மலேசியாவில் வந்த நபர்கள்… எஸ்கேப்பான ரோகிணி… ஓரளவுக்கு தான் பொறுமை
Siragadikka Aasai: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைய எபிசோடு குறித்த தொகுப்பு.
மீனா சமையலுக்கு காய்கறி வெட்டிக் கொண்டிருக்க அவருடன் வந்து ஸ்ருதி அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார். உங்களால மட்டும் இப்படி எவ்ளோ வேலை செய்ய முடியுது. நான்தான் தொடர்ந்து வேலை செய்யணும்னா ஏதாவது சாப்பிடுவேன் என்கிறார்.
நீங்கள் மட்டும் எதுக்கு இங்க எல்லா வேலையும் செய்யணும். யாராச்சும் மெய்ட் வைத்துக் கொள்ளலாம் இல்லையா எனக் கேட்கிறார். மீனா, நான் வரவரை இங்கே ஒருவர் வேலை செய்து வந்தார். நான் வந்து அடுத்த நாளே அவரை அத்தை வேலையை விட்டு நிறுத்திவிட்டார்.
அவர்களைப் பொறுத்தவரை நான் இங்கு சம்பளம் இல்லாத வேலைக்காரி அவ்வளவுதான் என்கிறார். இது கோபமான ஸ்ருதி நான் கேட்கவா என எழுந்திருக்கியா அவரை அமைதிப்படுத்துகிறார் மீனா. அந்த நேரத்தில் அங்கு வரும் விஜயா எதற்கு இவ்வளவு காய் வெட்ற கல்யாண வீட்டுக்கு சமைக்க போறியா எனக் கேட்கிறார்.
மீனா உங்க பையன் தான் செய்ய சொன்னாரு. எது கேட்கிறதா இருந்தாலும் அவரிடம் கேட்டுக்கோங்க என்கிறார். விஜயா இது குறித்து அண்ணாமலையிடம் கூட என்னிடம் கூற ஏற்கனவே சொல்லிவிட்டதாக அவரிடம் சொல்லிவிடுகிறார்.
மனோஜ் போலீஸ் ஸ்டேஷன் சென்று சிசிடிவி கேமரா விஷயமாக பேச நாங்கள் விசாரித்துக் கொள்ள மாட்டோமா நீ ஏன் தேவையில்லாத வேலை செய்ற என அவரை கடுப்படிக்கும் போலீசார் புகார் கொடுத்துவிட்டு செல்ல சொல்கின்றனர்.
முத்து காரில் வந்த பெரியவர்களை வீட்டிற்கு அழைத்து வருகிறார். எல்லோரும் ஹாலில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்க அண்ணாமலை அவர்கள் எந்த ஊரில் இருந்து வந்திருப்பதாக கேட்க மலேசியா என கூறுகின்றனர்.
இதைக் கேட்டு விஜயா, என்னுடைய மருமகளும் மலேசியா தான் எனக் சந்தோஷமாக ரோகிணியை கூப்பிடுகிறார். ஆனால் இதை கேட்கும் ரோகிணி அதிர்ச்சியாகி பதற்றம் அடைகிறார். என்ன செய்வது என்று தெரியாமல் பஞ்சை வாயில் திணித்துக்கொண்டு பல்வலி போல நடித்து விடுகிறார்.
இதை பார்த்து அதிர்ச்சியான முத்து இதில் ஏதோ தவறு இருப்பதாக சந்தேகம் கொள்கிறார். ரோகிணி தனியாக போகலாம் என நினைக்க அவருடன் ஸ்ருதி அனுப்பி வைக்கிறார் விஜயா. பின்னர் எல்லாரும் சாப்பிடலாம் என செல்கின்றனர்.