Pandian stores2: காணாமல் போன அரசி… அதிர்ச்சியில் குடும்பத்தினர்… என்ன நடக்க போகுதோ?
Pandian stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடக்க இருக்கும் எபிசோட்டின் தொகுப்புகள்.
காலையில் ராஜி மற்றும் மீனா இருவரும் அரசியை பார்க்க செல்ல அவர் ரூமில் இல்லாமல் இருக்கிறார். அவர்கள் அதிர்ச்சியுடன் வீட்டில் இருக்கும் எல்லா இடங்களையும் சுற்றி தேடுகின்றனர்.
ஒரு கட்டத்தில் வீட்டில் இருப்பவர்கள் எல்லாருக்குமே அரசி காணாமல் போன விஷயம் தெரிய அதிர்ச்சி அடைகின்றனர். சுகன்யா என்ன செய்வது என தெரியாமல் முழித்துக்கொண்டு இருக்கிறார்.
இது குமரவேல் வேலையாக தான் இருக்கும் என நினைக்க செந்தில் மற்றும் கதிர், அரசி தங்களிடம் சொன்ன தயங்கியது குறித்து நினைத்துக்கொண்டு இருக்கின்றனர். மகன்கள் எல்லாரும் கடுப்பில் குமாரிடம் சண்டை போட செல்ல நினைக்கின்றனர்.
அவர்களை தடுக்கும் சுகன்யா நான் போய் பார்த்துவிட்டு வருவதாக சொல்கிறார். இப்போ நீங்க போய் சண்டை போட்டா அது சுத்தி இருக்க எல்லாருக்குமே விஷயம் தெரிஞ்சிடும் என்கிறார். மற்றவர்களுக்கும் அதுதான் சரியெனப்படுகிறது.
உடனே சுகன்யா குமார் வீட்டிற்கு சென்று பார்க்க யாருமே இல்லாமல் இருக்க தயக்கமாக இருக்கிறார். அப்போ பாட்டி வர கல்யாணம் வேலை எப்படி நடக்குது என கேட்க சுகன்யா நல்லா நடப்பதாக சொல்கிறார். எனக்கும் கல்யாணத்துக்கு வரணும் ஆசை என்கிறார்.
சுகன்யா நீங்க எப்படி வர முடியும்? மாமாங்க அதுக்கு ஒப்புக்கொள்ளுவாங்களா எனக் கேட்க இத்தனை வருஷமா அவர்களுக்காக யோசிச்சிட்டேன். இந்த முறை என் மகளுக்காக யோசிக்கணும் என ஆசைப்படுவதாக சொல்கிறார்.
அந்த நேரத்தில் சக்திவேல் வர சுகன்யா அப்பத்தாவை கண்ணை காட்டி அடக்குகிறார். அவரும் சக்திவேல் வந்ததும் அங்கு இருந்து நகர்ந்து விடுகிறார். சுகன்யா குமரவேல் எங்கு எனக் கேட்க அவன் வீட்டில் இல்லையே என்கிறார். நேத்து எனக்கு கால் செய்தான் எனக் கூறி நடந்த விஷயத்தை சொல்கிறார்.