அவுத்துப் போட்டு நின்னா வாய்ப்பு கிடைக்குமா?!.. ஃபேன்ஸ் கமெண்ட்டால் பொங்கிய ஷிவாங்கி!...

By :  Akhilan
Update:2025-03-14 10:36 IST

Sivaangi: சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலம் அடைந்த ஷிவாங்கி சமீபத்தில் அளித்திருக்கும் பேட்டி வைரலாகி வருகிறது.

மலையாளம் மற்றும் தமிழ் திரையுலகத்தில் பிரபல பின்னணி பாடகியாக இருந்த பின்னி கிருஷ்ணகுமாரின் மகள்தான் ஷிவாங்கி. இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அதைத்தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்துகொண்டு ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார். அதைத் தொடர்ந்து அதே நிகழ்ச்சியில் குக்காக மாறி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். 

 

கீச்சு குரலுக்கு சொந்தக்காரர் ஷிவாங்கி சமீபத்தில் கொடுத்து வரும் பேட்டி இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. தன்னுடைய காதல் தோல்வியில் முடிந்த கதையையும் தன்னிடம் இருந்த பிரச்சினைகளையும் தற்போது வெளிப்படையாக அவர் பேசி வருகிறது வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் ஆரம்பத்தில் பராம்பரிய உடையில் வலம் வந்த ஷிவாங்கி சமீபத்திய நாட்களாக அல்ட்ரா மார்டனாக உடைகளை உடுத்தி வருகிறார். இது குறித்து அவர் தன்னுடைய சமீபத்திய பேட்டியில் பேசி இருக்கும் விஷயம் தற்போதைய ட்ரெண்டிங் டாப்பிக்காக மாறி இருக்கிறது.

அவர் கூறுகையில், முன்னாடியெல்லாம் குட்டி டிரெஸ் போட யோசிப்பேன். இப்போ அதை போடுவதில் எந்த கவலையும் இல்லை. அந்த புகைப்படத்தினை சோஷியல் மீடியாவில் போடும் போது நான் சினிமா வாய்ப்புக்காக அவுத்து போட்டு இருப்பதாக சிலர் கமெண்ட் செய்திருந்தார்கள்.

அவர்களிடம் சென்று ‘எனக்கு பிடித்திருக்கிறது நான் போடுகிறேன்’ என்று கூறவா முடியும். சிலருக்கு பொண்ணுங்க காட்டி போட்டால் வியூஸ்க்காக செய்வதாக நினைப்பார்கள். ஆனால் பொண்ணுங்க அவங்க ஆசைக்காக செய்வார்கள் ஏன் என நினைக்க மாட்டார்கள்.

முதலில் எனக்கு அந்த உடை போடும் அளவு உடம்பு இல்லை. எடை குறைச்சு அது பிடித்து இருந்ததால் போட்டேன். குட்டி உடை போடுவதால் நான் மாறிவிட்டேன் என்று அர்த்தம் இல்லை. ஒரு ஆசைக்குதான். கீழே போடும் உடையை எப்போதுமே நான் லூசாக தான் போடுவேன். டைட்டா போட்டால் குண்டா தெரிவேன்.

ஆனால் உடல் எடை குறைத்து அதை போட்ட போது ஒல்லியாக தெரிந்தால் நான் ஜெயிச்சு விட்டேன் என்றுதானே அர்த்தம். யாருக்கும் அவுத்து போட ஆசை இல்லை. அப்படி இருப்பதால் எந்த சினிமா வாய்ப்பும் கிடைக்காது. சும்மா காட்டுவதால் யாரும் சினிமாவெல்லாம் தர மாட்டார்கள்.

ஜிம்மில் போடும் உடைக்கு கூட கமெண்ட் செய்பவர்களுக்கு வியர்வை படாமல் அவர்கள் உடலை பார்த்து மேலும் தன்னம்பிக்கையுடன் செய்வதற்காக மட்டுமே இதை போடுகிறார்கள் என்பதையும் சிலர் புரிந்து கொள்ள வேண்டும் என பொறிந்து தள்ளி இருக்கிறார்.

Tags:    

Similar News