Pandian Stores: குமரவேலுவின் திட்டத்தால் மீண்டும் குழம்பும் அரசி… என்ன நடக்க போகுதோ?

By :  AKHILAN
Published On 2025-05-16 15:55 IST   |   Updated On 2025-05-16 15:55:00 IST

Pandian Stores: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் இரண்டாவது சீசனில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.

எல்லாரும் புடவை எடுத்துவிட்டு வீட்டுக்கு வந்து கொண்டு இருக்கின்றனர். எல்லாருக்குமே புடவை எடுத்தாச்சு என செந்தில் மற்றும் ராஜி கூற பின்னர் மாப்பிள்ளை குறித்தும் பேசுகின்றனர். அரசிக்கு செந்தில் அட்வைஸ் கொடுத்து கொண்டு இருக்கிறார்.

நடந்த எதையும் யோசிக்காத. உனக்கு எதோ கெட்ட நேரமும் என நினைச்சிக்கோ என்கிறார் செந்தில். அரசி அதுவா நியாபகம் வருது அண்ணே என்கிறார். பின்னர் எல்லாருமே தப்பு செய்யாத ஆளே இல்ல. நீ கவலைப்படாதே என ஆறுதல் சொல்லி அவரை தேற்றுகின்றனர்.

சந்தோஷமா இரு என செந்தில் கூற இருந்தாலும் பயமா இருப்பதாக அரசி கூறுகிறார். கதிர் மற்றும் செந்தில் இருவரும் மாற்றி மாற்றி சொல்லி அரசிக்கு ஆறுதல் சொல்லி தேற்றி விடுகின்றனர். வீட்டுக்கு வரும் அரசி புடவையை பாத்து கொண்டு இருக்கிறார்.

சதீஷுடன் பேசலாம் என நினைத்து கொண்டு இருக்க அப்போ சுகன்யா ரூமிற்குள் வருகிறார். என்னாச்சு எனக் கேட்க குமாரு என தொடங்கியதுமே அவரை அடக்குகிறார் அரசி. எனக்கு அவர பத்தி பேச எந்த விருப்பமும் இல்லை என்கிறார் அரசி.

சுகன்யா உடனே போட்டோவை காட்டி குமாருடன் என்ன இப்படி போட்டோ எடுத்திருக்க எனக் கேட்க, அரசி இதெல்லாம் நான் எடுக்காத போட்டோ என்கிறார். குமாருடன் பிரண்ட் வீட்டுக்கு போனதாக அங்கே இப்படி போட்டோ எடுத்தாக சுகன்யா சொல்ல அரசி நான் எந்த தப்பும் செய்யலை என்கிறார். 

 

எனக்கு உங்க கிட்ட இதை புரிய வைக்க விரும்பலை எனக் கூற குமார் எனக்கு தேவையில்லை. அவன் சும்மா விடமாட்டான் என்கிறார். சுகன்யா என் போனில் இருந்து பேசி இந்த பிரச்னையை முடிச்சிவிடு எனக் கூறி அரசியை வலுகட்டாயம் செய்து பேச வைக்கிறார்.

அந்த சமயத்தில் குமார் கால் செய்ய அரசியிடம் கொடுத்து பேச சொல்கிறார். அரசியிடம் குமார் என்னை விட்டு வேற ஒருத்தனை கல்யாணம் செஞ்சிப்பீயா எனக் கேட்கிறார். நீ என்னை விட்டு வேற ஒருத்தரை கட்டிக்கிட்டா இந்த போட்டோவை எல்லாருக்கும் அனுப்புவேன். ஊர் முழுசா போஸ்டர் அடிச்சு ஒட்டுவேன் என்கிறார்.

அரசி போனை வைத்து விட சுகன்யா தனக்கு எதுவும் தெரியாதது போல நடிக்கிறார். அரசி இதை வீட்டில் சொல்லலாம் என ஹாலுக்கு செல்கிறார். அங்கு பாண்டியன் இருக்க அவர் அரசியிடம் இந்த கல்யாணம் உனக்கு பிடிச்சு தானேமா பண்ற எனக் கேட்கிறார். அரசி கலங்கி இருக்கிறார்.

Tags:    

Similar News