எங்கப்பா வேற கல்யாணம் பண்ணிக்கிட்டாரு!.. எங்க அம்மாவை ராஜகுமாரி மாதிரி பார்த்துப்பேன் - அன்ஷிதா!
நடிகை அன்ஷிதா அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் தன் தாயுடன் கலந்துக்கொண்டு அவர்களது வாழ்க்கையில் நடந்தவற்றை வெளிப்படையாக பேசியுள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.;
பிக் பாஸ் சீசன் 8ல் போட்டியாளராக பங்கேற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்த நடிகை அன்ஷிதா அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் தன் தாயுடன் கலந்துக்கொண்டு அவர்களது வாழ்க்கையில் நடந்தவற்றை வெளிப்படையாக பேசியுள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "செல்லம்மா" தொடரின் மூலம் அன்ஷிதா அறிமுகமானார். இந்தத் தொடரில் அவரது நடிப்பு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதை தொடர்ந்து கபானி, கூடேவிடே போன்ற மலையாள சீரியல்களிலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், பிக் பாஸ் தமிழ் சீசன் 8 இல் பங்கேற்று 84 நாட்கள் வரை விளையாடி ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.
பேட்டி ஒன்றில் அன்ஷிதா, தன் தாயிற்கு 13 வயதிலேயே திருமணமானது, 15 வயதில் அண்ணன், 17 வயதில் நான் பிறந்தேன், 20 வயதில் விவாகரத்தும் ஆனது. என்னால் அம்மா வந்து இங்க உட்காரல அவங்கலால தான் நான் இங்க வந்து உட்கார்ந்திருக்கேன். அம்மா 8ம் வகுப்பு வரை படித்ததால் இங்கே வேலை இல்லை அதனால் எங்களை என் பாட்டியிடம் விட்டுவிட்டு வெளிநாட்டிற்கு சென்று வேலை பார்த்தார். ஒரு வருடத்திற்கு ஒரு முறை வந்து எங்களையும் பார்ப்பார்.
சுமார் 9 வருடங்களாக் அவர் வெளிநாட்டில் வேலை பார்த்த பின் எனக்கு 18 வயதாகியதும் சினிமாவில் நடிக்க தொடங்கி குடும்பத்தின் பொறுப்பை நான் எடுத்துக்கொண்டேன். எல்லாரையும் நம்பி ஏமாந்திட்டேன். என்னுடைய அப்பாவும் ரொம்ப நல்லவர் தான் என் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் இருக்கிற கருத்து வேறுபாடால் தான் பிரிந்துள்ளனர். ஆனால் அப்பாவுக்கு இன்னொரு கல்யாணமாகி இரண்டு குழந்தைகள் இருக்காங்க. இத்தனை வருடங்கள் எங்களை தனியாக வளர்த்தும் அப்பாவை எங்கேயும் விட்டுகொடுக்க மாட்டாங்க என் அம்மா.
ஷூட்டிங் போயிட்டு வரும் போது ஒவ்வோரு டைம்ல, வேற வண்டில வரும் போது எல்லாரும் ஒருமாதிரி பேசுவாங்க. பல கெட்ட நண்பர்களை நம்பி அவங்க கூட ட்ராவல் பண்றதுனால தான் என்னுடன் நெகடிவிட்டியும் கூடவே வருது. இப்போ நான் நல்லா இருக்கனும்னு நினைக்கிறவங்க கூட தான் பழகுறேன் அவங்க தான் என் உலகம். இப்போ என் அம்மாவா நான் ராஜகுமாரி மாதிரி பார்த்துகுறேன் என்றார்.