Bakkiyalakshmi: இனியாவுக்கு இவ்வளவு சுயநலம் ஆகாது… ஈஸ்வரியையே மாட்டிவிட்டாங்களே!...

By :  Akhilan
Update: 2025-01-10 03:27 GMT

Bakkiyalakshmi: விஜய் டிவி பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில் நடந்தது ரசிகர்களுக்கு எந்த வகையில் பிடித்தமானதாக இருக்கும் என்பதன் தொகுப்புதான் இது.

இனியா ஹாலில் உட்கார்ந்து டான்ஸுக்கு என்ன மேக்கப் போடுவது என கடை பரப்பி போட்டு பார்த்து கொண்டு இருக்கிறார். அதை பார்த்து செல்வி என்ன செய்கிறார் எனக் கேட்க பாக்கியா டான்ஸுக்கு மேக்கப் போட பார்த்துக்கிட்டு இருக்கா என்கிறார்.

அந்த நேரம் பார்த்து இனியாவுக்கு போன் வந்து வெளியே போக பாக்கியா மற்றும் செல்வியும் பரணில் சாமானை எடுக்க செல்கின்றனர். அந்த நேரத்தில் மயூ வந்து மேக்கப்பை போட்டு பார்க்க அங்கையே தெரிந்துவிடுகிறது. அடுத்த பிரச்னைக்கு ஆரம்பம் என்பது.

சரியாக மயூவை வந்து பார்க்கும் இனியா சத்தம் போட அதே நேரத்தில் ஈஸ்வரியும் வந்து குதிகுதியென குதிக்கிறார். அதுமட்டுமல்லாமல் நடக்காத விஷயமெல்லாம் அடித்துவிட நமக்கே என்ன இது சின்ன பிள்ளைத்தனமா இருக்கு என எண்ணம் வந்துவிடுகிறது.

ஒரு கட்டத்தில் உள்ளே புகுந்த பாக்கியா இனியாவிடம் என்ன என விசாரிக்க நான் எதும் சொல்லலை. பாட்டி தான் திட்டுனாங்க என வகையாக மாட்டிவிடுகிறார். இதில் ஈஸ்வரியே அடிப்பாவி லெவலுக்கு லுக் விட்டு சமாளித்துவிடுகிறார்.

இனியாவை மன்னிப்பு கேட்க வைத்து அங்கிருந்து மயூவை அனுப்பிவிட கோபி பாக்கியா செய்தது குறித்து ஓவராக பாராட்டுகிறார். நீங்க உங்க முன்னாள் பொண்டாட்டியை புரிஞ்சிட்டீங்கனு தெரியுது. ஆனா இதெல்லாம் கொஞ்சம் ஓவருதான். அடக்கி வாசிங்க சார்.

ராதிகா டிவி பார்த்து கொண்டு இருக்க எதுக்கு இவ்வளவு சத்தம் என ஈஸ்வரி வருகிறார். ராதிகாவை பார்த்து கடுப்பாகி இருவருக்கும் வாக்குவாதம் வர கோபி வந்ததும் டிவி ரிமோட் சரியில்லை என சமாளிக்கிறார். ஈஸ்வரி ஆவென முழிக்க நீங்க பண்ணும்போது இப்படிதானே இருக்கும் என்பதும் நம்ம மைண்ட் வாய்ஸ்.

கோபியை ராதிகா அழைத்து சென்றுவிட ஈஸ்வரி தன் பேரப்பிள்ளைகளை அழைத்து ஒரு பஞ்சாயத்து வைத்துவிடுகிறார். இன்னைக்கு ஒரு வேட்டை இருக்குனு நினைச்சா கடைசியில் பாக்கியா கேஸ் நோட்டீஸ் வந்து டேக் டைவர்ஸன் ஆக்கிவிட்டுடுச்சு. நாளைக்கு ஈஸ்வரி பேச்சை கேட்கணுமேங்கிற ஃபீலிங்கோட எபிசோட் முடிஞ்சிது.


Tags:    

Similar News