சன் டிவியை நெருங்கும் விஜய் டிவி தொடர்கள்… சிறகடிக்க ஆசைக்கு இடத்துக்கு வந்த ஆபத்து…

By :  AKHILAN
Update: 2025-05-22 13:22 GMT

TRP: தமிழ் சின்னத்திரையில் இந்த வாரம் டாப் 10 டிஆர்பியை பிடித்த சீரியல்களின் அதிகாரப்பூர்வ அப்டேட் வெளியாகி இருக்கிறது.

கடந்த சில வாரங்களாகவே சன் டிவி மற்றும் விஜய் டிவிக்கு டிஆர்பியில் பலத்த போட்டி இருந்து வந்தது. ஆனால் அதை தக்க வைத்து கொள்ளாமல் விஜய் டிவி சன் டிவியிடம் அதை கோட்டை விட்டு தற்போது தள்ளாடி கொண்டு தான் இருக்கிறது.

இந்நிலையில் இந்த வாரம் டிஆர்பி டாப் 10 அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த வாரம் கடைசி இடத்தினை பிடித்து இருக்கும் சீரியல் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம். கார்த்தி நடிப்பில் வெளியாகும் சீரியல் எப்போதுமே நல்ல ஹிட்டை கொடுக்கும்.

அந்த வகையில் இந்த சீரியல் தான் ஜீ தமிழின் ஒற்றை நம்பிக்கையாக டிஆர்பி லிஸ்ட்டில் இணைந்து இருக்கிறது. ஒன்பதாவது இடத்தில் விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் இடம் பெற்றுள்ளது. அரசியின் கல்யாண கதை சென்று கொண்டு இருக்கிறது. 

 

இந்த வாரம் இதில் முன்னேற்றம் இருக்கும் என நம்பப்படுகிறது. எட்டாவது இடத்தில் இருப்பது சன் டிவியின் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல். இரண்டாம் பாகமாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் ரசிகர்களிடம் சுமார் ஆதரவு மட்டுமே பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

சன் டிவியின் அன்னம் சீரியல் ஏழாவது இடத்தில் இருக்கிறது. பெரிய அளவில் இல்லை என்றாலும் ஓரளவு நல்ல வரவேற்புடனே இந்த சீரியல் இiந்த இடத்தில் இடம்பெற்றுள்ளது. ஆறாவது இடத்தில் விஜய் தொலைக்காட்சியின் அய்யனார் துணை சீரியல் இருக்கிறது.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தொடங்கிய இந்த சீரியல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கொடுத்து வரும் நிலையில் டிஆர்பியிலும் முன்னேறி வருகிறது. விஜய் டிவியின் பிரைம் டைம் சீரியலான சிறகடிக்க ஆசை தேவையில்லாத கதைக்களத்தால் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது.

நான்காவது இடத்தில் சன் டிவியின் மருமகள் சீரியல் இருக்கிறது. கேப்ரியல்லா நடிப்பில் சூப்பர்ஹிட்டாகி இருந்தாலும் சில வாரங்களாக முதல் மூன்றாம் இடத்தினை தொட முடியவில்லை. மூன்றாவது இடத்தில் கயல் சீரியல் இருக்கிறது.

கடந்த சில வாரங்களாகவே கயல் முதலிடத்தினை மிஸ் செய்து வருகிறது. இரண்டாம் இடத்தில் மூன்று முடிச்சு சீரியலும், முதல் இடத்தில் சிங்கப்பெண்ணே சீரியலும் இருக்கிறது. தொடர்ச்சியாக இந்த இரண்டு சீரியல்களுக்கும் தான் போட்டி நடந்து வருகிறது.

Tags:    

Similar News