என்னய்யா மாட்ட வைக்குறீங்க? மீனாவின் திட்டத்தால் வலையில் சிக்கிய சிந்தாமணி…
Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை எபிசோட்டில் இன்று நடக்க இருக்கும் எபிசோட்டின் தொகுப்புகள்.
மீனாவிற்கு டெக்கரேஷன் செய்ய உதவிய தோழிகள் வந்து பணம் இருக்குமா என கேட்கின்றனர். நீ எப்போதும் கேட்பதற்கு முன்னாலே தந்திடுவ. ஆனால் இன்னைக்கு என்னோட பொண்ணுக்கு உடம்பு சரி இல்லை என சொல்கிறார். இன்னும் மண்டபத்திலிருந்து காசு வரவில்லை என்கிறார் மீனா.
சரி என அவர்கள் கிளம்ப போக அவர்களை நிறுத்தி மீனா தன்னுடைய அம்மாவிடம் வந்து காசு வாங்கி அவர்களிடம் கொடுக்கிறார். இந்திரா காசு விஷயம் என்னாச்சு என கேட்க இரண்டு முறை அவர்களிடம் பேசி விட்டேன். ஆனால் சரிப்பட்டு வர மாட்டிக்கிறாங்க என வருத்தப்பட்டு கூறுகிறார்.
சீதா இப்போ என்ன பண்ணலாம் என்கிறார். வைரத்தை வைரத்தால் தான் அறுக்கணும் என்பது போல அவர்கள் திட்டத்தை அதுபோலவே முறியடிக்க பிளான் ஒன்று இருப்பதாக கூறுகிறார். உடனே சீதாவிடம் போனை கொடுத்து சிந்தாமணிக்கு கால் செய்து திருமண ஆர்டர் இருப்பதாக கூறி அதை நீங்கள் தான் பண்ணி தர வேண்டும் என பேச சொல்கிறார்.
சீதா பேச அவர்களும் மேனேஜரை கவனிக்கவும். அவருக்கு ஒரு அமௌன்ட் கொடுக்கணும் என சொல்லி விடுகின்றனர். பின்னர் சீதாவை அழைத்துக் கொண்டு ஸ்ருதியை பார்த்து அவரிடம் நடந்த விஷயங்களை கூறுகிறார். ஸ்ருதி கோபமாகி போலீசில் பிடித்துக் கொடுப்போம் என்கிறார்.
மீனா எனக்கு தெரிந்த போலீஸ் அதிகாரியிடமும் பேசி விட்டேன். நான் கையெழுத்து போட்டுக் கொடுத்ததால் கேஸ் போட்டாலும் அவர்கள் பக்கம் தான் ஜெயிக்கும் என கூறிவிட்டதாக சொல்கிறார். ஆனால் தற்போது தன்னிடம் ஒரு திட்டம் இருப்பதாக கூறி சிந்தாமணி குரலை ஸ்ருதியைக் கேட்க வைக்கிறார்.
இவர்கள் குரல் போல் நீங்கள் மேனேஜரிடம் பேசி பணம் விஷயம் குறித்து கேட்க சொல்கிறார். ஸ்ருதியும் சிந்தாமணி போல மேனேஜரிடம் மீனாவுக்கு காசு கொடுத்துட்டியா என கேட்க, கஸ்டமர் காசை கொடுத்து விட்டதாகவும் நீங்க சொன்னதால்தான் கொடுக்காமல் இருப்பதாகவும் கூறுகிறார்.
உங்களுக்கு கொடுக்க வேண்டிய கமிஷன் காசை எடுத்துக் கொண்டு வரவா என மேனேஜர் கேட்க பொன்னியம்மன் கோயிலுக்கு எடுத்து வரும்படி சொல்ல வைக்கிறார். சீதாவிடம் போனை கொடுத்து கல்யாண வீட்டார் கோயிலில் பேச வேண்டும் எனக் கூறி சிந்தாமணியையும் வர வைக்கிறார்.
மீனா வெளியில் சென்று ஒருவரிடம் பேசிவிட்டு அவரையும் கோவிலுக்கு வர சொல்கிறார். ஸ்ருதி உங்கள் ஐடியா நல்லா இருக்கு என்ன உதவி வேண்டுமென்றாலும் என்னிடம் கேட்கலாம் என சொல்லி அனுப்புகிறார். மீனா மற்றும் சீதா இருவரும் கோவிலில் காத்துக் கொண்டிருக்க சிந்தாமணி மற்றும் மேனேஜர் இருவரும் வருகின்றனர். மேனேஜர் மற்றும் சிந்தாமணி இருவரும் மீனாவை சிக்க வைத்தது குறித்து பேசிக்கொள்கின்றனர். எப்படி இரண்டு பேரும் கோயில் வந்தது குறித்து யோசிக்க மீனா, சீதாவுடன் வருகிறார்.
அப்பொழுது மீனா கால் பண்ணி வரச் சொன்ன ஓனர் வந்து உண்மையை தெரிந்து கொள்கிறார். அந்த மேனேஜரை அடி வெளுத்து அவருக்கு எச்சரிக்கை விடுக்க சிந்தாமணியை கோபத்தால் திட்டி தீர்க்கிறார். இதனுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.