Siragadikka Aasai: சிக்கலில் மாட்டிய ரோகிணி… கணவருக்காக பொங்கி எழுந்த மீனா…

By :  AKHILAN
Published On 2025-05-16 10:15 IST   |   Updated On 2025-05-16 10:15:00 IST

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.

அருண் வீட்டு முன்னர் முத்துவின் நண்பர்கள் கத்திக்கொண்டு இருக்க அப்போ வரும் அவர் உடனே அதை வீடியோவாக எடுத்து கொண்டு இருக்கிறார். பின்னர் சத்யா வர அங்கிருந்த அவர் நண்பர் இதை பார்த்து அவரிடம் சொல்லுகிறார். உடனே சத்யா மீனாவுக்கு விஷயத்தை சொல்லி நான் மாமாவை அழைச்சிட்டு வரவா என்கிறார்.

ஆனால் மீனா நீ போய் உன் வேலையை பார். நான் அவரை பாத்துக்கிறேன் எனக் கூறிவிட சத்யாவும் கிளம்பிவிடுகிறார். முத்து வீட்டிற்கு வர நீங்க ஏன் குடிக்காத மாதிரி நடிக்கிறீங்க. நீங்க குடிச்சது எனக்கு தெரியும் எனக் கூறுகிறார்.

நான் மாமாக்கிட்ட சொல்றேன் எனக் கூற அவரை தடுக்கிறார் முத்து. அப்பா ஏற்கனவே கஷ்டத்துல இருக்காரு. இப்போ இதை சொன்னா இன்னும் வருத்தப்படுவாரு எனக் கூறுகிறார். அப்புறம் எதுக்கு குடிச்சீங்க எனக் கேட்க பசங்க எதோ போலீஸ் வீட்டுக்கு அழைச்சிட்டு போறேனு சொன்னாங்க. கடைசியில் பாத்தா அந்த கான்ஸ்டபிள் வீடு என்கிறார்.

ஏற்கனவே அந்த இன்ஸ்பெக்டர் நமக்காக பேசுறேனு சொன்னாரு. இப்போ நீங்க பண்ணி வச்சி இருக்கதால என்ன ஆக போகுதோ. ஏற்கனவே அந்த அருணுக்கு உங்க மேல செம கோவம் இருந்துச்சு. இப்போ இன்னும் அதிகம் ஆகி இருக்கும் என்கிறார். 

 

சரியென முத்துவை சாப்பிட அழைக்க எனக்கு வேலை இல்ல. நான் ஏன் தண்டச்சோறு சாப்பிடணும் என்கிறார். பிரச்னை வந்தா சமாளிக்கணும். குடிச்சிட்டா எதுவும் சரியாகாது எனக் கூறுகிறார். அவரை சாப்பாடு ஊட்டி மீனா படுக்க வைக்கிறார்.

காலையில் முத்து வீட்டை கூட்டிக்கொண்டு இருக்க அப்போது அண்ணாமலை, விஜயா வெளியில் வருகின்றனர். இதை பார்த்து சந்தோஷம் அடையும் விஜயா, அவரை நக்கலாக பேசுகிறார். அப்போ மீனாவும் சரியாக வந்து முத்துவிடம் இருந்து துடைப்பத்தை கேட்கிறார்.

முத்து தராமல் இருக்க விஜயா தொடர்ந்து பேசிக்கொண்டே போக வாயை மூடுங்க என கத்திவிட்டு முத்துவிடம் இருந்து துடைப்பத்தினை பிடிங்கி எறிகிறார். அது சரியாக விஜயா தலைவழியாக போக அவர் பயந்து உட்கார்ந்து விடுகிறார்.

மீனா, முத்து அழைத்து சென்று விட விஜயா இவ என்ன அசிங்கப்படுத்தி விட்டு போறா எனக் கூற நீ பேசுனதுக்கு அவ என்ன செஞ்சாலும் தகும் என்கிறார் அண்ணாமலை. முத்துவை அழைத்து வரும் மீனா எத்தனை பிரச்னை பாத்திருக்கோம். இதற்கு ஏன் இவ்வளோ உடைஞ்சி போறீங்க. எந்த பிரச்னையா இருந்தாலும் சமாளிப்போம் என்கிறார்.

அந்த நேரத்தில் மீனாவிற்கு இன்ஸ்பெக்டரின் மனைவி கால் செய்து வர சொல்கிறார். அவர் அங்கு செல்ல அண்ணாமலை முத்துவை அழைத்து அவருக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கிறார். சிட்டியை பார்க்க செல்கிறார் ரோகிணி.

அவர் திருட்டு நகையை ரோகிணியிடம் கொடுத்து எனக்கு தெரிஞ்ச ஒருத்தர் இதை என்னிடம் விற்று விட்டார். நானும் கம்மி விலைக்கு தான் வாங்கினேன். இப்போ எனக்கு ஒரு தேவை இருக்கு. இதை வச்சுக்கிட்டு நீங்க காசு தர முடியுமா என்கிறார் சிட்டி.

முதலில் தயங்கிய ரோகிணி தனக்கு இப்போது காசு இல்லை. கொஞ்சம் டைம் வேணும் என கேட்க, சிட்டியும் அப்ப சரி ஆனா கொஞ்சம் சீக்கிரமா ரெடி பண்ணுங்க எனக் கூறி விடுகிறார்.

Tags:    

Similar News