Siragadikka Aasai: என்ன இன்னைக்கு விஜயாவுக்கு ஓவர் அடியா இருக்கே... கிருஷால் திணறும் ரோகிணி
Siragadikka aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.
விஜயா அமைதியாக உட்கார்ந்து இருக்க முத்து கிரிஷை அவங்க பாட்டியை பார்க்க அழைச்சிட்டு போகணும் எனக் கூற விஜயா இப்போ இதுதான் இப்போ முக்கியமா என்கிறார். ஒருகட்டத்தில் விஜயா கடுப்பாகி கிரிஷை திட்ட எல்லார் முகமும் மாறிவிடுகிறது.
மனோஜும் எதுக்கு இந்த பையனை இங்கு வச்சிக்கிட்டு எனக் கேட்க முத்து நீ பேசாத என வாயை அடக்குகிறார். யார் பெத்த பிள்ளையோ இவன் வந்த பின்னர் தான் இங்க கெட்டது நடக்குது என விஜயா பேச அவன் காரணமில்லை. ஜாக்கிரதைய இருந்தப்ப கேட்கவே இல்லை என்கிறார் முத்து.
ரோகிணி இவங்க கூப்பிட்டு போனா திரும்பி கூட்டிட்டு வந்துடுவாங்க. நீ இவனை அவங்க சாக கிடக்கிற பாட்டிக்கிட்ட கூட்டிக்கிட்டு போ என்கிறார். கிரிஷ் அப்போ பாட்டி செத்துடுவாங்களா எனக் கேட்க ரோகிணியும் அதிர்ச்சி அடைகிறார்.
ஒருக்கட்டத்தில் முத்து கோபப்படுகிறார். மனோஜ் உன்னால அம்மா பிரச்னையை சரி செய்ய முடியலைனா சொல்லு நான் செய்றேன் என்கிறார். ரோகிணி நான் வேணும் என்றால் கிரிஷை ஹாஸ்பிட்டல் அழைச்சிட்டு போறேன். நீங்க ஆண்ட்டி விஷயத்தை பாருங்க என்கிறார்.
மற்றவர்களுக்கும் அதுவே சரியெனப்பட ரோகிணி கிரிஷை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு செல்கிறார். முத்து ரதியின் காதலன் தீபனை நம்ம பக்கம் அழைச்சிட்டு வர வேண்டும். அப்போதுதான் இந்த கல்யாணத்தை நடத்த முடியும் என்கிறார். ரோகிணி கிரிஷை அழைத்து கொண்டு மருத்துவமனைக்கு சென்று வீட்டில் நடந்த விஷயங்களை கூறுகிறார்.
நான் சொல்வதை கேள். முதலில் உன் மாமியாரை உன் பக்கம் மாத்து. அப்போ தான் அவர்கள் நீ என்ன சொன்னாலும் செய்வாங்க. உன்னை பாராட்டுவாங்க என்கிறார். கிரிஷை கேட்க எனக்கு அங்க இருக்க பிடிக்குது பாட்டி. நிறைய பேரு இருக்காங்க என சந்தோஷப்படுகிறார்.
பின்னர் வாசலில் நிறுத்தி விட்டு கிரிஷ் விஷயத்தை சொல்ல சொல்ல மனோஜ் என்ன செய்வாருனே தெரியாது என்கிறார். கற்பனையில் வாழ்றதை விட நிஜத்துல என்ன செய்றதுனு முடிவெடு என்கிறார். அப்போ டாக்டர் வந்து அவங்க முதுகு தண்டில் அடிப்பட்டு இருக்கு. இப்போ அசைஞ்சாலே பெரிய பக்கவிளைவு வரும்.
நீங்க இன்னும் ஒரு வாரம் இங்க ரெஸ்ட் எடுக்கணும் என்கிறார். வீட்டில் முத்து கிரிஷை ரெடி செய்ய ஸ்ருதி சாக்லேட் கொடுக்க இதை ரோகிணி பார்த்து கொண்டு நிற்கிறார். பின்னர் எல்லாருக்கும் பாய் சொல்ல முத்து அவரை அழைத்து கொண்டு சென்றுவிடுகிறார்.
சிந்தாமணி பார்வதியுடன் வந்து உங்க கிளாஸில் இப்படி நடந்து இருக்க என் வீட்டில் வந்து தங்கிக்கோங்க என அழைக்க ரவி ஏன் அவங்களுக்கு வீடு இல்லையா என்கிறார். சிந்தாமணி மீனாவை சீண்ட ஸ்ருதி சப்போர்ட்டுக்கு வருகிறார். இப்போதானே சிலரை அடக்க மாஸ்டரால் ஏன் முடியலை என தெரிவதாக சொல்லிவிட்டு செல்கிறார்.
பின்னர் விஜயா கடுப்பில் இருக்க அங்கு ஸ்ருதியின் அம்மாவின் வந்து உங்க கிளாஸில் எதோ ரெண்டு பேரு தப்பு செஞ்சிட்டாங்களாமே எனக் கேட்க விஜயா என்ன செய்வது எனத் தெரியாமல் திணறிக்கொண்டு இருக்கிறார்.