மனோஜின் ஆட்டம் முடிந்தது… மாட்டிக்கொண்ட மயில் அப்பா… ஓவரா போறீங்க கோபி…
விஜய் தொலைக்காட்சியின் சீரியல்களின் எபிசோட் தொகுப்புகள்
Vijay serials: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் சிறகடிக்க ஆசை சீரியல்களில் இன்று நடக்க இருக்கும் எபிசோடுகளின் தொகுப்பு.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2
மயில் அப்பா மாட்டிக்கொள்ள வெற்றிவேல் மற்றும் சக்திவேல் அவரை வீட்டின் தூணில் கட்டி வைக்கின்றனர். அப்பத்தா இது வேண்டாம் என எவ்வளவு கூறியும் காலையில் இவரை போலீசில் ஒப்படைத்து விடலாம் எனக் கூறி தூணில் அவரை விட்டுவிட்டு செல்கின்றனர். குமார் காவலுக்கு இருக்கிறார்.
தங்கமயில் தன்னுடைய அம்மாவிற்கு கால் செய்து அப்பா குறித்து விசாரிக்க தானும் அவரை தேடுவதாகவும் அவர் வந்தவுடன் கூப்பிட சொல்வதாகவும் கூறி அவருக்கு சமாதானம் சொல்கிறார். ரோட்டில் அவர் தேடிக் கொண்டிருக்க வழியில் கதிரை பார்த்து விடுகிறார். அவர் காரில் அழைத்து வந்து தேடிக் கொண்டிருக்கின்றனர். வீட்டிற்கு வரும் தூணில் இருக்கும் மயிலின் அப்பாவை பார்த்து விடுகிறார்.
பாக்கியலட்சுமி
இனியாவின் டான்ஸ் நிகழ்ச்சி நடைபெற முதல் ஆளாக அவர் தேர்வு செய்யப்படுகிறார். இதனால் எல்லோரும் சந்தோஷம் அடைகின்றனர். அந்த நேரத்தில் ராதிகா அமைதியாக அமர்ந்து இருக்க அவருடைய அம்மா அண்ணன் கால் செய்ததாகவும் டிவியில் மாப்பிள்ளை தெரிவதாகவும் கூறி டிவியை ஆன் செய்கிறார்.
அந்த நேரத்தில் இனியா கோபி மற்றும் பாக்கியாவை மேடையில் நிற்க வைத்து தன்னுடைய அப்பா மற்றும் அம்மா என பெருமையாக மற்றவர்களுக்கு அறிமுகம் செய்கிறார். இதை பார்த்து ராதிகா வருத்தமடைகிறார். அந்த நேரத்தில் மயூ வர எங்கு செல்லலாம் என அவரிடம் பேசிக் கொண்டிருக்கிறார்.
எனக்கு எங்கும் செல்ல வேண்டாம் மம்மி. நீங்க எப்பவுமே சந்தோஷமா இருந்தா போதும் என கூறுகிறார். இதில் கண்கலங்கும் ராதிகா நான் எடுக்கும் முடிவு எல்லாமே தப்பா தான் இருக்கு. அது உன் விஷயம் வரையும் பாதிச்சிருக்கு. இனிமே நான் உன்னை எப்பயும் சந்தோஷமா தான் பார்த்துப்பேன் என கூறிக் கொண்டிருக்கிறார்.
அந்த நேரத்தில் வீட்டில் வரும் பாக்கியா மயூவிற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிவிட்டு கிப்ட் கொடுத்துவிட்டு செல்கிறார். அவரை நிற்க கூறும் ராதிகா கோபியின் மனைவியாக வாழ ஆசைப்படுகிறீர்களா எனக் கேட்கிறார். அப்படி ஒரு ஆசை எனக்கு வரவே வராது என பாக்கியா கூறிவிடுகிறார்.
பின்னர் எதற்கு மேடையில் நின்றீர்கள் எனக் கேட்க நான் இனியாவின் அம்மாவாக தான் நின்றேன் என கூறுகிறார். ஈஸ்வரி, செழியன் மற்றும் இனியா கோபியுடன் சேர்ந்து டின்னர் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வருகின்றனர். கோபி பாக்யாவிற்கு சோலே பட்டூரா வாங்கி கொண்டு வர அதை அவர் வாங்காமல் சென்று விடுகிறார்.
மயூவின் பிறந்தநாளை ஞாபகம் வந்து கோபி கிளம்ப பார்க்க ஈஸ்வரி மற்றும் செழியன் பேசிய அவர் மனசை மாற்றி ரூமில் படுக்க சொல்லி விடுகின்றனர். இதை பார்த்து செல்வி மற்றும் ஜெனி கடுப்பில் பேச பாக்கியா தன்னைவிட ராதிகா ரொம்ப அன்லக்கி என பேசிக் கொண்டிருக்கிறார்.
சிறகடிக்க ஆசை
முத்து ஜீவாவை பிக்கப் செய்து காரில் அழைத்துக் கொண்டு வருகிறார். இன்னும் எத்தனை நாட்களில் இருப்பீங்க என பேசிக்கொண்டு இருக்க ஒன்று அல்லது இரண்டு வாரத்தில் கிளம்பி விடுவேன் என கூறுகிறார். கடந்த முறையை இதற்காக தான் வந்தேன் ஆனால் இரண்டு பிராடுகள் என்னிடமிருந்து 30 லட்சத்தை பிடுங்கி விட்டதாக கூறுகிறார்.
மறுபக்கம் விஜயா மற்றும் அண்ணாமலை இருவரும் வாக்கிங் சென்று கொண்டிருக்கின்றனர். வழியில் மனோஜை தூக்கி வைத்து அவர் பேசிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் ஒரு இளநீர் கடைக்காரரை கடந்து செல்லும் போது மனோஜ் வீடு குறித்து பேசிவிட்டு செல்கின்றனர். அவர்கள் சென்றதும் அவர் ஒருவருக்கு கால் செய்து பேசுகிறார்.
ரெஜிஸ்டர் ஆபீஸ் வரும் ஜீவாவை முத்து அழைத்துக் கொண்டு வருகிறார். அந்த நேரத்தில் மனோஜ் மற்றும் ரோகிணி இருவரும் வர என்னுடைய வீட்டை நான் எனக்கு சொந்தமாக்கிக் கொள்வேன் என சபதம் போடுகிறார் மனோஜ். நான் மறந்திடுவேன் எனக்கு மெசேஜ் அனுப்பு என கூறிவிட்டு செல்கிறார் முத்து.
உள்ளே மனோஜ் பேசிக் கொண்டிருக்க அவரைப் பார்த்த ஜீவா கடுப்பில் காரில் ஏறி சென்று விடுகிறார். வீட்டில் முத்து இறக்கிவிட அவருக்கும், மீனாவிற்கும் கண்ணாடி ஒன்றை பரிசாக கொடுக்கிறார் ஜீவா. மனோஜ் வீட்டில் பேசிக் கொண்டிருக்க அப்பொழுது ஒரு கார் வந்து நிற்கிறது.
பெயர் பலகை செய்து கொண்டு வந்த ஆள் என மனோஜ் பேச நான் தான் இந்த வீட்டின் ஓனர் என்று அவர் கூறுகிறார். இதில் எல்லோரும் அதிர்ச்சி அடைய மனோஜ் லூசு மாதிரி பேசாதீங்க என கூறிவிட்டு வீட்டை விட்ட ஆளுக்கு கால் செய்கிறார். அவர் போன் சுவிட்ச் ஆப்பில் இருக்க ஏமாற்றிவிட்டு பின்னர் எப்படி ஆன் செய்து வைத்திருப்பான் என ஓனர் சொல்கிறார்.
Also Read: காதுல ரத்தம் வருது.. வேஸ்ட் லக்கேஜ்.. விடுதலை 2வை பங்கம் செய்த ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்!