மகேஷின் காதல்.. ஆதிரையின் கோபம்.. அன்னத்தின் யோசனை… சன் டிவியின் டாப் 5 சீரியல் புரோமோக்கள்
சன் டிவியில் டிஆர்பி ஹிட் தொடர்களின் புரோமோ அப்டேட்டுகள்
Sun TV: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டிஆர்பியில் ஹிட்டு அடித்து வரும் டாப் 5 தொடர்களில் இன்று நடக்க இருக்கும் எபிசோடுகளின் ப்ரோமோ அப்டேட்கள் குறித்த தொகுப்புகள்.
கயல்
கயல் வீட்டிற்குள் முகமூடி அணிந்த இளைஞர் உள்ளே வர கோபத்தில் எழில் அடிக்க பாய்கிறார். சரவண வேலு தான் என அவர் முகத்தை காட்ட எழில் நீ தான் தெரிந்திருந்தால் அடித்து மூஞ்ச ஒடச்சிருப்பேன் என மனதிற்குள் பேசிக்கொள்கிறார்.
பெரியப்பாவை பார்க்க வரும் மூர்த்தி பாப்பாவின் பள்ளி கட்டணத்திற்காக வந்ததாக கூறுகிறார். இதனால் கோபமாகும் சுப்பிரமணி அவரை திட்டிக் கொண்டிருக்கிறார். சரவணன் வேலு அம்மாவிடம் பகையை மறந்து இருக்கலாம் என கூறிக் கொண்டிருக்கிறார். வேலுவோ அம்மா இல்லை உன்னுடைய மாமியார் என மனதிற்குள் பேசிக்கொள்கிறார்.
அன்னம்
சரவணன் பைக் வாங்கி வந்து கொண்டு வந்து நிறுத்த கார்த்திக் உனக்கு போன் பண்ணேன் சுவிட்ச் ஆஃப் என்று வந்ததாக கூறுகிறார். எப்போ பண்ண என கேட்க இப்பதான் என கூறுகிறார் கார்த்திக். இப்பதானே பண்ண பைக் எடுக்கும்போது பண்ணல இல்ல என சரவணன் கோபம் கொள்கிறார்.
அன்னத்தின் அப்பா, அவர் சித்தியிடம் குணா பெண் கேட்ட விஷயத்தை கூறுகிறார். கல்யாணம் செய்து அவளை மும்பை அனுப்பி விட்டால் நமக்கு வீடு வந்துவிடும் எனக் கூறிக்கொள்கிறார். அண்ணன் தன்னுடைய தங்கையிடம் அந்த குணா கிட்ட கொஞ்சம் கவனமா இருக்கணும் என்கிறார். அவரும் அதற்கு சம்மதம் தெரிவிக்கிறார்.
மருமகள்
ஆதிரையின் அப்பாவை எல்லோரும் பார்த்து வந்துவிட அவர் தங்கை ஆதிரையிடம் அம்மாவை பார்த்தவுடனே அப்பா டென்ஷன் ஆகிட்டாரு என கூறுகிறார். இதை மறைந்திருந்து கேட்கும் மனோகரி நான் பெற்றதே என்ன மாட்டி விட்டுடும் போல என புலம்பி கொண்டிருக்கிறார்.
ஆதிரை அப்பாவை ரூமில் சாத்திவிட்டு மனோகரிடம் அப்பாக்கு எதுவும் ஆகியிருந்தால் என கேட்க வர ஆமாம் நான் அப்போது கூட வீட்டின் பத்திரத்தை தரமாட்டேன் எனக் கூற ஆதிரை கோபத்தில் கட்டுகிறார்.
சிங்கப் பெண்ணே
மகேஷ் அன்புவிடம் கடந்த முறை நான் கொடுத்ததையே அழகன் கொடுத்ததாக ஆனந்தி நினைத்துக் கொண்டிருக்கிறாள். இந்த முறை அப்படி எதுவும் நடந்து விடக்கூடாது என்கிறார். ஆனந்தி வீட்டில் அவருடைய அம்மா சம்மந்தி வீட்டினரிடம் எங்க நிலைமை நெனச்சுக்கிட்டு அப்புறம் உங்க முடிவை சொல்லுங்க என்கிறார்.
ஆனந்தி அன்புவிடம் எனக்கு நீங்க எவ்வளவோ உதவி செய்றீங்க. ஆனால் என்னுடைய நேரம் எதுவுமே நல்லதாக நடக்க மாட்டேங்குது என புலம்பிக் கொண்டிருக்கிறார். அவரை சமாதானம் செய்யும் அன்பு அவருக்கு சாப்பாடு ஊட்டி விடுகிறார். அந்த நேரத்தில் மகேஷ் அங்கு வந்து விடுகிறார்.
மூன்று முடிச்சு
விஜியுடன் கோயிலுக்கு கிளம்புகிறார் நந்தினி. இரு தம்பதிகளும் மாலையுடன் நின்று இருக்க விஜி ஏன் நந்தினி அண்ணனோட போனா என்ன என கேட்கிறார். அதற்கு நந்தினி இவர் கூட போய் இறங்கினால் தேவையில்லாத சண்ட தான் வரும் என்கிறார்.
வீட்டிற்கு வந்த நந்தினி மாதவியிடம் இன்னைக்கு விஜி அக்காவுடன் கல்யாண நாள் அதற்காக கோயிலுக்கு சென்று இருந்ததாக கூறுகிறார். ஆனால் மாதவி இன்னைக்கு அவங்க கல்யாண நாள் இல்லை என கூறி விடுகிறார். உடனே நந்தினி விஜிக்கு கால் செய்து கேட்க, அவரும் இன்னைக்கு கல்யாண நாள் இல்லை என பேசிக் கொண்டிருக்கிறார்.