோடுகளின் தொகுப்புகள்.

பாக்கியலட்சுமி

கோபியை சமாதானம் செய்து ஈஸ்வரி வாக்கிங் செல்லலாம் என அழைத்து செல்ல வாசல் வரை வந்து விடுகிறார். அப்போது வரும் ராதிகா அவர் வேகத்துக்கு உங்களால் நடக்க முடியாது நீங்கள் இருங்கள் நான் அழைத்து செல்கிறேன் எனக் கூறி சென்று விடுகிறார். அதில் கடுப்பான ஈஸ்வரி அவர்களுக்கு பின்னாலே பார்க்கிற்கு செல்கிறார்.

கோபி மற்றும் ராதிகா இருவரும் வாக்கிங் செல்ல ஒரு கட்டத்தில் கோபி நடக்க முடியாமல் அமர்ந்து விடுகிறார். ராதிகா மற்றும் தனியாக வாக்கிங் செல்ல அங்க பாக்கியாவை பார்த்து இருவரும் பேசிக் கொண்டு நடக்கின்றனர். பின்னால் வரும் ஈஸ்வரி ராதிகா மற்றும் பாக்கியா இருவரும் வாக்கிங் செல்வதை கூறுகிறார்.

வீட்டில் கோபியிடம் மயூ பாடத்தில் சந்தேகம் கேட்க அந்த நேரத்தில் அங்கு வரும் இனியா பொறாமையால் அவரை தன் பக்கம் திருப்ப சில விஷயங்களை பேசுகிறார். இதில் கடுப்பான ஈஸ்வரி மயூவை திட்ட ராதிகா வந்து அவரை அழைத்து செல்கிறார். கோபி ஈஸ்வரிடம் அவங்க ரெண்டு பேரையும் நீங்க எதுவும் சொல்லாதீங்க ப்ளீஸ் எனக் கூறிவிட்டு செல்கிறார்.

சிறகடிக்க ஆசை

மனோஜ் மற்றும் ரோகிணி இருவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அந்த கதிரை கண்டுபிடித்து வீட்டில் பணத்தை கொடுக்க வேண்டும் எனக் கூற மனோஜ் உங்க அப்பாவிடம் காசு கேட்கலாமே எனக் ரோகிணியிடம் கேட்கிறார். இதில் கடுப்பான ரோகிணி அவரிடம் சத்தம் போடுகிறார்.

சீரியல் நடிகர் வீட்டில் மீனாவின் போட்டி டெக்கரேஷன் பெண் வந்து ஆர்டருக்கு பேசிவிட்டு செல்கிறார். அவருக்கு பின்னால் முத்து சொன்னது போல மீனா நடிகருடைய வீட்டிற்கு வந்து தான் வியாபாரம் செய்வதாக கூறி பூ ஆர்டர் எடுத்துக்கொண்டு வெளியில் வருகிறார்.

அவர் வாசலுக்கு வரும்போது டெக்ரேசன் பெண் நடிகருடைய தங்கைக்கு கல்யாணம் அந்த ஆர்டரை பிடிக்க தானே வந்து என உண்மையை கூறிவிட மீனாவிற்கு ஒரு ஐடியா வந்து விடுகிறது. பின்னர் இதை சென்று முத்துவிடம் கூறி கதிரை பிடிக்க பிளான் ஒன்றை போடுகின்றனர்.

வித்யா வண்டியில் சென்று கொண்டிருக்க அவருக்கு எதிராக மீனாவை காதலித்தவர் வந்து இடித்து விடுகிறார். பின்னர் அவர் தனக்கு தெரிந்த மெக்கானிக்கிடம் வித்யாவை அழைத்து செல்கிறார். வீட்டில் முத்து இருந்த விஷயங்களை கூறிக் கொண்டிருக்க மனோஜ் எப்ப காசு கிடைக்கும். கிடைச்சா என்னிடம் கொடுத்திடணும் என்கிறார். இதில் கடுப்பான முத்து நான் யார் காசையும் எடுக்க மாட்டேன். அப்பா சொன்னதுக்காக தான் இதையே செய்தேன் எனக்கூறி செல்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2

பழனிவேல் நிச்சயதார்த்தம் கோயில் தயார் செய்து கொண்டிருக்க தன்னுடைய அம்மா வருமா என காத்துக் கொண்டிருக்கிறார். குடும்பமாக பேசி சந்தோஷமாக சிரித்துக்கொண்டிருக்க தங்கமயிலின் அம்மா வருகிறார். அவர் அப்பா ஏன் வரவில்லை என கேட்க காலில் சுளுக்கு ஏற்பட்டு விட்டதாக சமாளித்து விடுகிறார்.

தங்கமயில் தனியாக அழைத்து விஷயத்தை கேட்க குடித்துவிட்டு படுத்து இருப்பதாக கூறுகிறார். இதைத் தொடர்ந்து அப்பத்தா தன்னுடைய மருமகள்களுடன் பங்க்ஷனுக்கு வர அனைவரும் சந்தோஷப்படுகின்றனர். ஆனால் பெண் வீட்டார் வர தாமதமாவது குறித்து எல்லோரும் கவலையாக பேசிக் கொண்டிருக்கின்றனர்.

அந்த நேரத்தில் பெண்ணின் தாய்மாமன் வந்து இந்த நிச்சயதார்த்தம் நடக்காது என கூறி செல்கிறார். காரணம் கேட்டேன் சொல்லாததால் சரவணன் மற்றும் செந்திலுடன் தங்கமயில் மற்றும் மீனா அவர்கள் வீட்டில் சென்று பேச செல்கின்றனர். பழனிவேல் அண்ணன்கள் வந்து எடுபுடி வேலை பார்ப்பதாக பழனிவேலை பற்றி கூறிவிட்டதாக சொல்லி அதிர்ச்சி கொடுக்கிறனர்.

Tags:    

Similar News