TRP: கோட்டை விட்ட விஜய் டிவி… ஆதிக்கம் செலுத்தும் சன் டிவி… இந்த வார நம்பர் 1 இடம் யாருக்கு?

By :  AKHILAN
Update: 2025-05-16 11:31 GMT

TRP: தமிழ் சீரியல் ரசிகர்களிடையே சின்னத்திரை சீரியல்களுக்கான டிஆர்பி ரேட்டிங் பட்டியல் எப்போதும் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். அந்த வகையில், இந்த வாரத்துக்கான டிஆர்பி தரவரிசை தற்போது வெளியாகியுள்ளது.

பல ஆண்டுகளாகவே சன் டிவியுடன் விஜய் டிவி மோதிக்கொண்டு இருக்கிறது. ஆனால் கடந்த சில மாதங்களாக டாப் 5 இடங்களை சன் டிவி தக்க வைத்து கொண்டு வந்தது. அந்த வகையில் இந்த முறை சன் டிவியின் ‘சிங்கப்பெண்ணே’ சீரியல் 8.72 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து முன்னிலை பெற்றிருக்கிறது.  

 

பெரும்பாலும் காதல், எதிர்பாரா திருப்பங்கள் என பக்குவமான கதைக்களத்தால் ‘சிங்கப்பெண்ணே’ தொடர்ந்து ரசிகர்களின் மனதை கவர்ந்து வருகிறது. இதேவேளை, டிஆர்பி ரேட்டிங்கில் தொடர்ந்து டாப் 5-க்குள் நிலையான இடம் பிடித்துள்ளது ‘மூன்று முடிச்சு’ மற்றும் ‘கயல்’ தொடர்கள்.

குறிப்பாக, இந்த இரண்டு சீரியல்களும் பெண்கள் மத்தியில் முக்கிய இடத்தைப் பெற்றிருப்பதால் பல வாரங்களாகவே இந்த இடத்தில் இருந்து நகராமல் இருப்பது குறிப்பிடத்தக்கது. 4வது இடத்தில், இன்னும் ஒரு சன் டிவி தொடர் ‘மருமகள்’ இடம்பிடித்திருக்கிறது.

பல வாரங்களாகவே அங்கு இங்கு அலைந்து கொண்டு இருக்கிறது விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை. எதிர்பாராதவிதமாக, கடந்த வாரம் 4வது இடத்தில் இருந்த இந்த சீரியல், இந்த வாரம் ஒரு இடம் சரிந்து 5வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

டிஆர்பி ரேட்டிங் பட்டியலில் தொடர்ந்து ஆறாவது இடத்தில்‘எதிர்நீச்சல் தொடர்கிறது’ (6.96), ஏழாவது இடத்தில் ‘அய்யனார் துணை’ (6.81), எட்டாவது இடத்தில் ‘அன்னம்’ (6.76), ஒன்பதாவது இடத்தில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ (6.67) ஆகியவை இடம் பெற்றுள்ளது.  

 

பத்தாவது இடத்தில் ஜீ தமிழிலில் இருந்து ‘கார்த்திகை தீபம்’ மட்டும் தான் டாப் 10 பட்டியலில் (5.78) இடம்பிடித்திருக்கிறது. இப்படி சன் டிவி தொடர்கள் டிஆர்பி ரேட்டிங்கில் தொடர்ந்து ஆட்சி செய்து வருகிறன. குடும்பக்கதை, நெஞ்சை நெகிழச் செய்யும் கதாப்பாத்திரங்கள் மற்றும் உணர்வுப்பூர்வமான ட்விஸ்ட்கள், இத்தொடர்களுக்கு ரசிகர்கள் அதிகரிக்க காரணமாகி விட்டது.

Tags:    

Similar News