Siragadikka Aasai: முத்து மற்றும் ரோகிணிக்கு நடக்கும் சண்டை… மறுபடியும் ஒன்னுக்கூடிய பிரதர் அண்ட் கோ!

By :  AKHILAN
Update: 2025-05-24 06:19 GMT

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.

ஷோரூமில் தன்னுடைய நண்பரிடம் பேசிக்கொண்டு இருக்கிறார் மனோஜ். அந்த நேரத்தில் சரியாக சாப்பாடு வர இருவரும் சாப்பிட அமர்கின்றனர். உனக்கு பசிக்கிற நேரத்தில அந்த பொண்ணு சாப்பாடு அனுப்பி இருக்கு. உன்மேல எவ்வளோ பாசம் இருக்கணும் என்கிறார்.

அம்மா பேசக்கூடாதுனு சொல்லி இருக்காங்க என மனோஜ் கூற கொஞ்ச நாள் யோசிக்கும். என்னுடைய நண்பர் அப்படி தான் ஆறுமாதம் பொண்டாட்டியோட பேசாம இருந்தா. திடீரென அந்த பொண்ணு வேற ஒரு செட்டப்புடன் போச்சு எனக் கூற மனோஜ் ரோகிணி செய்யமாட்டா என்கிறார்.

அப்படிலாம் சொல்ல முடியாது எனக் கூற மனோஜ் யோசிக்கிறார். மறுபக்கம் மீனா மற்றும் முத்து பேசிக்கொண்டு இருக்கின்றனர். எதுக்கு வீட்டில பேசுனீங்க எனக் கேட்க ஏன் என்னை உன் வீட்டு மூத்த பிள்ளையா தானே நினைச்ச எனக் கேட்க அப்படியில்லை என்கிறார் மீனா. 

 

எனக்கு யோசிச்செல்லாம் பேசத்தெரியாது. இதில் இரண்டு ஜாதகம் இருக்கு. ஒன்னு ஐடி மாப்பிள்ளை மற்றும் பேங்க் ஊழியர். நான் கார் ஓட்டுறவனை பார்க்கலை என்க அதுக்கு என்ன குறைஞ்சிருக்கு. நான் நல்லா தானே இருக்கேன் என்கிறார்.

இப்போ சீதா இன்னொருத்தரை மனசுல வச்சிட்டு இருக்கா. பிடிக்காம எப்படி கட்டிக்க முடியும் எனக் கூற நீ என்னை பிடிச்சிக்கிட்டா கல்யாணம் செஞ்சிக்கிட்ட என்கிறார். நான் யாரையும் நினைச்சிக்கிட்டு இருக்கலையே சீதா அப்படி இல்லை என்கிறார்.

நீங்க செஞ்சதுலையும் தப்பு இருக்கு என மீனா கூற அடிக்க கை ஓங்குகிறார் முத்து. பின்னர் அவர் சென்று விட வீட்டில் சீதா அழுதுக்கொண்டு இருக்க அருண் போன் பண்ணுகிறார். ஆனால் சீதா எடுக்காமல் அதை கட் செய்ய இதை கவனிக்கிறார் சீதா.

ரவி மற்றும் ஸ்ருதி இருவரும் பேசிக்கொண்டு இருக்க ஹோட்டல் திறப்பதை கூறித்து செல்ல நாளை ஒரு இடத்தினை பார்க்க வேண்டும் என்கிறார். முதலில் ரவி நீ அவசரப்பட்டு செய்ற எனக் கூற யோசிச்சா செஞ்சிடணும் எனக் கூறி அவரை சம்மதிக்க வைக்கிறார்.

பின்னர் மாடியில் முத்து, ரவி மற்றும் மனோஜ் மூவரும் குடித்து கொண்டு இருக்கின்றனர். மனோஜ் தன் நண்பர் சொன்னது குறித்து சொல்ல முத்துவின் மனோஜ் பயத்தினை அதிகப்படுத்தி விடுகிறார்.

Tags:    

Similar News