சிங்கப்பெண்ணே தொடரில் பரபரப்பு... ஆனந்தியிடம் மகேஷ் சரணடைவாரா?
சிங்கப்பெண்ணே டிவி தொடர் சன்டிவியில் பரபரப்புக்குப் பஞ்சம் இல்லாமல் போய்க்கொண்டு இருக்கிறது. ஆனந்தியின் அக்கா கோகிலாவின் கல்யாணம் நடந்து முடிப்பதற்குள் பெரிய பூகம்பமே நடந்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். அக்காவின் கல்யாணம் சீரோடும் சிறப்போடும் நடக்க வேண்டும் ஆனந்தி பார்த்துப் பார்த்து ஒவ்வொரு காரியமாக செய்தாள்.
கடைசியில் அவளுக்கே ஆப்பு வந்துவிட்டது. சிங்கப்பெண்ணே சீரியலில் தான் டுவிஸ்ட் மேல் டுவிஸ்ட்டு வந்தவண்ணம் உள்ளது. கல்யாணம் நடக்கும்போது அன்பு தாலி கட்ட நினைத்தான். அதே நேரம் சுயம்பு வந்து ஆட்டையைக் கலைச்சிட்டான். ஆனந்தியின் கர்ப்ப விஷயத்தைத் தம்பட்டம் அடித்து விட்டான்.
இது பூகம்பமாக வெடித்து பஞ்சாயத்து வரை சென்றது. அங்கு ஆனந்தியின் பெற்றோரையும், ஆனந்தியையும் நிறுத்தி மானாவாரியாக கேள்வி மேல் கேள்வி கேட்டு குடைச்சல் கொடுத்துவிட்டனர். பஞ்சாயத்துன்னு வந்தா அப்படித்தான் கேட்போம்னு வேற ஊரு பெருசுகள் கெத்தா சொல்றாங்க. கடைசியில் ஆனந்திக்கு தெரியாம எப்படி கர்ப்பம் வந்துருக்கும்?
அதுக்குக் காரணமானவன் யாருன்னு அவளே சொல்லணும். இல்லன்னா நாங்க சொல்றதுதான் தீர்ப்புன்னு பஞ்சாயத்துத் தலைவர் சுயம்பு சொல்ல, ஆனந்தியின் அப்பா அழகேசனும், அம்மாவும் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர். ஆனந்தியோ கடைசி வரை இந்த நிலைக்கு யாரு காரணம்னு தெரியல. நான் கம்பெனியோட சில்வர் ஜூப்ளி பங்ஷனுக்குப் போனேன்.
அப்போ மயங்கி விழுந்தேன். அதுக்கப்புறம் நடந்தது என்னன்னு தெரியல என்கிறாள். முதலில் அன்புதான் காரணம் என சுயம்பு பழி போட அதை மறுக்கிறாள் ஆனந்தி. அப்படின்னா மகேஷாகத்தான் இருக்கும். பணக்காரன்னதும் ஆனந்தி வளைச்சிப் போடலாம்னு நினைச்சிருப்பா என சுயம்பு சொல்கிறான். ஆனந்தியோட அழகுக்கு நான் பொருத்தமானவன் இல்ல. என்னை விட வசதியானவன் கிடைப்பான்னு பார்த்துருப்பாரு அழகப்பன். ஆனந்தியோட கர்ப்பத்துக்கு பல பேரு காரணமான்னு சுயம்பு பேசுவது அனைவரையும் பதற வைக்கிறது. இதனால் கலங்கி நிற்கிறாள் ஆனந்தி.
கடைசியில் அழகப்பனும் தீர்ப்பு நீங்க என்ன சொல்றது? நானே இந்த நிலைக்குக் காரணமானவனைக் கண்டுபிடிச்சி என் பொண்ணு களங்கமில்லாதவள்னு நிரூபிக்கிறேன். அதுவரைக்கும் இந்த ஊரோடு ஒட்டும் இல்ல. உறவும் இல்லன்னு நாங்க குடும்பத்தோடு இருந்துக்கறோம்னு சொல்கிறான். அதே போல ஆனந்தியும் சூளுரைக்கிறாள்.
நல்ல தீர்ப்பு. நாங்க சொல்ல வேண்டியதை நீங்களே சொல்லிட்டீங்க என்கிறான் சுயம்பு. மித்ரா மறைத்து வைத்த பென்டிரைவை மகேஷ் பார்த்து விடுவாரா? மித்ரா தான் எல்லா பிரச்சனைக்கும் காரணம் என மகேஷ் கண்டுகொள்வாரா? ஆனந்தியிடம் போய் நான்தான் காரணம் என சரணடைவாரா? அவளைத் திருமணம் செய்து கொள்வாரா? அடுத்து என்னென்ன நடக்கும் என்பதை நாளைய எபிசோடில் பார்க்கலாம்.